search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "midnight"

    • தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.
    • நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ், குழந்தைகள் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் .

    தமிழ்த் திரை உலகில் 'லேடி சூப்பர் ஸ்டார்'-ஆக திகழ்ந்து வருபவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வருகிறார். கேரள மாநிலம் கொச்சியில் நயன்தாராவின் பெற்றோர் வசித்து வருகின்றனர்.

    தனது தந்தை குரியனின் பிறந்தநாளுக்காக நயன்தாரா குடும்பத்தோடு கொச்சி சென்றுள்ளார்.




    கடந்த சில நாட்களாக அங்கு தங்கி உள்ளார்.இந்நிலையில் நடிகை நயன்தாரா கொச்சியில் உள்ள எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு கடை முன் நள்ளிரவில் சாலையோரமாக நின்றபடி 'ஐஸ்கிரீம்' சாப்பிடும் வீடியோவை சமூக வலைதளத்தில் நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

    இதனை பார்த்த ரசிகர்களால் ஏராளமான 'லைக்ஸ்', 'கமெண்ட்ஸ்கள்' குவிந்து வருகின்றன.




    நயன்தாரா அவரது கணவர் விக்னேஷ் சிவன், இரட்டை குழந்தைகள் உயிர் மற்றும் உலகா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனியாக காரில் வந்து ஒரு கடை முன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார் நயன்தாரா.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார்.
    • சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    திட்டக்குடியில் மின்சாரம் தாக்கி நேபாள வாலிபர் பலியானார். நேபாளம் பியு தான் மாவட்டம் ஸ்வர்கத்வாரி பகுதியை சேர்ந்தவர் பேஸ் பகாதூர் பொன் மகர். இவரது மகன் ஜீபன் பொன்மகர் (வயது22) இவர் திட்டக்குடி நகராட்சி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு பெருமலை சாலையில் உள்ளஓட்டலுக்கு சொந்தமான இருப்பிடத்திற்கு சென்று விட்டார். அவரது மாநிலத்தை சேர்ந்த கிஷோர் அதிகாரி நள்ளிரவு பார்த்தபோது ஜீபன் பொன்மகர் இறந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகே எலக்ட்ரிக்கல் ஆட்டோ ஸ்கூட்டருக்கு சார்ஜ் போட்டபடி இருந்துள்ளது. சார்ஜ் ஸ்கூட்டரில் மின்சாரம் பாய்ந்து ஜீபன் பொன்மகர் இறந்ததாக கூறப்படுகிறது.

    அவரது தலையின் பின் பகுதியில் காயம் உள்ளது. எனவே அவர் மின்சாரம் தாக்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று திட்டக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஜீபன் பொன்மகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விழுப்புரத்தில் நள்ளிரவில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 16 வயது மாணவர்கள் காரை ஓட்டி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் நேற்று நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை வழிமறித்து நிறுத்தினர். காரில் 16 வயதுள்ள 2 மாணவர்கள் இருந்தனர். இதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரை சோதனை செய்தனர்.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது மாணவர்கள் கூறும்போது,

    எங்கள் 2 பேரின் மாமா ஸ்ரீதர் விழுப்புரத்தில் வசித்து வருகிறார். அவர் மற்றும் கார் உரிமையாளருடன் விழுப்புரத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு நள்ளிரவில் வந்தோம். பின்னர் எங்கள் 2 பேரையும் காருக்குள் இருக்குமாறு கூறி விட்டு ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகியோர் ஓட்டலுக்கு சென்று விட்டனர். நாங்கள் காரை ஓட்ட ஆசைப்பட்டோம். இதனால் காரை அங்கிருந்து மாறி மாறி ஓட்டி வந்தோம் என்றனர்.

    காரை சிறுவர்கள் ஓட்ட அனுமதியில்லை. எனவே இனிமேல் நீங்கள் கார் ஓட்ட கூடாது என்று மாணவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்து அனுப்பி வைத்தார்.

    இதையடுத்து சிறுவர்களை தனியாக காரில் அமர வைத்து சென்ற ஸ்ரீதர் மற்றும் கார் உரிமையாளர் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதித்தனர். இரவில் சிறுவர்கள் காரை ஓட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஒரு ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    புதுடெல்லி:

    சமையல் எரிவாயு சிலிண்டர் அத்தியாவசியங்களில் ஒன்றாகிவிட்டது. இதன்விலையை சர்வதேச சந்தையை மையப்படுத்தி எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

    மாதந்தோறும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை போன்றவற்றை அடிப்படையாக கொண்டு விலை நிர்ணையிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த மாதம் ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 2 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்று சமையல் எரிவாயுவின் விலை 1 ரூபாய் 76 காசு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. #LPGPriceHike
    தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்கு ஏதுவாக கைதி ஒருவரின் ஜாமீன் வழக்கை நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பை ஐகோர்ட்டு நீதிபதி வழங்கியுள்ளார். #HighCourtJudge #bail
    சென்னை:

    சென்னை ராயுபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்சன். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் கடந்த 23-ந் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் டேவிட்சனின் தந்தை விஜயகுமார் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக டேவிட்சனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி டேவிட்சனின் உறவினர்கள் வக்கீல் ஏ.கே.கோபாலை அணுகினர்.

