என் மலர்
நீங்கள் தேடியது "menu"
- குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
- பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே தைலாபுரம் பா.ம.க. அரசியல் பயிலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தலைமையில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் விதமாக தமிழில் பேசு தங்க காசு என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இதில் 17-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிலையில் குமளம் பகுதியை சேர்ந்த தமிழன் என்ற கல்லூரி மாணவன் வெற்றி பெற்றார்.
அவருக்கு 4 கிராம் தங்க காசுகளை பரிசாக ராமதாஸ் வழங்கினார்.மேலும் தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பாரதியாரின் கவிதையை பிழையில்லாமல் கூறியவர்களுக்கு ரூ.1000 பரிசாக வழங்கினார்.உடன் தலைமை நிலைய செயலாளராக இசக்கி படையாட்சி,பா.ம.க பொருளாளர் திலகபாமா, கவிஞர் ஜெயபாஸ்கரன், விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
- இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருமங்கலம்
திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி சத்திரிய நாடார் உயர்நிலைபள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு யோகாசனம் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் நடந்தது.
ஹோமியோபதி மருத்துவர் அமுதா மூச்சுப்பயிற்சி மற்றும் பல்வேறு யோகாசனங்களை கற்றுக் கொடுத்தார்.
இதனை தொடர்ந்து மாணவ-மாணவிகள் பங்கேற்ற பட்டிமன்றம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.