என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Methods of"
- ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.
கொடுமுடி:
கொடுமுடி வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
காய்ந்த விதைகளை விதை நேர்த்தி செய்வதை விட ஈர விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். முதலில் பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டை சிம் மருந்தின் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 24 மணி நேரம் விதைகளுடன் ஊறவைத்து முளை கட்டி வைக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் நாற்றுக்களை சுமார் 40 நாட்களுக்கு குலை நோய் வராமல் பாதுகாக்கலாம்.
ரசாயன பூச்சிகொல்லி மருந்துக்கு பதிலாக உயிர் எதிர் பூசனக்கொல்லி மருந்தான சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் பாக்டீரியா வை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம்.
பூஞ்சானக் கொல்லி விதை நேர்த்தி செய்த 24 மணி நேரத்திற்கு பிறகு அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் (2 பாக்கெட்) 400 கிராம் அசோஸ் பைரில்லத்துடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும்.
பூஞ்சானக் கொல்லி மருந்து களான கார்பென்டா சிம், திரம் அல்லது கேப்டான் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற அளவில் நெல் விதைகளுடன் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு ஊறவைக்க வேண்டும்.
இதற்காக விதைகளை நீரில் ஊற வைத்து (சுமார் 24 மணி நேரம்) கோணிச்சாக்கில் 1 முதல் 2 நாட்கள் ஈரம் காயமல் கட்டி வைத்து முளைகட்டவேண்டும்.
முளை வந்துள்ள விதையில் முளையின் நீள்ம் 3 மி.மீ. முதல் 5 மி.மீ. வரை இருக்கலாம். விதைகள் சீராக முளைப்பதற்கு தேவைப்பட்டால் முளை க்கப்பட்ட விதைளை கலக்க வேண்டும்.
கடைசி உலவிற்கு முன்பாக 8 சென்ட் நாற்றங்காலுக்கு 16 கிலோடை அம்மோனியம் பாஸ்பேட் உரம் இட வேண்டும். (அல்லது 6.3 கிலோ யூரியா, 48 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடலாம்).
உரிய வயதில் நாற்றுக்களை பறிப்பதாக இருந்தால் டி.ஏ.பி.யை நாற்றங்காலில் அடியுரமாக இடலாம். நாற்று பறிப்பதற்கு தாமதம் ஆகும் பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடலாம்.
நாற்றங்கால் செழுமை யாக இல்லாத நிலையில் டி.ஏ.பி. இடாத பட்சத்தில் நாற்று பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு 8 சென்டுக்கு 4 கிலோ யூரியா அல்லது 8 கிலோ அம்மோனி யம் சல்பேட் உரம் இடலாம். நாற்றின் வளர்ச்சி போது மானதாக இல்லாதிருந்தால் சென்டிற்கு 2 கிலோ டிஏபியை நாற்றுக்கள் பறிப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு இடவேண்டும்.
வேர்கள் அறுபடும் நிலை இருந்தால் டி.ஏ.பி. இடாத நாற்றங்காலில் நாற்றுக்கள் பறிப்பதற்கு 1-2 நாட்களுக்கு முன்பு 16 கிலோ ஜிப்சம் இடவேண்டும்.
நடவு வயலை நன்றாக வளர்த்து உயர்விளைச்சல் தரும். எனவே, நிலத்தை பண்படுத்த வேண்டும் நடவு வயல் தயாரிப்பதை எளிதாக கோடை காலத்தில் கோடை மழை கிடைத்த உடன் நிலத்தை 2 அல்லது 3 முறை உழுவது அவசியமாகும்.
கோடை மழை பெய்வதனால் மண்ணின் ஈரப்பதம் காக்கப்படுவதுடன் நடவு வயல் தாயார் செய்ய தேவையான பாசன நீரின் அளவும் குறைகிறது. களைகளும் நீக்கப்படுகிறது.
நெல் நடவு வயலில் தண்ணீர் விடுவதற்கு முன்பாக ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் நன்றாக மக்கிய தொழு உரம் அல்லது குப்பை உரம் இட்டு வயல் முழுவதும் நன்றாக தூவிப்பரப்ப வேண்டும். பிறகு தண்ணீர் விட்டு உழுது உரத்தை மண்ணுடன் கலக்க வேண்டும்.
பசுந்தால் உரமிட வேண்டிய வயலில் 2.5 செ.மீ. உயரத்திற்கு தண்ணீர் கட்டி எக்டருக்கு 6.25 டன்கள் பசுந்தால் உரம் இட்டு ஒரு வாரம் மக்கவிட வேண்டும்.
அதாவது சணப்பை போன்ற விரைவில் அழுகி மக்கக்கூடிய பசுந்தாள் உரத்தை உழுவதற்கு 7 நாட்கள் முன்பும் மற்ற பசுந்தாள் உரங்களை உழுவதற்கு 15 நாட்கள் முன்பும் இட்டு 2.5 செ.மீ. ஆழம் தண்ணீர் நிறுத்தி அழுகி மக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்