என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "migraine headache"
- பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும்.
- மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும்.
பொதுவாக தலைவலி சர்க்கரை நோயின் அறிகுறியாக இல்லாவிட்டாலும் அதை உதாசீனப்படுத்த கூடாது. பிரைமரி மற்றும் செகண்டரி என தலைவலி இரு வகைப்படும். தலைவலியே முதன்மை நோயாக வருவது பிரைமரி தலைவலி (மைக்ரேன், கிளஸ்டர் தலைவலி) ஆகும்.
வேறொரு நோயின் வெளிப்பாடாக ஏற்படுவதை செகண்டரி தலைவலி என்று கூறுகிறோம். செகண்டரி தலைவலி ஏற்பட முக்கிய காரணங்களாக கீழ்க்கண்டவை கருதப்படுகின்றன.
நீரிழிவு நோய், ரத்த நாளங்கள் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், சைனஸ் பிரச்சினை, நோய் தொற்று, மன அழுத்தம், போதை பழக்கம், கண் ஒளி விலகல் பிழை, செர்விக்கல் ஸ்பாண்டிலோசிஸ் (கழுத்து எலும்பு தேய்மானம்).
பொதுவாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் எபிநெப்ரின் மற்றும் நார்எபிநெப்ரின் போன்ற ஹார்மோன் அளவுகளின் மாற்றங்கள், தலைவலியை உண்டாக்குகிறது.
ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, சிறுநீர் அதிகம் வெளியேறி, நீரிழப்பு ஏற்பட்டுவதாலும், ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளாலும் தலைவலி ஏற்படுகிறது. இது பெரும்பாலும் தலையின் பின்பகுதியில் வலியை ஏற்படுத்தும்.
ரத்த சர்க்கரை அளவு குறையும்போது மூளைக்கு குளுக்கோஸ் செல்வது குறைவதால் தலைவலி ஏற்படும். இது தலையின் வலது அல்லது இடது பக்கத்தில் வலியை ஏற்படுத்தும்.
அதுமட்டுமில்லாமல் சில பொதுவான காரணங்களாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு தலைவலி ஏற்படலாம். பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களால் தலைவலி வரலாம்.
சிலருக்கு தூக்கத்தில் பற்களை கடிக்கும் பழக்கத்தால் தூங்கி எழுந்தவுடன் தலைவலி ஏற்படும். மேலும் சிலருக்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், மது, குளிர்பானங்கள் ஆகியவை ஒவ்வாமையை ஏற்படுத்தி தலைவலியை தூண்டலாம்.
இதற்கு தீர்வாக கீழ்க்கண்ட வாழ்க்கை நடைமுறை மாற்றங்களை பின்பற்றுங்கள்.
1) சரியான நேரத்தில் தூங்குதல்
2) சரியான நேரத்தில் உணவு அருந்துதல்
3) புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழித்தல்
4) அதிக நேரம் லேப்டாப் மற்றும் மொபைல் பயன்படுத்துவதை தவிர்த்தல்
5) ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருத்தல்
6) காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து அதிகமுள்ள ஆரோக்கிய உணவு முறையை பின்பற்றுதல்
7) தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப் பயிற்சி செய்தல்
8) நீரிழப்பை தடுக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடித்தல்
சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் மருத்துவரை உடனே கலந்தாலோசித்து தகுந்த பரிசோதனைகளை செய்து என்ன காரணத்தினால் தலைவலி அடிக்கடி ஏற்படுகிறது என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
ஆயினும் மேலும் சில தகவல்களையும் அறிந்தால் மைக்ரேன் தலைவலியினை முடிந்தவரை தவிர்த்து விடலாம். தூக்கமின்மை மைக்ரேன் தலைவலியினைத் தூண்டும் குறைந்தது அன்றாடம் 8 மணிநேர தூக்கம் என்பது அவசியம். முறையான குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க சென்று குறைவான குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவதும் மைக்ரேன் தலைவலியினைத் தவிர்க்க மிக அவசியம். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் பகலில் தூங்குவது, இரவில் வெகுநேரம் விழித்து காலையில் வெகுநேரம் சென்று எழுவது போன்றவற்றினைச் சொல்வார்கள். மைக்ரேன் பாதிப்பு ஏற்கனவே உடையவர்கள் மேற்கூறியவாறு செய்யும் பொழுது மைக்ரேன் பாதிப்பு உடனடி அதிகமாக ஏற்படுகிறது.
