என் மலர்
நீங்கள் தேடியது "Mippidathi Amman Temple"
- கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
- தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்பிடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கோவிலின் தை தேரோட்ட திருவிழா கடந்த 15 -ந் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் திருவீதி உலாவும் நடைபெற்றன .
விழாவின் 9-ம் நாளான நேற்று ஓம்சக்தி பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர் பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி, மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர். புளியங்குடி டி.எஸ்.பி. அசோக் தலைமையில் கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜய்குமார், புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கடையநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.தேரோட்டத்தை காண்பதற்க்கு சுற்று வட்டார கிராமபகுதி மக்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.