என் மலர்
நீங்கள் தேடியது "Minister Speech"
- திருச்சியில் நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தமிழ் மொழியை தொட்டுப்பார்க்க வேண்டாம் என்றார்.
- தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர்
திருச்சி:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்சி தாராநல்லூர் கீரைக்கொல்லை பகுதியில், பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டலம் 3-ன் தலைவருமான எம்.மதிவாணன் தலைமையில் நடைபெற்றது. வட்டச் செயலாளர்கள் பாண்டியன், மனோகரன், சிலம்பரசன், சுப்ரமணி ஆகியோர் வரவேற்றுப் பேசினார்கள். ராவணன், சிவக்குமார், ஜெயசந்திரன், சங்கர், சந்திரன், முகம்மது முபாரக் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
இதில் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசியதாவது:-
தமிழ் மொழிக்கு செம்மொழி என்று அந்தஸ்தை பெற்றுத் தந்தவர் கலைஞர். ஒன்றிய அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் நாம் எடுத்து கொள்ளலாம் என நினைக்கின்றனர். பழமையான மொழிகளில் தமிழ் மொழி தான் முதல் இடம் அதை தொட்டு பார்க்க வேண்டும் என நினைக்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் கலைஞரின் வாரிசு ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார். எனவே தமிழ் மொழியை தொட்டு பார்க்க வேண்டும் என நினைத்து கூட பார்க்க வேண்டாம் என பேசினார்.
கூட்டத்தில் திண்டுக்கல் லியோனி, இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.சேகரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார் நன்றி கூறினார்.