* பலரும் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்ளெட் போன்றவை இல்லாது வாழ்வே இல்லை என்று நினைக்கின்றார்கள் தூங்கச் செல்வதற்கு முன்கூட அல்லது படுத்துக் கொண்டே தூங்கும் வரை நீல ஒளி உபயோகிப்பவருக்கு மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
* சிலருக்கு சில வகை சோபாக்கள், உடைகள், போர்வைகள் அதிலுள்ள டிசைன்கள், வரிகள், வட்டங்கள் போன்றவை மூளையிலுள்ள கார்டெக்ஸ் பகுதியினைக் தூண்டி மைக்ரேன் வலியினை உருவாக்குகின்றன என ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே எளிமையான டிசைன் கொண்ட உடைகள், சோபாக்கள், படுக்கை விரிப்புகளை உபயோகிப்பது நல்லது.
* திடீரென தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றம் மைக்ரேன் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆக மேற்கூறிய குறிப்புகளை அறிந்து மைக்ரேன் தலைவலி தாக்குதலை தவிர்ப்போம்.
அதிக வியர்வை: வெய்யில் கொளுத்தும் நேரத்தில் மிக அதிக வியர்வை என்பது சாதாரணமாக ஏற்படும் நிகழ்வுதான். அடிக்கடி சிறிதளவு தண்ணீர் குடித்துக் கொண்டே இருங்கள். என்பதுதான் அறிவுரையாக இருக்கும். இதனால் உடலின் நீர்சத்து சீராய் இருக்கும். பல பாதிப்புகள் இதனால் தவிர்க்கலாம்.
வியர்வை இயற்கையான ஒன்று. தேவையான ஒன்று. உங்கள் உடலை குளுமை செல்கிறது. உடலில் அதிக உஷ்ணம் ஏற்படும் பொழுது நரம்பு மண்டலம் வியர்வை சுரப்பிகளை தூண்டி வியர்வை மூலம் உடல் உஷ்ணத்தினை வெளியேற்றுகிறது. 99 சதவீதம் வியர்வை நீர் தான் சிரிதளவு உப்பும். தாது உப்புகளும் வெளியேறுகின்றன. அதிக நச்சு (அ) கழிவுகள் கல்லீரல், நுரையீரல், சிறு நீரகம் மூலமாகவே வெளியேறுகின்றன.
இது சாதாரண சூழ்நிலையில் நிகழும் ஒன்று. ஆனால் மிக அதிக அளவில் வியர்வை வெளியேறும் பொழுது உடலில் உள்ள சத்து குறைந்து தாது உப்புகள், உள்ள இவற்றிலும் குறைபாடு ஏற்படுகிறது.
உஷ்ணம், கோடை, ஸ்ட்ரெஸ் போன்ற நேரங்களில் அதிக வியர்வை ஏற்படும். கை மடிப்பு, கால்கள், கைகள், முகம் இந்த இடங்களில் வியர்வை அதிகம் ஏற்படும்.
* பரம்பரை
* உடல் அளவு
* தொடர் உடற்பயிற்சி இவையும் அதிக வியர்வைக்கு காரணம் ஆகின்றன.
* காபி, ஆல்கஹால் இவை உடலின் உஷ்ணத்தினை உயர்த்தி வியர்வையினை உருவாக்கும்.
* காரசாரமான உணவுகளில் வியர்வை கொட்டும் ஆயினும் அதிக வியர்வை கொட்டுவதனை நீங்கள் உணர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெறவும்.
* சிறிது நேரம் ஷவரில் இருப்பது.
* டீ, காபி, மது இவற்றினைத் தவிர்ப்பது.
* கார, சார மசாலா உணவுகளைத் தவிர்ப்பது ஆகியவை சங்கடமான அதிக வியர்வையினைத் தவிர்க்கும்.
* அதிக எடையினைக் குறைத்தல் நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்.
* கொழுப்பு உணவுகளைத் தவிர்த்தல்.
* மருத்துவ உதவியோடு மட்டுமே மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் போன்றவை பல விதங்களில் உடல் நலனை பாதுகாக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்