search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "merchant arrest"

    • வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.
    • போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    அருவங்காடு:

    குன்னூர் அருகே கொலக்கொம்பை போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் சண்முக பிரியன் (வயது 28).

    இவர் நேற்று பகல் முழுவதும் சேலாஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். மாலையில் பணியை முடித்து விட்டு, அங்கிருந்து குன்னூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது எதிரே கார் ஒன்று மிகவும் வேகமாக வந்தது. இதனை பார்த்த சண்முகபிரியன், தனது மோட்டார் சைக்கிளை திருப்பி, வேகமாக சென்ற காரினை மறித்து, அதில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

    காரில் இருந்தவரிடம் அதிவேகமாக செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ள நிலையில், ஏன் விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை வேகமாக இயக்கி செல்கிறீர்கள் என கேட்டார்.

    ஆனால் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து போலீஸ்காரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே காரில் இருந்த நபர் கீழே இறங்கி போலீஸ்காரர் சண்முக பிரியனை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கீழே தள்ளியதாக தெரிகிறது.

    இதுகுறித்து சண்முகபிரியன் கொலக்கொம்பை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ்காரரை தாக்கிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர், சேலாஸ் பகுதியை சேர்ந்த அப்துல்காதர்(38) என்பது தெரியவந்தது. இவர் அந்த பகுதியில் பூ மற்றும் பழக்கடை நடத்தி வந்துள்ளார்.

    மேலும் இவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கி வந்ததும், தட்டிக்கேட்ட போலீஸ்காரரை தாக்கியதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அப்துல் காதர் மீது கொலை மிரட்டல், தகாத வார்த்தையால் பேசியது, மதுபோதையில் வாகனம் ஓட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து குன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    மேலூர் அருகே போர்வை வியாபாரி போல் நடித்து கஞ்சா கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

    மேலூர்:

    தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் வீதி வீதியாகச் சென்று போர்வைகள் விற்று வருகின்றனர். வட மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த போர்வைகள் குளிரை தாங்கும் என அவர்கள் கூறுவதை நம்பி ஏராளமானோர் வாங்கி வருகின்றனர்.

    போர்வை வியாபாரத்தை பயன்படுத்தி போதைப் பொருளான கஞ்சாவை சிலர் விற்பதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன.

    இந்த நிலையில் மேலூர் சத்தியபுரம் 4 வழிச்சாலை பகுதியில் போலீஸ்காரர்கள் கோபால் மற்றும் முத்து ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக போர்வைகளுடன் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் மேலூர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் அவர் வைத்திருந்த போர்வைகளை சோதனை செய்தபோது அதற்குள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போர்வைக்குள் இருந்த 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கொண்டு வந்தவரையும் கைது செய்தனர்.

    விசாரணையில், அவரது பெயர் பாண்டி (வயது 50) என்பதும், மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கீரிப்பட்டியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இவர் ஒரிசாவிற்கு சென்று போர்வை வாங்குவது போல் வாங்கிவந்து அதனுடன் கஞ்சாவையும் விற்று வந்துள்ளார். இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் இன்று குடோனில் பதுக்கி விற்பனை செய்த ரூ.3லட்சம் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்த அதிகாரிகள் வியாபாரி ஒருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Gutka
    திருச்சி:

    திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா, கோட்டை உதவி போலீஸ் கமி‌ஷனர் கோடிலிங்கம் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்குள்ள குடோனில் போதை பொருட்களான குட்கா, புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை பதுக்கி வைத்து விற்பனைக்காக பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வியாபாரி மங்கள் ராம் என்பவரை கைது செய்தனர். மேலும் 2பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான வியாபாரி மங்கள்ராம்

    கரூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி, அதனை குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் கரூரில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 2பேரை போலீசார் கைது செய்தனர். ஓட்டல் உரிமையாளர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களுடன் மங்கள்ராமுக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் போதை பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வரப்படுகிறது. சிறிய கடைகளில் ரகசியமாக விற்பனை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து திருச்சியில் உள்ள கடைகளிலும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை ரகசியமாக போதை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #Gutka
    பேகம்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்ற வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பதாக தெற்கு பகுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூது ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    பேகம்பூர் பிஸ்மி நகரில் சென்றபோது ரியாஸ் அகமது என்பவர் வீட்டில் பதுக்கி கஞ்சாவிற்றது தெரிய வந்தது. அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 1¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அதிரடி வேட்டை நடந்து வருகிறது.

