என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "MK Azhagiri"
- சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலூரில் உள்ள சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2வது முறையாக நேரில் சென்று சந்தித்து, உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், துரை தயாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் வருகையொட்டி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை இன்று சந்தித்து பேசினர்.
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர்.
மேலூர்:
தி.மு.க. கூட்டணி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் சு.வெங்கடேசன் இன்று மேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநிலத்திலேயே மதுரை மாவட்டம் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. இதனை மாற்ற பாடுபடுவேன்.
அதேபோல் மேலூர் பகுதி விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ள நிலையில் தற்போது விவசாயம் மிகவும் பாதித்துள்ளது. இதனை மாற்றி விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரவும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவும் வெற்றி பெற்றவுடன் பாடுபடுவேன்.
இரண்டொரு நாட்களில் கட்சியின் வெற்றிக்காக மு.க.அழகிரியை சந்திக்க உள்ளேன்.
அழகிரி மட்டுமல்ல, மதுரை பாராளுமன்ற தொகுதியிலுள்ள 15 லட்சம் வாக்காளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டவுள்ளேன்.
தொழில் வளர்ச்சியில் மதுரை முன்னேற்றமடையும் வகையில் தேர்தல் அறிக்கை விரைவில் தயார் செய்யப்பட்டு பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection #DMK #MKAzhagiri
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்பதற்காக முத்தலாக் சட்ட மசோதா பாராளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மேல்-சபையில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பெண்களின் உரிமையை பாதுகாக்க முன்வராமல் எதிர்ப்பது முறையல்ல
புதுச்சேரி கவர்னர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரசாரும், கம்யூனிஸ்டுகளும் கூறி வருகிறார்கள். மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு கிரண்பேடி முன்னுரிமை வழங்குகிறார்.
புதுச்சேரி அரசில் தலையிடாமல் தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு செயல்படுகிறார். அவரை திரும்பப்பெற வேண்டும் என்பது புதுச்சேரி அரசின் கையாலாகாததனம்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை கொண்டு வருவது நியாயமானது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க இந்த தடை அவசியம். அதை எதிர்க்க கூடாது.
பெட்ரோல்-டீசல் விலை ஏற்ற, இறக்கத்தை வைத்து அரசியல் நடத்த பா.ஜனதா விரும்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரி பா.ஜனதாவில் சேரப்போவதாக கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘‘பா.ஜனதாவில் மு.க.அழகிரி சேருவது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை’’ என்று கூறினார். #ponradhakrishnan #MKAzhagiri #bjp
மதுரை:
பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. கவுஸ்பாட்சா, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், நிர்வாகிகள் உதயகுமார், எம்.எல்ராஜ், வாவா புகர்தீன், பக்ருதீன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
அப்போது மன்னன் நிருபர்களிடம் கூறுகையில், மு.க.அழகிரியையும், எங்களையும் தி.மு.க.வில் சேர்க்க வேண்டும். இதற்காக தொண்டர்களை திரட்டி, இன்று முதல் கிளை கழகம் முதல் ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். அதனை தி.மு.க. தலைமைக்கு மின்னஞ்சல் மற்றும் பேக்ஸ் மூலம் அனுப்ப உள்ளோம். அழகிரியின் வீட்டில் இருந்து கையெழுத்து இயக்கம் தொடங்குகிறது என்றார்.
முன்னதாக மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டிருந்த போது, தி.மு.க.வினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது அஞ்சா நெஞ்சன் வாழ்க, கலைஞர் வாழ்க என அழகிரி ஆதரவாளர்கள் கோஷமிட்டதால் சிறிது நேரம் பதட்டம் காணப்பட்டது. #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, கருணாநிதியின் உயிரோடு இருக்கும் வரையில் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இதன் பின்னர் தி.மு.க.வில் சேருவதற்கு அழகிரி மேற்கொண்ட முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து மதுரையில் தனது வீட்டில் வைத்து ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசனை நடத்தினார்.
செப்டம்பர் 5-ந்தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாகவும், இதில் 1 லட்சம்பேர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்துள்ள மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார்.
சென்னை அண்ணா சாலை அருகில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி ஊர்வலமாக செல்வதற்கு மு.க.அழகிரி சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முறைப்படி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்து போலீசார் அழகிரியின் பேரணிக்கு அனுமதி வழங்கி உள்ளனர்.
திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகில் இருந்து அழகிரி தலைமையில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னையில் அழகிரி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். நாளை நடைபெறும் இந்த பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது. பேரணிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மு.க.அழகிரி, நேற்று காலையிலேயே மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். நாளை காலையில் பேரணியில் பங்கேற்கும் அழகிரி தனது அடுத்தக்கட்ட முடிவு என்ன? என்பதை அறிவிக்க உள்ளார். #MKAzhagiri
கருணாநிதியின் 30-வது நினைவு நாளையொட்டி, சென்னையில் வருகிற 5-ந்தேதி அமைதி பேரணி நடத்தப் போவதாக மு.க. அழகிரி அறிவித்துள்ளார்.
அமைதி பேரணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று மதுரையில் இருந்து விமானத்தில் சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கே:- தி.மு.க.வின் புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுள்ளார். அவரை சந்திப்பீர்களா?
ப:- சந்திக்க மாட்டேன்
கே:- சென்னையில் நீங்கள் நடத்த இருக்கும் அமைதி பேரணியில் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்?
ப:- 5-ந்தேதி பத்திரிகையாளர்களை சந்தித்து அப்போது முடிவை தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மு.க.அழகிரியின் பேரணிக்கு சென்னை போலீஸ் கமிஷனரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலித்து அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி போலீஸ் அதிகாரி கூறுகையில், மு.க.அழகிரியின் பேரணிக்கு எழுத்துபூர்வமாக அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பேரணி செல்லக்கூடிய சாலையில் வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை. அதனால் பேரணிக்கு உறுதியாக அனுமதி கிடைக்கும் என்றார். #DMK #MKStalin #MKAzhagiri
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்த 30-வது நாளில் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப்போவதாக அவரது மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அறிவித்தார்.
தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக ஆலோசனையிலும் ஈடுபட்டார். முதலில் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த மு.க.அழகிரி திடீரென மு.க.ஸ்டாலின் தலைமையை ஏற்றுக் கொள்வதாகவும், தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
5-ந்தேதி சென்னையில் தி.மு.க. உண்மை தொண்டர்களுடன் அமைதி பேரணி அண்ணா சிலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் என்றார்.
இந்த நிலையில் மு.க.அழகிரி மதுரையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் சென்னை புறப்பட்டார். அப்போது பேரணியின் எழுச்சி எப்படி இருக்கும் என்று நிருபர்கள் கேட்டனர். 5-ந்தேதி நடக்கும் பேரணியை தொடர்ந்து 6-ந்தேதி தொண்டர்களின் எழுச்சி அனைவருக்கும் தெரியவரும் என்று பதில் அளித்தார். #DMK #MKAzhagiri
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி போர்க்கொடி உயர்த்தி வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.
வருகிற 5-ந்தேதி தனது ஆதரவாளர்களை திரட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி செல்லப்போவதாகவும் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். மாநிலம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.
கடந்த சில நாட்களாக மதுரையில் உள்ள தனது வீட்டில் இருந்தபடியே ஆதரவாளர்களிடம் பேரணியை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
நேற்று நிருபர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் வந்தால் வேட்பு மனுதாக்கல் செய்வோம் என்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
இன்றும் மு.க.அழகிரி நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அப்போது நிருபர்கள், 5-ந்தேதி பேரணியில் தி.மு.க. தலைவர்கள் யாராவது பங்கேற்க உள்ளார்களா? என கேள்வி எழுப்பினர். யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை என மு.க.அழகிரி தெரிவித்தார். #DMK #MKAzhagiri #MKStalin
சென்னையில் வருகிற 5-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மதுரையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இன்று 2-வது நாளாக மு.க.அழகிரி வெளி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் பதவியை மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக ஏற்பதில் தீவிரம் காட்டுகிறார். தி.மு.க. தலைவர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. யார் தலைவர் என்ற கேள்விக்கும் நான் பதில் சொல்ல முடியாது.
செப்டம்பர் 5-ந் தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு பிறகு மக்கள் என்னை எப்படி ஏற்பார்கள் என்று பாருங்கள். இந்த பேரணியால் தி.மு.க.வுக்கு கண்டிப்பாக ஆபத்து இருக்கும்.
அமைச்சர் செல்லூர் ராஜூ தேர்தல் பணியை பாராட்டியுள்ளார். இதில் இருந்தே தி.மு.க.வினர் என்னை புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க.வில் கதவு மூடப்பட்டது. இந்த பேரணி நடத்துவது நீங்கள் தி.மு.க.வில் இணைவதற்கு தான் என்று அமைச்சர் உதயகுமார் கூறியிருக்கிறாரே என்று கேட்டதற்கு “அதனால் என்ன தவறு? தி.மு.க. தாய் கழகம் தானே. அது அண்ணா, கலைஞரால் உருவானது. அதில் நான் இணைந்தால் தவறில்லை என்று மு.க.அழகிரி பதில் அளித்தார். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்