search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Ponmudi case"

    • வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு.

    விழுப்பரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக, அனுமதியை மீறீ சுமார் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் சாட்சிகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய அக்டோபர் மாதம் 14ம் தேதி விர அவகாசம் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டுள்ளார்.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்களாக சேர்க்கப்பட்டு இதுவரை 51 சாட்சியம் பெறப்பட்ட நிலையில் 30 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இதனால் கூடுதல் சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    • ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளது.
    • வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவு.

    அமைச்சர் பொன்முடி வழக்கில் ஓய்வு பெற்ற கனிம வளத்துறை துணை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியம் அளித்துள்ளதாகல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அவர், கட்டாயப்படுத்தி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாக ஓய்வு பெற்ற கனிம வளத்துறை இயக்குனரான சுந்தரம் பிறழ் சாட்சியை அளித்துள்ளார்.

    ஓய்வு பெற்ற அதிகாரி சுந்தரம் உள்பட இதுவரை 6 சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், வழக்கு விசரணையை வரும் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் மாவட்ட முதன்மை ஆமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×