என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MG Motor"
- இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- இந்த கார் 5 பேர் அமரக்கூடிய எஸ்.யு.வி. மாடல் ஆகும்.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஹெக்டார் எஸ்.யு.வி.-யை ஷைன் ப்ரோ மற்றும் செலக்ட் ப்ரோ என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்தது. இவற்றின் விலை முறையே ரூ. 16 லட்சம் மற்றும் ரூ. 17 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போது எம்.ஜி. ஹெக்டார் என்ட்ரி லெவல் மாடலுக்கான விலையை அந்நிறுவனம் அதிரடியாக குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி எம்.ஜி. ஹெக்டார் மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 14 லட்சத்து 95 ஆயிரம் என நிர்யணயம் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது இதன் விலை ரூ. 96 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பு எம்.ஜி. ஹெக்டார் ஸ்டைல் 1.5 லிட்டர் பெட்ரோல் மேனுவல் வேரியண்டிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது கொமெட் EV மாடலின் இரண்டு வேரியண்ட்களிலும் ஃபாஸ்ட் சார்ஜரை அறிமுகம் செய்தது.
இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் ஐந்து பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்பில் கிடைக்கிறது. இந்த கார் 1.5 லிட்டர் மற்றும் 2 லிட்டர் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாக அமைந்தது.
- இந்த கார் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது.
எம்.ஜி. மோட்டார் நிறுவனம் தனது ஹெக்டார் மற்றும் குளோஸ்டர் எஸ்.யு.வி. மாடல்கள் விலையை குறைத்து இருக்கிறது. இத்துடன் கொமெட் எலெக்ட்ரிக் கார் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் புதிய குறைந்த விலை எடிஷனை அறிமுகம் செய்திருந்தது. இது அந்த சீரிசில் என்ட்ரி லெவல் மாடலாகவும் அமைந்தது.
விலை குறைப்பை பொருத்தவரை எம்.ஜி. ஹெக்டார் பெட்ரோல் மாடலின் விலை தற்போது ரூ. 14 லட்சத்து 94 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டீசல் வேரியன்ட்களின் விலை ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் என துவங்குகிறது. ஹெக்டார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 6 ஆயிரம் மற்றும் ரூ. 79 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் எம்.ஜி. ஹெக்டார் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 15 லட்சத்து 49 ஆயிரம் மற்றும் ரூ. 14 லட்சத்து 03 ஆயிரம் என துவங்குகிறது.
எம்.ஜி. குளோஸ்டர் மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 31 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இந்த காரின் விலை தற்போது ரூ. 37 லட்சத்து 49 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் இந்த கார் டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக அமைகிறது. இதன் விலை ரூ. 35 லட்சத்து 93 ஆயிரம் என துவங்குகிறது.
எம்.ஜி. கொமெட் எலெக்ட்ரிக் கார் விலை தற்போது ரூ. 99 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 99 ஆயிரம் என துவங்குகிறது. இந்திய சந்தையில் கொமெட் மாடலுக்கு போட்டியாக வேறு எந்த காரும் விற்பனை செய்யப்படவில்லை.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- விலை ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும்.
- 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.
எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம் 2024 மாடல்களின் விலையை மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில், எம்.ஜி. நிறுவனம் தனது ZS EV காரின் என்ட்ரி லெவல் எக்சிகியுடிவ் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
புதிய எம்.ஜி. ZS EV மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 98 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் எக்சைட் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சம் வரை குறைவு ஆகும்.
புதிய வேரியண்ட்-இல் பேட்டரி மற்றும் பவர்டிரெயின் என மெக்கானிக்கல் அம்சங்கள் ரீதியாக எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி கொண்டிருக்கிறது.
இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் 173 ஹெச்.பி. பவர், 280 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காரை 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 60 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்திட முடியும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என ARAI சான்று பெற்றிருக்கிறது.
- எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய கார் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்திய சந்தையில் பல்வேறு கார் உற்பத்தியாளர்கள் தங்களின் வாகன விலையை உயர்த்தி வருகின்றன.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வருகிறது. இம்முறை எம்ஜி கார்களின் விலை ரூ. 90 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட இருக்கிறது.
இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் மட்டுமின்றி மாருதி சுசுகி, கியா இந்தியா, ரெனால்ட் இந்தியா, ஆடி இந்தியா, மெர்சிடிஸ் பென்ஸ், ஜீப் போன்ற நிறுவனங்களும் தங்களின் வாகன விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கின்றன. பெரும்பாலான கார் உற்பத்தியாளர்களும் ஆண்டு துவக்கத்திலேயே விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளன. தொடர்ந்து அதிகரிக்கும் உற்பத்தி செலவீனங்கள், உதிரி பாகங்கள் விலையை உயர்வே வாகன விலை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.
