என் மலர்
நீங்கள் தேடியது "Mobilephone"
- 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
- ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர்.
இப்போது கையில் உள்ள மொபைல்போன்களில் வழியாக ஆபாச இணையதளங்களில் பலரும் ஆபாச படங்களை பார்க்கின்றனர். 18 வயது பூர்த்தியடையாத இளம் வயதினருக்கும் எளிதாக மொபைல்போன்களில் ஆபாச படங்கள் கிடைக்கிறது.
இந்நிலையில், 18 வயதிற்கும் குறைவான இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்துநிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் அறிமுகமாகவுள்ளது.
ஸ்பெயினில் வசிக்கும் 15 வயதிற்குட்பட்டோரில் பாதிப் பேர் ஆபாச இணையதளங்களில் படங்கள் பார்க்கின்றனர் என்று தெரிவித்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பார்ன் பாஸ்போர்ட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேசினார்.
இதன்படி ஸ்பெயின் நாட்டில் வசிப்பவர்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த பார்ன் பாஸ்போர்ட்ஆப்பை பதிவிறக்கம் செய்யவேண்டும். அந்த ஆப் அவர்களது வயதை உறுதிப்படுத்தும். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு அவர்களது வயது சரிபார்க்கப்படும். விரைவில் இந்த ஆப் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளர்களின் வயது சரிபார்க்கப்பட்ட பின்பு, அவர்களுக்கு மாதந்தோறும் 30 கிரெடிட்களை வழங்கும். ஒவ்வொரு கிரெடிட்டும் ஆபாச இணையதளங்களை அணுகுவதற்கு QR குறியீட்டை உருவாக்கும்.
- 2014-ம் ஆண்டில் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தினர்.
- தற்போது இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அனைத்து செல்போன் நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கட்டணத்தை உயர்த்தின. அது மத்திய அரசுக்கு தெரியுமா? இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு ரூ.34,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியாதா? என்றார்.
அப்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:
செல்போன் கட்டணம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்துவதற்கு போட்ட முதலீடே அதற்கு காரணம்.
ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 98 சதவீத மாவட்டங்களில் 82 சதவீதம் பேரை சென்றடைந்துள்ளது.
நம் நாட்டில் 2014-ல் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி பிராட்பேண்ட் (வேகம்) இணையத்தின் விலை ஒரு ஜி.பி.க்கு ரூ.270 ஆக இருந்தது. இது தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.9.70 ஆக குறைந்துள்ளது.
நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளே இந்தக் கட்டண குறைவுக்கு காரணம். இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.
தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அழைப்பு கட்டணமும், டேட்டா கட்டணமும் மலிவாக உள்ளது என தெரிவித்தார்.
