search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvCSK"

    • எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது.
    • நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

    மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய மகிழ்ச்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    இளம் விக்கெட் கீப்பரான டோனியின் அந்த கடைசி ஓவரின் ஹாட்ரிக் சிக்ஸ் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. அது வித்தியாசம் என்பதை நிரூபித்தது. இது போன்ற மைதானத்தில் எங்களுக்கு 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக தேவைப்பட்டது. நாங்கள் பேட்டிங் செய்தபோது மிடில் ஓவர்களில் பும்ரா சிறப்பாக பந்து வீசினார்.

    மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்த போதிலும், நாங்கள் எங்கள் பந்து வீச்சின் திட்டத்தை வெளிப்படுத்தியது சிறந்ததாக இருந்து என நினைக்கிறேன். நாங்கள் பவர்பிளேயில் 60 ரன்கள் எடுத்திருக்கனும். எங்களுடைய மலிங்காவின் பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தேஷ்பாண்டே, ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.

    ரகானேவுக்கு சிறிய அளவில் காயம் இருந்ததால் தொடங்க வீரராக களம் இறக்கினால் சிறப்பானதாக இருக்கும் என நினைத்தோம். எந்த இடத்தில் களம் இறங்கினாலும் எனக்கு சரியானதுதான். அது ஒரு கேப்டனாக கூடுதலாக பொறுப்பு.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • ஷிவம் டுபே, ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசினர்.
    • எம்.எஸ். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்தார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது.

    சென்னையிடம் தோல்வியடைந்த பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

    207 இலக்கு என்பது எட்டக்கூடியதுதான். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். திட்டத்திலும் அணுமுறையிலும் ஸ்மார்ட்டாக இருந்தனர். தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை ஸ்டம்பிற்கு பின்னால் இன்று சொல்லிக்கொடுக்கும் டோனி என்ற நபரை அவர்கள் பெற்றிருந்தனர். அது அவர்களுக்கு உதவியாக இருந்தது.

    பதிரனா பந்து வீசி இரண்டு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்துவதற்கு முன்பு வரை நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம். அடுத்த நான்கு போட்டிகளை எதிர்நோக்கி இருக்கிறோம். அதை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். தீவிரம் அதிகமாக இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

    முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 206 ரன்கள் குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் டுபே அரைசதம் அடித்தனர். டோனி கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸ் விளாசினார். மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா சதம் அடித்திருந்தார். பதிரான நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    • 2008-ல் சிஎஸ்கே அணிக்கெதிராக ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார்.
    • அதன்பின் ரோகித் சர்மா தற்போது சிஎஸ்கே அணிக்கெதிராக சதம் அடித்துள்ளார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்தது. பின்னர் 207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 186 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    அந்த அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா சதம் அடித்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தார். அவர் 63 பந்துகளில் 11 பவுண்டரி, ஐந்து சிக்ஸ் உடன் 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் மிகப்பெரிய ஆட்டமாக பார்க்கப்படும். இதில் யார் சிறப்பாக விளையாடுகிறார்கள் என்பது குறித்து ரசிகர்கள் அறிய ஆவலாக இருப்பார்கள்.

    இரு அணிகளுக்கு இடையில் ஐபிஎல் தொடங்கிய முதல் வருடமான 2008-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் சனத் ஜெயசூர்யா சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு சுமார் 16 வருடங்கள் கழித்து ரோகித் சர்மா தற்போது சதம் அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்கு எதிராக சதம் அடித்த இரண்டாவது மும்பை இந்தியன்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த போட்டியில் பதிரனா 4 விக்கெட் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். டோனி 4 பந்தில் 3 சிக்சருடன் 20 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கேப்டனாக 2-வது அரை சதத்தை ருதுராஜ் பதிவு செய்தார்.
    • மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    மும்பை:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் மோதி வருகின்றன. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி சென்னையின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரகானே 5 ரன்னில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரச்சின் 21 ரன்னில் வெளியேறினர்.

    இதனையடுத்து ருதுராஜ் - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் அரைசதம் விளாசினார். கேப்டனாக அவரின் 2-வது அரைசதம் இதுவாகும். அவர் 69 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே அரைசதம் விளாசினார்.

    இந்த தொடரில் மோசமாக விளையாடி வரும் மிட்செல் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி 4 பந்துகளுக்கு களம் புகுந்த டோனி ஹட்ரிக் சிக்ஸ் விளாசி அசத்தினார்.

    இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் ஹர்திக் 2 விக்கெட்டும் ஷ்ரேயாஸ் கோபால், ஜெரால்ட் கோட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

    மும்பை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான 29-வது ஐபிஎல் லீக் போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

    இந்நிலையில், சி.எஸ்.கே .அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி பிசிசிஐ தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றார். அங்கு வைக்கப்பட்டு இருந்த 2011 உலகக் கோப்பை டிராபி மற்றும் சாம்பியன் டிராபி கோப்பையைக் கண்டு மகிழ்ந்தார். அப்போது உலகக் கோப்பையை டோனி தொட்டு மகிழ்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை டிராபியுடன் போஸ் கொடுத்தார்.

    கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி டோனி தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது.

    மேலும், மும்பையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ்.தோனி மற்றும் ரோகித் சர்மா மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசிய புகைப்படங்கள் வைரலானது.

    • முதலில் ஆடிய மும்பை 157 ரன்கள் எடுத்தது.
    • ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    மும்பை:

    16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

    இன்று மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார்.

    கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

    சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×