என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister M. Subramanian"

    • திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் .
    • தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் நாளை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை திறக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வருகிறார். இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சியின் 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நாளை (சனிக்கிழமை) மதியம் 12 மணிக்கு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சிக்கு உட்பட்ட கரட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பூர் மாவட்டத்தில் 12 இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள், பிரசவ காத்திருப்பு அறை மற்றும் சித்தா பிரிவு ஆகிய கட்டிடங்களை திறந்து வைக்க உள்ளார்.

    அதன்படி உடுமலை தாலுகாவில் எரிசனம்பட்டி, வெங்கிட்டாபுரம், மானுப்பட்டி, சோமவாரப்பட்டி, ஆண்டியூர், கே.வல்லகொண்டாபுரம், அவினாசி தாலுகாவில் முறியாண்டம்பாளையம், தாராபுரம் தாலுகாவில் டி.ஆலம்பாளையம், வெள்ளகோவில் கரட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் ஆரம்ப துணை சுகாதார நிலையங்கள் திறக்கப்படுகிறது.

    உடுமலை தாலுகாவில் அமராவதிநகரில் பிரசவ காத்திருப்பு அறை மற்றும் மடத்துக்குளம், சாவடிபாளையத்தில் சித்தா பிரிவு கட்டிடங்கள் திறக்கப்படுகிறது. இதில் திருப்பூர் தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
    • உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், உணவு பாதுகாப்புத்துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு கைபேசி செயலியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாதுகாப்பான உணவு என்கின்ற வகையில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகளை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

    இந்த இணையதளத்தில், உணவு பாதுகாப்புத்துறையைப் பற்றிய அனைத்து தகவல்கள் குறிப்பாக அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்பு விவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரிகள், அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், சுகாதார கேடு விளைவிக்கும் உணவு பொருட்களின் தடை உத்தரவு, துறை ரீதியான உத்தரவுகள், கோர்ட்டு வழக்குகளின் உத்தரவு ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். உணவு வணிகர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் அதன் விதிகள், விதிமுறைகள் 2011 பற்றிய இணையதள இணைப்பும் வழங்கப்பட்டு உள்ளது.

    உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களை நிவர்த்தி செய்ய 9444042322 என்ற வாட்ஸ்-அப் புகார் எண் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதை மேம்படுத்தும் விதமாக உணவு பாதுகாப்புத்துறை மூலம் நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் 'தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி' (TN Food safety Consumer App) என்ற பெயரில் பொதுமக்கள் எளிதாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.

    ரசாயன கற்களைக் கொண்டு பழுக்க வைக்கப்படும் பழங்களை உட்கொள்வதால் அனைத்து வயதினருக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுகிறது என்பது தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 4 ஆயிரத்து 122 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் 16 ஆயிரத்து 209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.9.2 லட்சமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் லால்வீனா, தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் டாக்டர் ச.உமா, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் டாக்டர் சண்முகக்கனி, உணவு பாதுகாப்புத்துறை இயக்குனர் மற்றும் கூடுதல் ஆணையர் டாக்டர் தேவபார்த்தசாரதி, துணை இயக்குனர் டாக்டர் பிரதீப் வ.கிருஷ்ணகுமார், சென்னை நியமன அதிகாரி டாக்டர் சதீஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    • மருத்துவருக்கு அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளியின் குடும்ப உறுப்பினர், பணியில் இருந்த மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மருத்துவர் கிழே சுருண்டு விழுந்தார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அதே மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தாயாருக்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று மருத்துவர் மீது விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 

    புறநோயாளி என்ற சீட்டை பெற்றுக் கொண்டு உள்ளே நுழைந்த விக்னேஷ் மருத்துவரை சரமாறியாக குத்தியுள்ளார். அவசர பிரிவில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. மருத்துவர் இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

    • சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
    • 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நேற்று உருவான ஃபெஞ்சல் புயல், காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே புதுச்சேரி அருகே இன்று இரவுக்குள் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன்படி சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில், தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். 

    • தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.
    • HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    HMPV தொற்று குறித்து சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்

    அப்போது அவர் கூறியதாவது:-

    HMPV தொற்று 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிப்பட்ட வைரஸ். குளிர்காலத்தில் பரவக்கூடிய வைரஸ், இதன் பாதிப்பு 6 நாட்கள் வரை உள்ளது.

    தமிழகத்தில் HMPV வைரஸால் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர்.

    HMPV தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×