என் மலர்
நீங்கள் தேடியது "Mayan"
- நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன்.
- படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன.
திரைப்பட துறையில் யாரும் எதிர்பாராமல் வெற்றி பெற்ற படங்கள் ஏராளம் உண்டு. அத்தகைய படங்கள் பெரும்பாலும் நம்பிக்கை என்ற ஒற்றை அடிப்படையில் தான் உருவாக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து சிறப்பான கதை மற்றும் தொழில்நுட்ப குழுவின் நேர்த்தியான படைப்பு தான் அதை வெற்றி படமாக மாற்றும். இந்த வரிசையில் "மாயன்" திரைப்படம் நிச்சயம் இணையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேரடியாக ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்ட முதல் இந்திய திரைப்படம் மாயன். இந்த படம் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் மொழியிலும் வெளியாகவுள்ளது. ஃபேண்டஸி, திரில்லர் மற்றும் வரலாறு என மூன்றுவித ஜானரில் நகரும் வகையில், இந்த படத்தின் கதை எழுதப்பட்டு இருக்கிறது. இவை அனைத்தும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன.
இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்டதிலேயே அதிக கிராஃபிக்ஸ் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் திரைப்படமாக "மாயன்" இருக்கிறது. இந்த படத்தின் 50 சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டு உள்ளன. இதற்காக டிஜிட்டல் புரொடக்ஷன் செய்யப்பட்டது.
ஜெ.ராஜேஷ் கன்னா எழுதி, இயக்கி இருக்கும் "மாயன்" படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளார். இந்த படத்தில் வினோத் மோகன் மற்றும் பிந்து மாதவி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆங்கில பதிப்பில் பிரியங்கா மோகன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இவர்கள் தவிர பியா பாஜ்பாய், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, கே.கே. மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கே. அருண் பிரசாத், படத்தொகுப்பு பணிகளை எம்.ஆர். ராஜேஷ் மேற்கொண்டுள்ளனர். கலை இயக்க பணிகளை ஏ. வனராஜ் மேற்கொண்டுள்ளார்.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மாயன்’
- தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில், உருவாகியுள்ளது ‘மாயன்’
ராஜேஷ் கண்ணா இயக்கத்தில் வினோத் மோகன், பிந்துமாதவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'மாயன்'
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில், 'மாயன்' என்ற பிரமாண்டமான திகில் படம் உருவாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் நடித்த வினோத் கதாநாயகனாக நடிக்க, பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
ஜான் விஜய், தினா, கஞ்சா கருப்பு, ஆடுகளம் நரேன், கே.கே.மேனன் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார், ராஜேஷ் கண்ணா. பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது.
படத்தை பற்றி இயக்குனர் ராஜேஷ் கண்ணா கூறியதாவது: ''மாயன் என்றால் காலபைரவனின் பிள்ளை என்று அர்த்தம். உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஆக்குபவர்களும், அழிப்பவர்களும் மாயன்களே. அப்பேர்பட்ட மாயன்களுக்கும், நம் மூதாதையர்களுக்கும் புராண காலத்தில் ஒரு உறவு இருந்தது. இதுவே மாயன் படத்தின் கதைக்கரும் ஆகும் .
இந்நிலையில் படத்தின் டிரெயிலர் தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இது ஒரு நிகழ் காலம் மற்றும் பீர்யட் காலக்கட்டத்தில் நடக்கக்கூடிய கதைக்களமாக அமைந்துள்ளது. திரைப்படம் வரும் நவம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறினார்.
- நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மெலட்டூர், அக்.13-
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சியில் பெருங்கரை கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி மயான பாதையை அரசு மூலம் புதுப்பிக்க தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து பெருங்கரை கிராமமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பாபநாசம் தாசில்தாரிடம் மயானபாதையை சர்வே செய்து தரும்படி மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, ஒன்றிய உதவிபொறியாளர் கார்த்திகேயன், வடக்கு–மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச் செல்விகனகராஜ் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் பாபநாசம் குறு வட்ட நில அளவையர் செல்வக்குமார், அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராமநிர்வாக அதிகாரி லதா உள்பட வருவாய் துறையினர் மயான பாதைக்குரிய பகுதியை நில அளவை செய்து கல் நட்டனர்.
நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
