என் மலர்
நீங்கள் தேடியது "Minister Regupathy"
- தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை.
- இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேரளா அரசு சிலந்தியாற்றில் அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர், நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் மாட்டார்கள்.
போதைப்பொருட்கள் புழக்கத்தை எந்தளவுக்கு தடுத்திருக்கிறோம் என்பதை நாங்கள் எவ்வளவு பிடித்திருக்கிறோம் என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழக முதல்வர் போதைப்பொருள் நடமாட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டார். இதனால் மாணவர்களின் வாழ்வு கெடும் என்று உணர்ந்தவர் நமது முதல்வர். போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிப்பது தான் எங்களது லட்சியம். ஒடிசாவில் தமிழர்களை திருடர்கள் என்று தமிழர்களுக்கு விரோதமாக பேசுகின்றனர்.
தமிழ்நாடுக்கு வந்தால் தமிழர்களை போற்றுகின்றனர். இது என்னவென்று தெரியவில்லை. நாங்கள் இரட்டை நிலைப்பாடு எடுப்பது கிடையாது. என்றைக்கும் ஒரே நிலைப்பாடு தான்.
குரங்கு கையில் பூ மாலை கிடைத்தால் அது பிச்சுக் கொண்டே தான் இருக்கும், அதுபோல் நமது கெட்ட நேரம் இது போன்ற ஆளுநர் நமக்கு வந்து வாய்த்துள்ளார். ஏற்கனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சர்ச்சை கிளம்பியது திரும்பவும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும், வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
இந்தியா கூட்டணி இந்த முறை 300ல் இருந்து 370 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சி அமைக்கும். இதில் எந்தவித மாற்று கருத்தும் கிடையாது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
- பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
- பெண்கள் அதிகம் கல்வியறிவு பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.
* வழக்கை மறைப்பதற்கான அவசியம் தி.மு.க. அரசுக்கோ, முதலமைச்சருக்கோ இல்லை.
* பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
* கட்சிக்காரர்களே தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* தி.மு.க. தலைவர்கள் வெளியில் செல்லும்போது யார் அருகில் வந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என கண்காணிக்க முடியாது.
* ஒரு கூட்டம், விழா நடக்கிறது என்றால் அமைச்சர்களுக்கு அருகில் வந்து பலர் புகைப்படம் எடுப்பது சகஜம்தான்.
* ஞானசேகரன் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் மா.சுப்பிரமணியத்துடன் போட்டோ எடுத்திருக்கலாம்.
* தமிழ்நாட்டில் பெண்கள் துணிச்சலாக வந்து கல்வி கற்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றனர்.
* மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதை அரசியலாக்கி பெண்கள் வெளியில் வந்து உயர்கல்வி பயில்வதை தடுக்க பார்க்கிறார்கள்.
* பெண்கள் அதிகம் கல்வியறிவு பெறும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பாலியல் வழக்குகளில் சிக்கிய பா.ஜ.க.வினருக்கு அக்கட்சியினர் ஆதரவு பேரணி நடத்துகின்றனர்.
* நன்னடத்தை காரணத்தை கூறி பா.ஜ.க.வை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.
* தி.மு.க. பொறுப்பேற்ற பின் அனைத்து உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் திறந்து வருகிறார் முதலமைச்சர்.
* அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்ததால் தி.மு.க. ஆட்சியில் கூடுதலாக மகளில் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
* பெண்கள் வாழ்வதற்காக பாதுகாப்பான மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.
- டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி?
- சுரங்கம் அமைக்க முயலும் ‘ஒன்றிய பாஜக அரசை’ ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார்.
சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"டங்ஸ்டன் போராட்டம் மோடி அரசுக்கு எதிரானது என்றுகூட தெரியாதவரா பழனிசாமி? சுரங்கம் அமைக்க முயலும் 'ஒன்றிய பாஜக அரசை' ஒரு வார்த்தை கூட குறிப்பிட்டுவிடாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி"
'மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய நடைபயணப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது' என சொல்லியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மதுரை- திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிக்கம்பட்டி டோல்கேட் பகுதியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் நடை பயணமாக சென்று தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், சிட்டம்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் போராட்டகாரர்கள் திரண்டனர். அங்கிருந்து நடை பயணம் செல்ல முயன்ற போராட்டக்காரர்களிடம் 'வாகனங்களில் சென்று மத்திய தபால் நிலையத்தில் போராட்டம் நடத்துங்கள்' என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால், அதனை போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அவர்களை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போராட்டம் நடத்த அனுமதி வழங்கிய காவல்துறை, அதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைதான், 'காவல்துறை அனுமதியை மறுத்துள்ளது' என இட்டுக்கட்டி பொய் சொல்லியிருக்கிறார் பழனிசாமி.
டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் ஒன்றிய அரசுக்கு எதிராக விவசாயிகள் அமைதி வழியில் பேரணி மற்றும் போராட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதோடு விவசாயிகளுக்கு எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் முழுமையான பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் அதை வைத்து, தன் சுயநல அரசியல் வண்டியை ஓட்டலாம் என கழகுபோல காத்திருந்த பழனிசாமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இந்நிலையில் வழக்கம் போல பொய் பெட்டியை திறந்து தமிழ்நாடு அரசு விவசாயிகள் பேரணிக்கு அனுமதியே கொடுக்கவில்லை என விதைக்க ஆரம்பித்துவிட்டார் பொய்ச்சாமி பழனிசாமி.
முதுகெலும்புள்ள எதிர்க்கட்சி தலைவராக இருந்திருந்தால் விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியதை குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் தனது பதிவில் தப்பித்தவறி கூட டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க முயலும் 'ஒன்றிய பாஜக அரசை' பற்றி ஒரு வரி அல்ல ஒரு வார்த்தை கூட இடம்பெறாதபடி பார்த்து பார்த்து பதிவிட்டுள்ளார் பழனிசாமி. பழனிசாமியின் வீரம் எல்லாம் அவ்வளவுதான். நாம் அவரை கோழை என்று சொன்னால் குப்புறப்படுத்து அழுவார்!

மோடி அரசை கண்டிக்கும் வகையில்தான் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தல்லாகுளம் மத்திய தபால் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் முன்னெடுத்தார்கள். இந்த விஷயம் எல்லம் லாவகமாக மறைத்துவிட்டு பொய் முலாம் பூச முற்பட்டிருக்கிறார் பழனிசாமி. ஆனால், அந்த பொய் ஒவ்வொரு முறையும் அம்பலப்பட்டு நிற்கிறது.
மதுரை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என சொன்னதோடு மட்டுமல்லாது தான் முதலமைச்சராக உள்ளவரை ஒன்றிய அரசு டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க விட மாட்டேன் என நெஞ்சுரத்தோடு கூறி டங்கஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானத்தையும் நிறைவேற்றினார் முதலமைச்சர்.
ஆனால் அதிமுகவோ டங்கஸ்டன் சுரங்கம் அமைக்க காரணமான சட்ட திருத்தத்தை ஒன்றிய அரசு மாநிலங்களவையில் கொண்டு வந்தபோது வழிய சென்று ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டு உரிமையை ஒன்றிய அரசின் காலடியில் வைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்தது. பழனிசாமியின் அந்த துரோகத்தை காலம் உள்ளவரை மக்கள் மறக்கமாட்டார்கள்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி மக்களை கருணையேயின்றி காக்கை குருவிகளை சுடுவது போல சுட்டுக்கொன்ற எடப்பாடி பழனிசாமி, இன்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசுகிறேன் என நடிப்பது "கொடூர கொலைகாரன் நல்லொழுக்க வகுப்பெடுப்பதற்கு ஒப்பானது.
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த ஆளுநரை கண்டிக்க துப்பில்லை, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி, வெள்ள நிவாரண நிதி என எந்த நிதியையும் ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டிக்க வக்கில்லை. துணைவேந்தர் தேடுதல் குழுவை இனி ஆளுநரே நியமிப்பார் என UGC கொடுத்த ஷாக் புத்தியில் ஏறவில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் என்ற இருப்பை காட்டிக்கொள்ள மட்டும் ஆளாய் பறக்கிறார்.
அதிமுகவின் பொது செயலாளர் என்பதையும் மறந்து பாஜக தலைவரைப் போல நடந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு நலனுக்காக எந்த குரலும் கொடுக்காமல் தனது அரசியல் ஆதாயத்தை மட்டுமே முதன்மையாக கொண்டு பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்து செயல்பட்டு வரும் பழனிசாமிக்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ரகுபதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
- அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர்.
சென்னை:
தமிழகத்தில் சமீப காலமாக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை, கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பள்ளி மாணவி ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை, திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லை, ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை, திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுதொடர்பாக, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது:-
* புகார் தந்தால் திமுக ஆட்சியில் நடவடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை, தைரியம் வந்ததால் தான் அதிக புகார் வருகிறது.
* பெண்கள் திமுக ஆட்சியில் புகார் அளிக்க தைரியமாக வெளியே வருகின்றனர்.
* அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்கள் புகார் அளிக்க அச்சப்பட்டனர் என்றார்.
- அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
- பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
சென்னை:
அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அ.தி.மு.க கலகலத்து போயுள்ளது.
* தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது.
* தமிழகம் முழுவதும் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுகிறது.
* 2026 தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டம் தான் ஈரோடு கிழக்கு வெற்றி
* கருத்துக்கணிப்புகளில் திமுக அரசுக்கு ஆதரவு அலை வீசுவது கண்கூடாக தெரிகிறது.
* இப்போது தேர்தல் வைத்தாலும் திமுக கூட்டணி வெல்லும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர்.
* எதிரிகள் ஒன்று சேர்ந்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியை வீழ்த்த முடியாது.
* எதிரிகளே இல்லை என்று திமுக அரசு என்றுமே சொல்லவில்லை. எதிரிகளுக்கும் வாக்கு வங்கியுள்ளது என்றே சொல்கிறோம்.
* அதிமுக கூட்டணியின் வாக்கு சதவீதம் 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைந்து நம்பிக்கை இழந்து வருகிறது.
* சில சம்பவங்களை மிகைப்படுத்தி கூறினாலும் மக்கள் தமிழகத்தில் மகிழ்ச்சியாக உள்ளது தெளிவாகிறது.
* ஆட்சியில் தவறுகள் தெரியவந்தால் உடனுக்குடன் முதலமைச்சர் சரிசெய்து வருகிறார்.
* ஆட்சியில் உள்ளோர் மீது குற்றம்சாட்டுவது இயல்புதான். ஆனால் முதலமைச்சர் மக்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறார்.
* செங்கோட்டையன் அதிமுகவின் சீனியர்தானே அதனால்தான் அவ்வாறு பேசியுள்ளார்.
* அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கல்லில் கை வைப்பதற்கு கூட அண்ணாமலையால் முடியாது.
* பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.
- தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
- ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில், தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக்கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள்.
துரதிருஷ்டவசமாக ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது. மொழியை படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மும்மொழி கொள்கையும் மூக்கறுப்பட்டு நிற்க போகிறது என்று அமைச்சர் ரகுபதி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
தமிழகம் பொருளாதாரத்திலும், கல்வியிலும் பெற்றுள்ள வளர்ச்சியை பொறுக்க முடியாமல் வெறுப்பை உமிழ்கிறார் கவர்னர். தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சி அனைத்துமே இருமொழிக்கொள்கையால் சாதித்தவை.
தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணித்து உள்ளே நுழையலாம் எனும் ஆதிக்கவாதிகளின் சதியை அறியாதவர்களா தமிழர்கள்?
சனாதனம், சமஸ்கிருதத்தை காலூன்ற செய்திட குட்டிக்கரணம் போடும் கவர்னரின் நடவடிக்கைகள் தமிழ் மண்ணில் வேறூன்றவில்லை. அப்படித்தான் மும்மொழி கொள்கையும் மூக்கறுபட்டு நிற்க போகிறது. மொழித் தேர்வு எது? மொழித் திணிப்பு எது? என்பது எங்களுக்கு தெரியும், இந்த நாடகங்கள் எல்லாம் இங்கே எடுபடாது என்று கூறியுள்ளார்.
- சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
- உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் சீமான் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
* சீமானை சமாளிப்பது எங்களுக்கு தூசு மாதிரி.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க. தலையிடவில்லை
* உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பாலியல் வழக்கு நடைபெற்று வருகிறது.
* சீமான் பாலியல் வழக்கில் தி.மு.க.வின் பின்புலம் எதுவும் இல்லை என்றார்.
- நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
- தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள த.வெ.க. தலைவர் விஜய், நீங்கள், நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த தி.மு.க. அரசை தேர்ந்தெடுத்தோம். ஆனா அவங்க இப்படி ஏமாத்துவாங்கன்னு இப்ப தானே தெரியுது. எல்லாமே இங்கே மாறக்கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே
2026-ல் நாம எல்லாம் சேர்ந்து மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய இவர்களை மாற்றுவோம். அதற்கு மகளிர் தினமான இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம் என்று தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரகுபதி கூறியதாவது:
* த.வெ.க.-வை ஒரு பொருட்டாகவே பார்க்கவில்லை.
* நீங்கள் தான் அதை ஒரு பொருட்டாக பேசிக்கொண்டு உள்ளீர்கள்.
* நாங்கள் அரசியல் கட்சிகளைப் பற்றி தான் பேச விரும்புகிறோம்.
* சிறுபான்மையினரை ஏமாற்ற முடியாது. அவர்களுக்கு நண்பர் யார்? நீலிக்கண்ணீர் வடிப்பவர் யார் என்று தெரியும்
* தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியையும் சிறுபான்மையினர் நம்ப தயாராக இல்லை என்று கூறினார்.