என் மலர்
நீங்கள் தேடியது "Melapalayam"
- நாராயண பெருமாள் மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
- கடந்த 2 நாட்களாக நாராயண பெருமாள் வீடு திறக்கப்படாமல் இருந்தது.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச் சந்தையை சேர்ந்தவர் நாராயண பெருமாள் (வயது25). எக்ட்ரீசியன். இவர் நெல்லை மேலப்பாளையம் நாச்சியார் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.
கடந்த 2 நாட்களாக இவரது வீடு திறக்கப்படாமல் இருந்தது. மேலும் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேக மடைந்த அக்கம் பக்கத்தினர் மேலப்பா ளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது நாராயண பெருமாள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தற்கொலை செய்து கொ ண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது.
- கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை:
மேலப்பாளையம் கிழக்கு பகுதி அ.தி.மு.க. புதிய உறுப்பி னர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் பாளை என்.ஜி.ஓ. காலனி உதயா நகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். கிழக்கு பகுதி செயலாளர் சண்முக குமார் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்ப ட்டது. கூடுதலாக புதிய உறுப்பினர் சேர்க்கை விண்ணப்ப படிவம் வட்ட செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. அப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, முன்னாள் எம்.எல்.ஏ. ஆதித்தன், சிறுபான்மை பிரிவு மகபூப் ஜான், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, அண்ணா தொழிற்சங்கம் பொன்னுசாமி, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, பாளை பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் பாசறை சம்சு சுல்தான், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்ணேஷ் மற்றும் பகுதி, வட்ட செயலா ளர்கள் கலந்து கொண்டனர்.
- நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி மேலப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
- மின்மாற்றியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நெல்லை:
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி மேலப்பாளையம் மெயின் பஜார் பகுதியில், நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் உத்தரவின் படியும், நெல்லை நகர்ப்புறக் கோட்ட செயற்பொறியாளர் காளிதாசன் வழிகாட்டுதலின் படியும் வருங்கால மின் நுகர்வோர்களை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகம் வழங்க நெல்லை நகர்ப்புற கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் படி ரூ.4 லட்சத்து 50ஆயிரம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் காளிதாசன், உதவி செயற் பொறியாளர் சிதம்பரவடிவு , உதவி மின் பொறியாளர்கள் ரத்தினவேணி, கார்த்திக்குமார், ஜன்னத்துல் ஷிபாயா, வளர்மதி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி ஆண்டவர் 3-வது தெருவை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மகள் கனகா (வயது 22). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். நேற்று வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். அக்கம், பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. மேலப்பாளையம் அருகே உள்ள வள்ளுவர்நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தா (22). இவர் தனது அக்காள் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து அவரது தாய் சுப்புலெட்சுமி போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி இளம்பெண்கள் எங்கு சென்றார்கள் என தேடி வருகின்றனர்.
- மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது
நெல்லை:
மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள கவரிங் செயின் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது மேலப்பளையம் பீடி காலனி பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 19) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பாளை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி விசாரணை நடத்தி சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
- கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
நெல்லை:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
100 போலீசார்
நெல்லை மாவட்டத்திலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கவச உடை அணிந்த அதிரடிப் படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்றும், பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார்.
- மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51).
- நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
நெல்லை:
மேலப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆவுடையப்பன் (வயது 51). இவர் புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு மனைவியும், திருமணமான மகளும், மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை திடீரென ஆவுடையப்பன் விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆவுடையப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேலப் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயபால் சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
- ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 41). மாட்டு வியாபாரி.
மாயம்
இவர் கடந்த 5-ந் தேதி நெல்லை மேலப்பாளையம் சந்தைக்கு வந்தார். சந்தை முடிந்த பிறகு அவர் நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு சென்றார்.
அங்கிருந்து அவரது மனைவி ராமக்கனி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது நான் வீட்டிற்கு வர நேரமாகும் என்று கூறியுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு செல்லவில்லை.
பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஜெயபால் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் மேலப்பாளையம் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என விசாரணை நடந்து வருகிறது. மேலும் ஜெயபாலின் செல்போன் எண் மூலமும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
- மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை:
அம்பை-மேலப்பாளையம் சாலையில் உள்ள வி.எஸ்.டி பள்ளி வாசல் அருகே அமைந்துள்ள பிரதான நீர் நிலையான கன்னிமார் குளம் கரை ஓரத்தில் பேவர் பிளாக் நடைபாதை மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 48- வது வார்டுக்கு உட்பட்ட இந்த நடைபாதையில் அதிகாலை மற்றும் மாலை வேலைகளில் கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், இளைஞர்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரு சில இளைஞர்களின் தவறான செயல்களால் இப்பாதையில் மது பாட்டில்களும், மாட்டு சாணங்களும் கிடக்கின்றது. தினமும்் இரவு சிலர்் மது குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி சொல்கின்றனர்.
இதனால் நடைபயிற்சிக்காக தினமும் வரும் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையை தூய்மை பணியாளர்கள் மூலம் தினமும் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் ஒருவர் வந்து மனு அளித்தார்.
- பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
நெல்லை:
மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார்.
இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் வந்து ஒரு மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கோவிலின் அருகே இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவிலுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலை களம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்மகர்த்தாவுடன் வந்திருந்தனர்.
மகளிர் மட்டும் பஸ்
மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து கல்லூரிக்கு மகளிர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
- மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணிகளுக்கு ஆபரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.
- மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
நெல்லை:
நெல்லை மேலப்பாளை யத்தில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டாக்டர் பற்றாக்குறை
இந்நிலையில் இங்கு பிரசவத்திற்காக சிகிச்சை பெற்று வரும் 7 கர்ப்பிணி களுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் எனக்கூறி குறிப்பிட்ட தேதியையும் ஒதுக்கிய தாக கூறப்படுகிறது. ஆனால் மயக்கவியல் டாக்டர் இல்லாததால் கர்ப்பிணி களுக்கு ஆப ரேஷன் தேதியை அடிக்கடி தள்ளிக் கொண்டே சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள் இன்று அரசு ஆஸ்பத்திரியில் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு மேலப்பாளையம் போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
- சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.
இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.
தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.
அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.