என் மலர்
நீங்கள் தேடியது "Meera Mithun"
- பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
- இவர் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக குற்றச்சாட்டப்பட்டது.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், கடந்த 2018-ம் ஆண்டு தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட மிஸ் சென்னை போட்டியில் தனியார் நிறுவனத்தை பிரபலப்படுத்த ரூபாய் 50 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக மீரா மிதுன் மீது குற்றச்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் மீரா மிதுனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மீரா மிதுன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, காவல்துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
- மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பிரபல நடிகை மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. இந்த வழக்கு அக்டோபர் 19-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, நடிகை மீராமிதுன் தொடர்ந்து மாயமாக உள்ளதாக்வும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த வழக்கை நவம்பர் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தலைமறைவான விவகாரத்தில் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- நடிகை மீராமிதுன் வழக்கு தொடர்பாக கடந்த சில தினங்களாகவே தலைமறைவாக உள்ளார்.
- இவரை கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார் மனு அளித்துள்ளார்.
பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணைசென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
மீராமிதுன்
இதன் விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்' என்றார்.
மீராமிதுன்
இதைத்தொடர்ந்து மீரா மிதுனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றி வருவதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் தலைமறைவாக இருக்கும் அவர் பெங்களூரில் இருப்பதாக தாகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டதாக கவல்துறை தெரிவித்தது.
மீராமிதுன்
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் செல்போன் நம்பரை மாற்றி வருவதாகவும் ஏற்கனவே வைத்திருந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விரைவில் மீராமிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
மீராமிதுன்
இந்நிலையில், நேற்று மாலை மீரா மிதுன் தாயார் ஷியாமலா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த சில நாட்களாகவே மீரா மிதுன் தங்களின் தொடர்பில் இல்லை. வழக்கை சந்தித்து வந்தபோதிலும், தொடர்ந்து எங்களிடம் தொடர்பில் இருந்தார். ஆனால் சில நாட்களாக தொலைபேசியிலும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே அவரை கண்டுபிடித்து கொடுக்குமாறு கூறியுள்ளார். தற்போது, இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
- நேற்று விசாரணைக்கு மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார்.
சென்னை:
பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார்.
போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவோம்' என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
- பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
- இவர் மீது தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மீரா மிதுன்
இதையடுத்து இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 6-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் நடிகை மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக மீரா மிதுனுக்கு 2-வது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆகஸ்ட் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. முன்பை போலவே இப்போதும் சாம் அபிஷேக் மட்டும் நேரில் ஆஜராகினார்.
மீரா மிதுன்
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், மீரா மிதுன் தலைமறைவாக உள்ளதாகவும் அவரை தேடி வருவதாகவும். தெரிவித்தார். மேலும், விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுவார் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதி வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
- பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
- இவர் மீது தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தாழ்த்தப்பட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
மீரா மிதுன்
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாம் அபிஷேக் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில் நடிகை மீரா மிதுனும் அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இது தொடர்பாக மீரா மிதுனுக்கு 2-வது முறையாக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வருகிற 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் 23-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால் மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.