விலை உயர்வு தவிர எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி புதிய மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த கார் எம்ஜி ஹெக்டார் ஃபேஸ்லிஃப்ட் மாடலாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. இத்துடன் ஹெக்டார் பிளஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். இரு கார்களை தொடர்ந்து எம்ஜி நிறுவனம் ஏர் EV எலெக்ட்ரிக் காரையும் அறிமுகம் செய்கிறது.
புதிய எம்ஜி ஏர் EV இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும். தற்போது எம்ஜி நிறுவனம் ZS EV எலெக்ட்ரிக் கார் மாடலை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. புதிய எம்ஜி ஏர் EV விலை இந்தியாவில் ரூ. 10 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மாடல் டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோயன் eC3 கார்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.
- எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய குளோஸ்டர் மாடலை அறிமுகம் செய்தது.
- 2022 குளோஸ்டர் மாடல் புதிய 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் மேம்பட்ட எம்ஜி குளோஸ்டர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விலை ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய மாடலில் சிறிதளவு டிசைன் மற்றும் மேம்பட்ட கனெக்டட் கார் சூட் வழங்கப்பட்டு இருக்கிறது. வெளிப்புறம் புதிய 19 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், டீப் கோல்டன் எனும் புதிய நிறத்தில் கிடைக்கிறது.
விலை விவரங்கள்:
2022 எம்ஜி குளோஸ்டர் சூப்பர் 4x2 ரூ. 31 லட்சத்து 99 ஆயிரம்
2022 எம்ஜி குளோஸ்டர் ஷார்ப் 4x2 ரூ. 36 லட்சத்து 87 ஆயிரம்
2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 7S 4x2 ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம்
2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 6S 4x2 ரூ. 38 லட்சத்து 44 ஆயிரம்
2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 7S 4x4 ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம்
2022 எம்ஜி குளோஸ்டர் சேவி 6S 4x4 ரூ. 40 லட்சத்து 77 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய 2022 எம்ஜி குளோஸ்டர் மாடல் அகேட் ரெட், மெட்டல் பிளாக், வார்ம் வைட் மற்றும் மெட்டல் ஆஷ் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. புதிய மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள், மூன்று ஸ்லாட் கிரில், க்ரோம் சரவுண்ட், காண்டிராஸ்ட் நிற ஸ்கிட் பிளேட்கள், பாக் லைட்கள், சைடு ஸ்டெப்கள், க்ரோம் டோர் ஹேண்டில்கள், எல்இடி டெயில் லைட்கள், குவாட் டிப் எக்சாஸ்ட்கள் உள்ளன.
காரின் உள்புறம் 75-க்கும் மேற்பட்ட கனெக்டெட் கார் அம்சங்கள், மியூசிக் சிஸ்டத்திற்கு ரிமோட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங், ஹிங்லிஷ் வாய்ஸ் கமாண்ட்கள், ஆண்ட்ராய்டு வாட்ச் செயலி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய குளோஸ்டர் மாடலில் உள்ள ADAS கூடுதலாக டோர் ஓபன் வார்னிங், ரியர் கிராஸ் டிராபிக் அலர்ட் மற்றும் லேன் சேன்ஜிங் அசிஸ்ட் உள்ளிட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த காரின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் இருவித டியூனிங்கில் கிடைக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் AT மற்றும் ஆல் வீல் டிரைவ் வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் உருவாக்கி இருக்கும் கன்வெர்டிபில் கார் மாடலில் இரண்டு பேர் பயணிக்க முடியும்.
- . இந்த கார் ஏற்கனவே அந்நிறுவனம் அறிமுகம் செய்த கான்செப்ட் மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனம் ரிட்டன் ஆப் தி லெஜண்ட் தலைப்பில் ஒரு நிமிட வீடியோ டீசரை வெளியிட்டு உள்ளது. டீசரில் எம்ஜி நிறுவனத்தின் புதிய 2-சீட்டர் எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் மாடல் ஆகும். இந்த கார் சைபர்ஸ்டர் கான்செப்ட்-ஐ சார்ந்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் எம்ஜிபி ரோட்ஸ்டர் மாடலை நினைவு கூறும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
டீசரின் படி எம்ஜி 2 சீட்டர் கன்வெர்டிபில் கார் ப்ரோடக்ஷன் ரெடி வடிவில் காட்சி அளிக்கிறது. இந்த காரில் கன்வெர்டிபில் ரூப் ஓபனிங், ரியர் வியூ மிரர்கள், ஓவல் வடிவ ஹெட்லேம்ப்கள், எல்இடி பார், ஸ்வான் டெயில் ஸ்டைல் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருப்பது டீசரில் தெரியவந்துள்ளது. காரின் உள்புறம் யோக் ஸ்டைல் ஸ்டீரிங் வீல், ஸ்போர்ட்ஸ் சீட்கள் உள்ளன.