    கொச்சியில் சென்னை வியாபாரியை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள போதை பொருளை பறிமுதல் செய்தனர். #Drugsseized

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வருவோரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.

    இதுபோல வியாபார நிமித்தம் கேரளா வருவோரையும், அவர்களின் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    கொச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு உதவி கமி‌ஷனர் விஜி ஜோர்ஜ், சப்-இன்ஸ்பெக்டர் விபின் தலைமையிலான போலீசார் கொச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர்.

    அந்த காரில் ஹாசிஸ் ஆயில் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

    போதை பொருள் கடத்தி வந்த காரில் இருந்த இப்ராகிம் ஷெரீப் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் ஷெரீப், சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தெரிய வந்தது.

    அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார். துணிகளை வெளிமாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இப்ராகிம் ஷெரிப்பிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டுள்ளது.

    சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் போதை பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் வாங்கி அதனை பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கார்களில் கடத்திச் சென்று இக்கும்பல் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு கும்பல் யார்? இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர் நபர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க கொச்சி தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    வெளிநாட்டு கும்பல் பற்றிய விவரம் தெரிய வரும் போது மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்தனர்.  #Drugsseized

    கம்பத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வியாபாரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம்மெட்டு காலனியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது39). பப்பாளி வியாபாரி. இவரது தோட்டத்திற்கு காவலுக்கு வந்த குடும்பத்தில் 14 வயது சிறுமியும் இருந்தார்.

    சிவக்குமார் அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் சிறுமியுடன் வி‌ஷம் குடித்தார்.

    2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். தற்போது சிறுமி நலமாக உள்ளார். மேலும் சிவக்குமார் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சிவக்குமாரை கம்பம் வடக்கு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    வானகரம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல் சுற்று வட்டார பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மதுரவாயல் போலீசாருக்கு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் வானகரம்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு மளிகை கடையில் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் நேற்று இரவு போலீசாருடன் சென்று சோதனை நடத்தினார். அப்போது அங்கு குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர் ஜேசுராஜ் (50) கைது செய்யப்பட்டார். குடோனில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் மதுரவாயல், கோயம்பேடு,வானகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இங்கிருந்து குட்கா பொருட்கள் சப்ளை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

    யார்-யாருக்கு குட்கா அனுப்பப்பட்டது? குட்கா விற்பனை செய்யும் கடைகள் எவை என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
    மதுரையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய வியாபாரியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். #Gutkasmuggling

    தருமபுரி:

    தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்களை தமிழகத்திற்கு தருமபுரி வழியாக கடத்தி வருவதாக மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் கண்காணிக்க அவர் உத்தரவிட்டார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடந்த 20-ந் தேதி தொப்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு ரூ.40 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும், அதனை கடத்தி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்து டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    கர்நாடக மாநிலத்தில் உள்ள வியாபாரி ஒருவரிடம் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை வாங்கி 2 மினி லாரியில் மதுரைக்கு தருமபுரி வழியாக கடத்தி கொண்டு வரும் போது அவர்கள் பிடிபட்டதால் உடனே தொப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து கர்நாடக மாநிலம் கிளாஸ்பாளையம் மார்க்கெட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் மதின் (வயது 28) என்பவரை கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து டிரைவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூருவில் இருந்து தமிழகத்தில் மதுரையில் உள்ள வியாபாரிக்கு இந்த குட்கா பொருட்களை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். உடனே தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்து அங்கு வியாபாரியை தேடிவந்தனர்.

    நேற்று மாலை 5 மணிக்கு மதுரை மாவட்டம் வ.உ.சி. நகரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் (வயது 32) என்பவர் தான் பெங்களூருவில் 2 லாரிகளில் குட்கா பொருட்களை வாங்கியது தெரியவந்தது. உடனே பன்னீர் செல்வத்தை கைது செய்து செய்து தொப்பூருக்கு அழைத்து வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது25), ராஜதுரை (22) ஆகிய 2 பேரை கைது செயது தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கடத்தப்பட்ட புகையிலை பொருட்களை சேலத்திற்கு கொண்டு செல்வதாக டிரைவர் சக்திவேல் போலீஸ் விசாரணையில் தெரிவித்தார்.

    உடனே போலீசார் குட்கா வியாபாரியான சேலம் ஓமலூரை சேர்ந்த வரை பிடிக்க அங்கு சென்றனர். அப்போது அந்த வியாபாரி கடையை மூடிவிட்டு தலைமைறவாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சேலம் வியாபாரியை தேடிவருகின்றனர். #Gutkasmuggling

    ×