என் மலர்
நீங்கள் தேடியது "MEA"
- தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
- இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர்.
புதுடெல்லி:
மியான்மர்-தாய்லாந்தில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிக்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் உண்டானது.
இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியான்மரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 1,600க்கும் மேற்பட்ட மக்கள் பலியானதாகவும், 2000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ல மியான்மர் நாட்டுக்கு ஆபரேஷன் பிரம்மா திட்டம் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரன் தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆபரேஷன் பிரம்மா திட்டம் தொடர்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு சேவைகள் மற்றும் 60 டன் நிவாரணப் பொருட்கள் உள்பட 118 உறுப்பினர்களைக் கொண்ட இந்திய ராணுவ கள மருத்துவமனை பிரிவுடன் இரண்டு C-17 விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன. இவற்றுடன், இந்தியாவில் இருந்து 5 நிவாரண விமானங்கள் மியான்மரில் தரையிறங்கியுள்ளன என பதிவிட்டுள்ளார்.
- இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.
- இந்தியாவின் நிலையை குறை கூறும் அமெரிக்க அமைப்பின் முயற்சிகள் வெற்றி பெறாது என்றார்.
புதுடெல்லி:
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்) என்பது 1998-ம் ஆண்டு சர்வதேச மத சுதந்திர சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பின் ஆணையர்கள் அதிபராலும் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் இரு அரசியல் கட்சிகளின் தலைமையாலும் நியமிக்கப்படுகின்றனர்.
சர்வதேச அளவில் மத சுதந்திர மீறல்கள் குறித்து இந்த அமைப்பு ஆண்டுதோறும் அறிக்கை வெளியிடும். ஒவ்வொரு ஆண்டும், இந்த அமைப்பு இந்தியாவில் நடக்கும் சம்பவங்களைப் பட்டியலிட்டு, இந்தியாவில் மத சுதந்திரம் பற்றி விமர்சனங்களை முன் வைக்கும். அதேபோல இந்தாண்டும் குறை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளது.
மக்களவை தேர்தலின்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக பா.ஜ.க. வெறுப்பு பிரசாரம் செய்தது என்றும், சீக்கிய பயங்கரவாதி பன்னூனை கொலை செய்ய சதி செய்த இந்திய உளவு அமைப்பை தடைசெய்ய வேண்டும் என பரிந்துரை செய்தும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த அறிக்கையை நிராகரித்த மத்திய அரசு, அமெரிக்க அமைப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தின் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்ட 2025-ம் ஆண்டு அறிக்கையை நாங்கள் பார்த்தோம். இது மீண்டும் ஒரு சார்புடைய மற்றும் அரசியல் நோக்கம் கொண்ட அறிக்கை.
இந்தியாவின் துடிப்பான பன்முக கலாசார சமூகத்தின்மீது அவதூறுகளை சுமத்தும் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப்.பின் தொடர்ச்சியான முயற்சிகள் கண்டிக்கப்பட வேண்டியவை.
அந்த அறிக்கையில் மத சுதந்திரத்திற்கான உண்மையான அக்கறையை விட , திட்டமிட்ட உள்நோக்கமே அதில் வெளிப்படையாக தெரிகிறது.
ஜனநாயகம் மற்றும் சகிப்புத்தன்மையின் கலங்கரை விளக்கமாக இருக்கும் இந்தியாவின் நிலையை குறைகூறும் இத்தகைய முயற்சிகள் வெற்றிபெறாது. உண்மையில் யு.எஸ்.சி.ஐ.ஆர்.எப். அமைப்பு தான் சர்ச்சைக்குரிய அமைப்பாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
- இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம் என தெரிவித்தது.
புதுடெல்லி:
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் கடந்த மார்ச் 1-ம் தேதி முடிவடைந்த நிலையில், காசா மீது நேற்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 413 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாகவும், பல உடல்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது என்றும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்னும் 59 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் தன்வசம் பிடித்து வைத்துள்ளது.
இந்நிலையில், காசா நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், காசாவின் நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளோம். அனைத்து பணயக் கைதிகளும் விடுவிக்கப்படுவது முக்கியம். காசாவில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.