இவை தவிர புதிய எம்ஜி கன்வெர்டிபில் மாடல் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இந்த காரில் 5ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். கான்செப்ட் சைபர்ஸ்டெர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை மூன்றே நொடிகளில் எட்டிவிடும் என எம்ஜி மோட்டார் தெரிவித்து இருக்கிறது. மேலும் முழு சார்ஜ் செய்தால் 800 கிலோமீட்டர் ரேன்ஜ் வழங்கும்.
அந்த வகையில் இதே கான்செப்ட்-ஐ தழுவி உருவாகி இருக்கும் எம்ஜி கன்வெர்டிபில் மாடலும் இதே போன்ற செயல்திறன் மற்றும் ரேன்ஜ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 2022 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- விரைவில் இந்த மாடலுக்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புதிய ஹெக்டார் மாடலுக்கான முதல் டீசரை வெளியிட்டு உள்ளது. ஒற்றை டீசரில் புது கார் 14 இன்ச் அளவில் போர்டிரெயிட் ஸ்டைல் செண்டர் கன்சோல்-மவுண்ட் செய்யப்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறது.
இன்போடெயின்மெண்ட் யூனிட் தவிர இந்த மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் புதிய ஹெக்டார் மாடல் ரிடிசைன் செய்யப்பட்ட டேஷ்போர்டு, நடுவில் ஏர்கான் வெண்ட்கள், சதுரங்க வடிவம் கொண்ட ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன், ரி-வொர்க் செய்யப்பட்ட செண்டர் கன்சோல், ரி-ஷேப் செய்யப்பட்ட கியர் லீவர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. புதிய ஹெக்டார் மாடலில் முற்றிலும் புது முன்புற கிரில், முன்புறம் மற்றும் பின்புறம் ரி-ப்ரோஃபைல் செய்யப்பட்ட பம்ப்பர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப் யூனிட்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் பற்றிய இதர விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படலாம்.
இந்திய சந்தையில் எம்ஜி ஹெக்டார் மாடல் 2019 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் முதல் கார் மாடலாக ஹெக்டார் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் ஆறு மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடலை அறிமுகம் செய்து உள்ளது.
- இந்த கார் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் ஹேச்பேக், எம்ஜி 4 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் முதற்கட்டமாக ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. போக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஐடி.3 மாடலுக்கு போட்டியாக புது எம்ஜி4 அறிமுகமாகி இருக்கிறது. சில நாடுகளில் புதிய எம்ஜி 4 மாடல் கியா நிரோ EV மாடலுக்கும் போட்டியாக அமைகிறது.
புதிய எம்ஜி 4 மாடல் முழு சார்ஜ் செய்தால் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் கொண்டிருக்கும். இத்துடன் அதிக இடவசதி கொண்ட இண்டீரியர் மற்றும் அதிகளவு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சீன சந்தையில் எம்ஜி 4 மாடல் எம்ஜி முலன் எனும் பெயரில் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஹேச்பேக் மாடல் எம்ஜி மோட்டார் தாய் நிறுவனமான SAIC-இன் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்பார்ம் (MSP) தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இதே பிளாட்பார்மில் எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால மாடல்களும் உருவாக்கப்பட இருக்கின்றன. இந்த பிளாட்பார்மில் காரின் வீல்பேஸ் 2650mm இல் இருந்து அதிகபட்சம் 3100mm வரையில் வழங்கப்படுகிறது. மேலும் பேட்டரியை பொருத்தவரை 40 கிலோவாட் ஹவர்-இல் இருந்து அதிகபட்சம் 150 கிலோவாட் ஹவர் வரையிலான திறன் வழங்கப்படலாம். இதில் பயன்படுத்தப்படும் பேட்டரி புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பேக் பேட்டரி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட இருக்கும் எம்ஜி 4 மாடலில் 167 ஹெச்.பி. பவர், 201 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் ரியர் வீல் டிரைவ் பவர்டிரெயின்கள் வழங்கப்பட இருக்கிறது. இதே காரின் டூயல் மோட்டார், 4 வீல் டிரைவ் யூனிட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் 167 ஹெச்.பி. பவர் கொண்ட வேரியண்டில் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படுகிறது.
51 கிலோவாட் ஹவர் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 350 கிமீ வரை பயணிக்கலாம். எம்ஜி 4 காரின் 201 ஹெச்.பி. மற்றும் 443 ஹெச்.பி. வேரியண்ட்களில் 64 கிலோவாட் ஹவர் என இருவித பேட்டரிகள் வழங்கப்பட உள்ளன. இவை முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 450 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்