search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mmotorcycle"

    • கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.
    • கொள்ளையர்கள் வாகன சோதனையில் சிக்கினர்.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியை சேர்ந்தவர் ரம்யா (வயது 32). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் கடந்த மாதம் 1- ம் தேதி அன்று வேலை முடிந்து மொபட்டில் வீடு திரும்பினார்.

    அவர் ஆலக்குடி ரெயில்வே ஸ்டேஷன் அருகே சென்ற போது பின்னால் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரம்யா அணிந்திருந்த தங்க செயின் மற்றும் செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ரம்யா வல்லம் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் கொள்ளையர்களை பிடிக்க வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு நித்யா மேற்பார்வையில் வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பு உதவி சப்இன்ஸ்பெக்டர சாமிநாதன், போலீஸார் புவனேஸ், ராஜதுரை, ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று தஞ்சை அருகே எட்டாம் நம்பர் கரம்பை அருகே தனிப்படை போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் தஞ்சை அண்ணா நகரை சேர்ந்த கபினேஷ் (வயது 21 ), தஞ்சை நாவலர் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (23) என்பதும், ரம்யாவிடம் செல்போன் மற்றும் நகைகளை பறித்து சென்ற கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து வல்லம் இன்ஸ்பெ க்டர் செந்தில்கு மார் மற்றும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கபினே ஷ்,ரவிச்ச ந்திரன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சை கிளை சிறையில் அடைத்தனர்.

    மேலும் இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடை ய மேலும் 2 பேரை போலீ சார் தேடி வருகின்றனர்.

    ×