- மீனவர்கள் கைது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதி வருகிறார்.
- தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தனர்.
புதுடெல்லி:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்
மீனவர்கள் கைதாகும் சமயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி வருகிறார்.
இதற்கிடையே, பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை செல்ல உள்ள நிலையில் இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தோம்.
தூதுக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய மந்திரி ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதி அளித்தோம் என பதிவிட்டுள்ளார்.
- இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
- தமிழக மீனவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளது.
சென்னை:
மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 7 பேரையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இலங்கை கடற்படையினரின் இத்தகைய நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கிறது. பாக். ஜலசந்தியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை மீனவர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை தேவை கேட்டுக் கொண்டுள்ளார்.
- குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது.
- இதுதொடர்பான சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார்.
இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து 'இந்தியா: தி மோடி கொஸ்டின்' என்ற தலைப்பில் 2 பகுதிகள் கொண்ட ஆவணப்படம் தயாரித்துள்ளது. முதல் பகுதி கடந்த செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பானது. அதில், குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி தொடர்பு இருப்பது இங்கிலாந்து அரசுக்கு தெரியும் என்று கூறப்பட்டுள்ளது. 2-வது பகுதி 23-ம் தேதி ஒலிபரப்பாகிறது.
இந்நிலையில், இந்த ஆவணப்படத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது:
பி.பி.சி. ஆவணப்படம் அடிப்படையற்ற ஒன்றை முன்னிறுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட பிரசார படம். அதில் பாரபட்சமும், தொடரும் காலனி ஆதிக்க மனப்பான்மையும் அப்பட்டமாகத் தெரிகிறது.
இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளற விரும்புபவர்களின் வெளிப்பாடாக அப்படம் தோன்றுகிறது. அதன் நோக்கமும், அதற்கு பின்னால் உள்ள செயல்திட்டமும் நமக்கு வியப்பளிக்கிறது என தெரிவித்தார்.
இந்த சர்ச்சையில் பிரதமர் மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்துள்ளார்.
- கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தை வெளியுறவுத்துறை கவனித்து வருகிறது.
- அவர்களுக்கு தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்தி உள்ளது.
புதுடெல்லி:
வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:
இதுவரை 2 விசாரணைகள் நடந்துள்ளன. குடும்பத்தினரிடம் இருந்து மேல்முறையீடு செய்தோம், கைதிகள் இறுதி மேல்முறையீடு செய்தோம். அதன்பிறகு 2 விசாரணைகள் நடைபெற்றன.
இந்த விஷயத்தை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அனைத்து சட்ட மற்றும் தூதரக உதவிகளையும் விரிவுபடுத்துகிறது.
இதற்கிடையே, டிசம்பர் 3-ம் தேதி சிறையில் இருக்கும் 8 பேரையும் சந்திக்க எங்கள் தூதருக்கு தூதரக அனுமதி கிடைத்தது. இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதனால் நாங்கள் தொடர்ந்து பின்பற்றுவோம், நாங்கள் எதைப் பகிர்ந்து கொள்ள முடியுமோ அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.
- தகவல்களை உறுதிசெய்யாமல் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ் உள்ளிட்ட எதையும் வழங்கக் கூடாது.
- போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
வெளிநாடுகளில் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:
பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்லவேண்டும்.
புலம்பெயர்வு சட்டம் 1983-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.
வெளிநாட்டு நேரடி வேலைவாய்ப்பு அழைப்பு வருகிறது எனில் அந்நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண்கள், என்ன வேலை, எவ்வளவு ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். தேவை என்றால் புலம்பெயர்வு அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளலாம்.
www.meaindia.nic.in, www.india.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு ஆட்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தகவல்களை உறுதிசெய்யாமல் ஒருபோதும் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் வழங்கக்கூடாது.
முகவருக்கான கட்டணமாக ஒன்றரை மாத ஊதியம் அல்லது அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்.
