என் மலர்
நீங்கள் தேடியது "minor woman"
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி மாமரத்து பட்டியைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இதே மில்லில் அய்யலூர் குளத்துப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 22) என்பவர் வேன் டிரைவராக உள்ளார்.
வேனில் தொழிலாளர்களை அழைத்து வரும் போது அந்த பெண்ணுக்கு கார்த்திக்குடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலிப்பதாக கூறி வந்துள்ளார்.
சம்பவத்தன்று வேலைக்கு வந்த பெண்ணை கார்த்திக் கடத்தி சென்று விட்டார். இது குறித்து பெண்ணின் தாய் பெருமாயி வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். மைனர் பெண் என்பதால் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். வேன் டிரைவர் கார்த்திக்கை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று மைனர் பெண்ணை மீட்டார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் புஷ்பலதா, உறவினர் நவநீதகிருஷ்ணன், மைனர் பெண்ணின் பெற்றோர் முத்து புதியவன்-சுப்பு லட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் உத்திரபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.