    ஐகோர்ட்டு விடுமுறை நாட்களில் அவசர மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட வக்கீல், பதிவாளரை அணுகி அவசர நிலையை எடுத்துக்கூற வேண்டும். வக்கீலின் கோரிக்கை உடனடியாக விசாரிக்கப்பட வேண்டியதுதானா? என்பதை பதிவாளர் பரிசீலித்து தலைமை நீதிபதியிடம் எடுத்துக்கூறுவார். அதன்பின்பு, தலைமை நீதிபதியிடம் உரிய அனுமதி பெற்று ஏதாவது ஒரு நீதிபதி மூலம் விசாரணை நடத்த பதிவாளர் ஏற்பாடு செய்வார்.

    இளம் வக்கீலான ஏ.கே.கோபாலுக்கு இந்த விவரம் தெரியாததால் ஜாமீன் மனுக்களை விசாரித்து வரும் நீதிபதி ஜெகதீஷ்சந்திராவின் வீடு இருக்கும் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு சென்றார். அப்போது நீதிபதி வீட்டில் இல்லை என்றும், குடும்பத்தினருடன் வெளியில் சென்றிருப்பதாகவும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் வக்கீல், நீதிபதியின் வீட்டு முன்பு காத்திருந்தார். இதற்கிடையே இரவு 10 மணிக்கு நீதிபதி வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பு, இளம் வக்கீல் ஒருவர் நிற்பதை பார்த்து விவரம் கேட்டார். அப்போது வக்கீல் கோபால், தனது கட்சிக்காரரான டேவிட்சன் என்பவரது தந்தை இறந்து போனதாகவும், இறுதி சடங்கில் கலந்து கொள்ள அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

    அப்போது நீதிபதி, பதிவாளர் மூலம் தான் இந்த மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இந்த விவரம் தனக்கு தெரியாது என்று நீதிபதியிடம், வக்கீல் கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து நீதிபதி ஜெகதீஷ்சந்திரா மனிதாபிமான அடிப்படையில் தலைமை நீதிபதியிடம் தொடர்பு கொண்டு உரிய அனுமதி பெற்று அந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து அரசு வக்கீலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை குற்றவியல் வக்கீல் எமிலியாஸ் அறிவுறுத்தலின் பேரில் அரசு வக்கீல் முகமது ரியாஸ், டேவிட்சன் மீதான வழக்கு விவரங்களை போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்டு நீதிபதி வீட்டுக்கு வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 11 மணிக்கு நீதிபதி அந்த மனுவை விசாரித்தார். நள்ளிரவு 12.30 மணிக்கு விசாரணை முடிந்தது. இறுதியில், டேவிட்சனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பொதுவாக ஐகோர்ட்டு உத்தரவு நகல் தட்டச்சு செய்து வழங்கப்படும். நள்ளிரவு நேரம் என்பதால் ஜாமீன் உத்தரவு நகலை தட்டச்சு செய்வதற்கு அலுவலர்கள் யாரும் இல்லை. இதனால் நீதிபதி தனது கைப்படவே ஜாமீன் உத்தரவை எழுதி அதை ஐகோர்ட்டு பணியாளர் மூலம் புழல் சிறை சூப்பிரண்டுக்கு அனுப்பி வைத்தார்.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை புழல் சிறையில் இருந்து டேவிட்சன் விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதுபோல் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஜாமீன் மனுவை நீதிபதி ஜெகதீஷ்சந்திரா நள்ளிரவில் விசாரித்து தீர்ப்பு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    விழுப்புரத்தில் நள்ளிரவு டெய்லர் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.
    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் எதிரே சுதாகர் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இங்கு குமார் (வயது 45) என்பவர் டெய்லர் கடை வைத்துள்ளார்.

    ரம்ஜான் பண்டிகையை யொட்டி இவரது கடைக்கு புதிய துணிகளை தைக்க ஏராளமானவர்கள் கொடுத்திருந்தனர்.

    நேற்று இரவு 12 மணி அளவில் குமார் தைத்த துணிகளை அயன் பாக்ஸ் மூலம் தேய்த்து கொண்டிருந்தார். துணிகளை தேய்த்து முடித்த அவர் அயன் பாக்சை ஆப் செய்யாமல் அப்படியே வைத்து விட்டு கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

    சிறிது நேரத்தில் அந்த அயன்பாக்ஸ் சூடேறி அருகில் இருந்த துணிகளில் தீப்பிடித்தது. பின்னர் மளமளவென்று தீப்பிடித்தது.

    டெய்லர் கடையில் இருந்து புகை வெளியே வருவதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடனே இதுகுறித்து அவர்கள் விழுப்புரம் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    நிலைய அலுவலர் ஜெயகணேஷ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    இந்த தீ விபத்தில் டெய்லர் கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    மற்றொரு சம்பவம்...

    விழுப்புரம் பழைய பஸ் நிலையம் எதிரே தங்கும் விடுதி உள்ளது. இங்கு நேற்று இரவு 8.30 மணிக்கு மீட்டர் பாக்சில் திடீரென்று தீப்பிடித்தது.

    இதையறிந்ததும் அங்கிருந்த ஊழியர் செல்வராஜ் என்பவர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் வழங்கப்பட்டது. #SterliteProtest #Thoothukudi
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

    பேரணியாக சென்ற பொதுமக்களை போலீசார் தடுத்தபோது அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டார். மாவட்டத்தில் அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை திரும்பியது. இன்று காலை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது. 

    இதற்கிடையே, காவல்துறை தலைமை இயக்குநர் (டி.ஜி.பி) டி.கே ராஜேந்திரன் நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
    அரசு பொது மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார். அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நள்ளிரவு முதல் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தால் தூத்துக்குடியில் முடக்கப்பட்ட இணைய சேவை நேற்று நள்ளிரவு முதல் மீண்டும்  வழங்கப்பட்டது. #SterliteProtest #Thoothukudi
    ×