விசா எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் சிறைத்தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கான உரிய வங்கிக்கணக்கை வைத்திருப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
பாஸ்போர்ட்டை தொலையாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஒப்பந்தத்திலோ, வெற்று காகிதத்திலோ கையொப்பமிட்டு தரக்கூடாது. வெளிநாட்டில் நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது.
சம்பந்தப்பட்ட நாட்டில் இந்திய தூதரகம் எங்கே உள்ளது, அதன் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர டெல்லியில் உள்ள புலம்பெயர்வு அலுவலகத்திலும் புகார் அளிக்கவும் வழிவகை உள்ளது உள்பட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.
- போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்தியர்களை உடனே விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதில் உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள இந்தியர்களை அதில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என ரஷிய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொய் வாக்குறுதிகள் அளிக்கும் ஏஜெண்ட்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதுடன், ஆள் கடத்தல் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஏஜெண்ட் அளிக்கும் வாக்குறுதிகளை மக்கள் யாரும் நம்பவேண்டாம். அந்த வாக்குறுதிகள் சிக்கலை ஏற்படுத்துவதுடன் ஆபத்தை ஏற்படுத்தும்.
ரஷிய ராணுவத்திற்கு உதவியாகப் பணிபுரியும் இந்தியர்களை உடனே அந்தப் பணியில் இருந்து விடுவிப்பதுடன் அவர்களை தாயகம் அழைத்து வர உறுதி பூண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
- சிஏஏ எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
- சிஏஏ குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்றார்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிஏஏ அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை, அது தவறானது, தவறான தகவல் மற்றும் தேவையற்றது என்று நாங்கள் கருதுகிறோம்.
சிஏஏ 2019 இந்தியாவின் உள்ளடக்கிய மரபுகள் மற்றும் மனித உரிமைகளுக்கான நீண்டகால அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப உள்ளது.
டிசம்பர் 31, 2014 அன்று அல்லது அதற்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைச் சேர்ந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினருக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பான புகலிடத்தை வழங்குகிறது என தெரிவித்தார்.
#WATCH | On CAA, MEA Spokesperson Randhir Jaiswal says, "As you are well aware, the Citizenship Amendment Act 2019 is an internal matter of India and is in keeping with India's inclusive traditions and a long-standing commitment to human rights. The act grants a safe haven to… pic.twitter.com/cJBiDvI7JU
— ANI (@ANI) March 15, 2024
- இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
- இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா முனை மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய இந்த தாக்குதல் இன்றும் நீடித்துக் கொண்டு வருகிறது.
இதற்கிடையே, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இன்னும் ஓரிரு நாளில் தாக்குதல் நடத்த ஈரான் ராணுவம் தயாராகி வருகிறது. ஈரானின் இந்த தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலும் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த அறிவிப்பு வரும்வரை ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவுறுத்தியுள்ளார். அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக இந்திய தூதரகங்களை தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
- வளைகுடா பகுதியில் 17 இந்தியர்களுடன் சென்ற இஸ்ரேல் கப்பலை ஈரான் சிறைபிடித்தது.
- இஸ்ரேல் கப்பலில் இருந்த இந்தியர்களில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் நாடு திரும்பினார்.
புதுடெல்லி:
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா பகுதியில் சென்ற இஸ்ரேலுக்குச் சொந்தமான சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்தது. விசாரணையில், கப்பலில் இருப்பவர்களில் 17 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது.
இதற்கிடையே, சரக்கு கப்பலில் உள்ள 17 ஊழியர்களை மீட்கும் பணி நடந்துவந்தது.
இந்நிலையில், கப்பலில் இருந்த இந்திய ஊழியர்கள் 17 பேரில் டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் விடுவிக்கப்பட்டார். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த இவர் இன்று பத்திரமாக நாடு திரும்பியதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கப்பலில் மீதமுள்ள 16 இந்தியர்களுடன் தொடர்பில் உள்ளோம். பாதுகாப்பாக இருக்கும் அவர்களை விரைவில் மீட்போம் என தெரிவித்துள்ளது.