search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Meghadatu"

    • ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

    தஞ்சாவூா்:

    கல்லணையில் இருந்து இன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஒரு வாரத்திற்குள் கடைமடை வரை சென்றுவிடும். 7 லட்சத்து 95 ஆயிரத்து 453 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்கள், விதை நெல்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர் கடன் வழங்கப்படும். காவிரித் தண்ணீரை பயன்படுத்தி ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நாங்களும் ஒருபோதும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது.
    • காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று பா.ஜ.க. மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளன. இந்த 9 ஆண்டு காலத்தில் இந்தியாவில் பல்வேறு நல்ல திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி உள்ளார். இன்னும் பல திட்டங்களை கொண்டு வர உள்ளார்.

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முழுமையாக பயன்படுத்தப்ப டுகிறது. அனைவருக்குமான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார்.

    குறிப்பாக தமிழகத்தில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் மட்டும் 60 லட்சத்து 53 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதேப்போல் 15 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

    தஞ்சை உள்பட தமிழகத்தின் பல்வேறு நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை கொண்டு வந்தார். விரைவில் தஞ்சை யில் விமான நிலையம் வர உள்ளது.

    மத்திய அரசில் பிரதமர் மோடி பொறுப்பேற்று 9 ஆண்டு கால ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.

    இதன் மூலம் உலகப் பொருளாதார வல்லரசு நாடுகளில் ஐந்தாவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி, ஊழல் உள்ளிட்டவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு கூறி வருகிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க என எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் மேகதாதுவில் அணை கட்ட தமிழக பா.ஜ.க ஒருபோதும் அனுமதிக்காது. இதேபோல மத்திய அரசும் அனுமதி தராது.

    கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சியில் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முயற்சி நடத்தபோது, அதை எதிர்த்து தமிழ்நாட்டில் தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தியது.

    இதேபோல காங்கிரஸ் அரசும் மேகதாதுவில் அணை கட்ட முயன்றால், தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்தும்.காவிரியில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையத்தை பிரதமர் மோடி அமைத்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, பா.ஜ.க தெற்கு மாவட்டத் தலைவர் ஜெய் சதீஷ், ஊடகப் பிரிவு தெற்கு மாவட்டத் தலைவர் சிவபிரகாசம், மாவட்ட பொதுச் செயலாளர் வீரசிங்கம் மற்றும் துரை,

    மாவட்ட பொருளாளர் விநாயகம், ஊடகப்பிரிவு பார்வையாளர் செந்தில்,கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் கபிலன், விவசாய அணி மாவட்ட தலைவர் தங்கவேலு, தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன் மாரியப்பன், ஊடகப்பிரிவு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், முரளி,பிரபாகரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

    ×