என் மலர்
நீங்கள் தேடியது "Missing Cell Phone"
- தென்காசி மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான 463 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
- சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சைபர் கிரைம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான 463 செல்போன்களை போலீசார் மீட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
அதில், சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது தென்காசி பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பங்கேற்று உரியவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார்.