search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "military man"

    குரும்பூர் அருகே சொத்து பிரச்சினையில் மோதி கொண்டது தொடர்பாக ராணுவவீரர் மற்றும் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குரும்பூர்:

    குரும்பூர் அருகே உள்ள அம்மன்புரத்தை சேர்ந்தவர் நயினார். இவருக்கு 2 மனைவி. முதல் மனைவிக்கு ரவிகுமார் என்ற மகன் உள்ளார். இவர் ராணுவவீரராக உள்ளார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நயினார் தற்போது முதல் மனைவியுடன் வசித்து வருகிறார். 2-வது மனைவி சந்தனமாரியம்மாள்.

    இந்நிலையில் நயினார் தனது சொத்துக்களை பிரித்துக் கொடுத்துள்ளார். இதையடுத்து சந்தனமாரியம்மாள் தனது பங்கு சொத்துக்களை விற்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவருக்கும், ரவிக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஒருவருரை ஒருவர் மாறி, மாறி தாக்கிக் கொண்டனர். இதில் இருவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும், சந்தனமாரியம்மாளை ஆத்தூர் தனியார் மருத்துவமனையயிலும் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து குரும்பூர் போலீசில் ரவிக்குமார், சந்தனமாரியம்மாள் தரப்பில் தனித்தனியாக புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.#tamilnews
    திருச்சியில் மனைவியை துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், தன்னையும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருச்சி:

    திருச்சி ரெயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஊழியராக பணியாற்றி வருபவர் ரஜினிகுமாரி(வயது 33). இவர் கல்லுக்குழி சுப்பராயன் தெருவில் வசித்து வருகிறார். ரஜினிகுமாரியின் கணவர் ரஞ்சித்குமார். இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை ரஞ்சித்குமார், ரஜினிகுமாரி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ரஜினிகுமாரியை சுட்டார். இதில் ரஜினிகுமாரியின் கழுத்தில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    அப்போது ரஞ்சித்குமார் துப்பாக்கியால் தன்னுடைய தலையில் சுட்டுக்கொண்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் நடந்த சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் உயிருக்கு போராடிய ரஜினிகுமாரியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீசார், ரஜினிகுமாரியின் வீட்டிற்கு சென்று ரஞ்சித்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ராணுவ வீரர் மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    ×