search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Medical courses"

    • தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது
    • தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.

    இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக தேசிய தேர்வு முகமையால் இந்த வருடம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் குளறுபடி உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு மாநிலங்களில் மாணவர்களும் சமூக அமைப்புகளும் வீதிக்கு வந்து போராட்டங்ககளை முன்னெடுத்தது அரசுக்கு பெரும் தலவிவழியாக மாறியது. இதனைத்தொடர்ந்து 1000 துக்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டது.

     

    வினாத்தாள் கசிவில் சம்பந்தப்பட்ட குற்றாலிக் குமபல்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தவழக்கை சிபிஐ தற்போது விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீட் முறைகேடு விவகாரம் அரசியலிலும் பூதாகரமாக மாறியுள்ளது.நடந்து வரும் பாராளுமன்ற மக்களவைக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நீட் முறைகேடு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி வருகின்றன. இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி வருகின்றன.

     

    இதற்கிடையில் கடந்த ஜூன் 22 , தேர்வு நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளில் சீர்திருத்தங்களை பரிந்துரைக்கவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்யவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்தது. இந்நிலையில்தான் அடுத்த வருடம் முதல் நீட் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போதுவரை கொள்குறி வகை வினாக்கள் (MCQ) அடங்கிய வினாத்தாள் அளிக்கப்பட்டு, விடைகளை ஓ.எம்.ஆர் (OMR) தாளில் கலர் செய்யும் முறை இருந்து வருகிறது. எனவே தற்போது பொறியியல் நுழைவுத்தேர்வுகளான ஜேஇஇ தேர்வுகள் கணினி மூலம் தேசிய தேர்வு முகாமையால் நடத்தப்படுவதை போல நீட் தேர்வுகளையும் அடுத்த வருடம் முதல் நடந்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவிக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.  

    • நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
    • நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. பீகாரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் வினாத்தாள் கசிந்ததாக புகாா் எழுந்தது. இந்த புகாா்களை அத்தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்.டி.ஏ.) மறுத்தது.

    இந்த நிலையில் நீட் தோ்வு முடிவுகள் பாராளுமன்றத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ந் தேதி வெளியிடப்பட்டது. இதில், முன்பு எப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, அரியானாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சர்ச்சையானது.

    நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு உள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கம் முதல் நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வந்த நிலையில் தற்போது வட மாநிலங்களிலும் நீட் தேர்வின் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

     

    இதற்கிடையில் நீட் தீர்வு வெளியாவதற்கு பிறகு ராஜஸ்தான் மாநிலம் நீட் பயிற்சி மையங்கள் மொய்த்துக்கிடக்கும் கோட்டா நகரில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

    தற்போது வெளியாகியுள்ள நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்து மறு தேர்வு நடத்துமாறு நீட் மாணவர்களும் பொதுமக்களும் வட மாநிலங்களில் போராட்டம் நடந்தத் தொடங்கியுள்ளனர். வாரணாசியில் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் முன் ஏராளமான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். ராஸ்ஜ்தான் கோட்டா நகரிலும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

    மேலும் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. நீட் தேர்வு மகாராஷ்டிரா மாணவர்களுக்கு அநீதி இழைப்பதாகவும் அம்மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேசிய தேர்வு முகமை நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
    • குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

    தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்காக நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல் கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த ஆண்டு தேர்வில் தேர்வில் நாடு முழுவதும் மருத்துவக் கனவுடன் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர்.

    குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாளில் குளறுபடி உள்ளிட்ட புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் நடந்து முடித்த தேர்வுக்கான முதற்கட்ட மாதிரி விடைக் குறிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று என்று தகவல் வெளியாகி உள்ளது. விடைக்குறிப்பு வெளியானதும் மாணவர்கள், exams.nta.ac.in/NEET என்ற இணையத்தளத்தில் அதைப் பதிவிறக்கம் செய்து அந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் முறையிடலாம்.

    அதைத்தொடர்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்னர் இறுதிக்கட்ட விடைக்குறிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இளநிலை நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது 

    • தமிழகம் உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

    எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

    எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான முதல்கட்ட ஒதுக்கீட்டு ஜூலை 27, 28ம் தேதிகளில் ஆன்லைனில் நடைபெறுகிறது.

    தமிழகம் உள்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளுக்கும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.

    இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/  https://tnmedicalselection.net/  என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது.
    • அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.

    திருப்பூர் :

    நடப்பாண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ந்தேதி நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 418 பேர் தேர்வு எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 7ந் தேதி இரவு இணையத்தில் வெளியானது. திருப்பூர் மாவட்ட அரசு பள்ளிகள் அளவில் அய்யன்காளிபாளையம் வைஷ்ணவி 320 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார். கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நித்யஸ்ரீ 289 மதிப்பெண்ணுடன் இரண்டாமிடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி காயத்ரி 287 மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம், கே.எஸ்.சி., ஆண்கள் பள்ளி மாணவன் அரவிந்த் கார்த்திக் 285 மதிப்பெண்ணுடன் நான்காம் இடம், ஜெய்வாபாய் பள்ளி மாணவி ஸ்வேதா 282 மதிப்பெண் எடுத்து5-ம் இடம் பிடித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிளஸ் 2 முடித்து முதல் முறையாக தேர்வை எதிர்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கணக்கம்பாளையம் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, அழகு என்பவர் இரண்டாம் முறையாக தேர்வு எழுதி 372 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவர் கடந்தாண்டு 190 மதிப்பெண் எடுத்திருந்தார்.

    இது குறித்து நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், திருப்பூரில் 93 மதிப்பெண்ணுக்கு மேல் 128 பேர் எடுத்து தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த முறை ஊரடங்கு காரணமாக, படிக்க அவகாசம் கிடைத்தது. 400 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர்.இந்த முறை 320 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக அரசின் 7.5 இட ஒதுக்கீட்டின் கீழ் சேர 128 பேர் தகுதி பெற்றுள்ளனர். இருப்பினும் கட்ஆப் அடிப்படையில் சீட் கிடைக்க வாய்ப்புண்டு என்றார்.

    தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் 6 மருத்துவ படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #MGRUniversity
    சென்னை:

    தமிழ்நாடு டாக்டர் எம். ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் பரவு நோயியல் துறையில் நடத்தப்படும் 6 மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு 2018-19ம் ஆண்டுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது.

    பரவு நோயியல் துறையில் மருத்துவம் சார்ந்த 3 பட்ட மேற்படிப்புகளும், நான்கு பிரிவுகளில் முனைவருக்கான ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு முதல் சுகாதார மேம்பாடு மற்றும் கல்வி, பொது சுகாதார இதழியியல் ஆகிய இரண்டு முதுநிலை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

    பொது சுகாதாரம், பரவு நோயியல், உயிர் புள்ளியல் ஆகிய பிரிவுகளில் பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன. மேலும் பொது சுகாதாரம், சமூக மருத்துவம், பரவு நோயியல், உயிர் புள்ளியியல் ஆகிய 4 பிரிவுகளில் முனைவர் பட்டப்படிப்பு சார்ந்த ஆய்வுகளும் வழங்கப்படுகின்றன.

    தகுதிகால அட்டவணை விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்களை பல்கலைக்கழக இணைய தளத்தின் (www.tnmgrmn.ac.in) மூலம் தெரிந்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பல்கலைக்கழகத்தை வந்து சேர அடுத்த மாதம் 15-ந்தேதி கடைசி நாளாகும் என்று பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRUniversity
    ×