என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "modern facilities"
- சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்றது.
- புதிய ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும்.
திருப்பூர் :
நாளை முதல் சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவைக்கு அதிவேக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டிற்கு வரப் போகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் சேவை நாட்டிலேயே அதிவேகமாக செல்லக் கூடியது, உள்நாட்டி லேயே தயாரிக்கப்பட்ட ெரயில் பெட்டிகள், சென்னை ஐசிஎப் தொழிற்சா லையில் தயாரிப்பு பணிகள் எனப் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இதில் இடம்பெற்றுள்ள வசதிகள் பயணிகள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
கிட்டதட்ட விமான சேவையை போன்றது எனச் சொல்லலாம். முதலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் முழுவதுமாக குளிர்சாதன வசதி கொண்டது. முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க லாம். கட்டணம் சற்று அதிகம் தான். இந்த ெரயிலில் தானியங்கி கதவுகள் இடம்பெற்றுள்ள ன. மேலும் வைபை வசதி இருக்கிறது. ஜிபிஎஸ் சேவையும் உள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் எல்.இ.டி டிவி பொருத்தப்பட்டுள்ளது.
பயோ கழிவறைகள் காணப்படுகின்றன. சோதனை ஓட்டத்தின் போது 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று ஆச்சரியப்படுத்தியது. இவ்வளவு வேகத்தில் ரெயிலின் உட்புறத்தில் பெரிய அளவில் அதிர்வுகளோ அல்லது குலுங்கவோ இல்லை. அதிகபட்சமாக 1,128 பயணிகள் வரை செல்ல முடியும். இதுவரை 11 வந்தே பாரத் ரெயில் சேவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
12வது ெரயில் சேவையாக சென்னை- கோவை வழித்தடம் அமையவுள்ளது. மற்ற வந்தே பாரத் ெரயில்களில் 12 பெட்டிகள் இருக்கும் நிலையில், இந்த புதிய ெரயிலில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து திருப்பூர் வழியாக கோவை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயிலின் நேர அட்டவணை வெளியாகி பயணிகள் மத்தியில் எதி ர்பார்ப்பை கூட்டியுள்ளது.
முதலில் கோவையில் காலை 6 மணிக்கு புறப்படும். நண்பகல் 12.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் ெரயில் நிலையத்தை வந்தடையும். இடையில் திருப்பூர் (6.30), ஈரோடு (7.17), சேலம் (8.08) என 3 ெரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் பிற்பகல் 2.20 மணிக்கு ெரயில் புறப்படுகிறது. கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.
இடையில் சேலம் (6.03), ஈரோடு (7.02), திருப்பூர் (7.43) ஆகிய ெரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இடைப்பட்ட ெரயில் நிலையங்களில் 2 அல்லது 3 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் என்பது கவனிக்கத்தக்கது. சென்னை மற்றும் கோவைக்கு இடையிலான 495.28 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ெரயில் கடந்து விடும். வாரந்தோறும் புதன்கிழமை மட்டும் ரெயில் இயங்காது. மற்ற 6 நாட்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. பனியன் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் தொழில் விஷயமாக சென்னைக்கு அடிக்கடி செல்ல வேண்டியது உள்ளது. இதனால் கோவை சென்று விமானத்திலும், சிலர் கார்களிலும், ரெயில்களிலும் பயணிப்பா ர்கள். ரெயில்களை பொருத்தவரை டிக்கெட் கிடைக்காதது ஒருபுறமிருக்க தொழிலதிபர்கள் பலர் நவீன வசதிகளை எதிர்பார்ப்பார்கள். அந்த வசதிகள் வந்தே பாரத் ரெயிலில் இருப்பதால் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலுதவி அறை, மின்வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றலாம்
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன மயமாக்களுடன் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 12.02.2020 அன்று பூஜை போடப்பட்டு 2 ½ ஆண்டுகளுக்கு பின் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும். பஸ் நிலையத்தின் குடிநீர் தேவைக்கு ஆர்.ஓ. பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.
பஸ் நிலைய தண்ணீர் தேவைக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், பாலாறு குடிநீர் மற்றும் பஸ் நிலையத்திலேயே உள்ள கிணற்று நீரையும் பயன்படுத்த உள்ளனர்.
மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் 2 நுழைவு வாயில் உள்ளது. பஸ் நிலையத்தின் மொத்த மின் தேவை 200 கிலோ வாட் ஆகும். இதில் ஒரு சிறிய குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சோலார் போர்டு மூலம் பெற உள்ளனர். மின் சிக்கனத்திற்க்காக முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்பட உள்ளது. முகப்பு கட்டிடத்தின் இரண்டு பக்கமும் 2 லிப்டுகள், 4 படிக்கட்டுகள் உள்ளது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.
பஸ் நிலையம் முழுவதும் 24 சி.சி.டி.வி. கேமிராக்ள் பொறுத்தப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறையும் உள்ளது. தாய்மார்கள் பாலுட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, டிரைவர்கள் ஓய்வு அறை, காவல் கண்காணிப்பு கோபுரங்கள், 7 கழிவறைகள் உள்ளது. மேலும் பஸ் நிலையை மழை நீர் வெளியேறி பூமிக்கு அடியில் சேமிக்கும் வகையில் 2 மீட்டர் ஆழத்துக்கு வடிகால் அமைப்பு ஏற்படுத்த ப்பட்டுள்ளது.
கழிவு நீர் வெளியேற 250 மீட்டர் தொலைவிற்க்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர்கள் முத்துமண்டபம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து மறு சுழற்சி செய்யப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு அரசு மதிப்பீடு தயார் செய்து வருவதாகவும் விரைவில் பொது ஏலம் விட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னை தலைமைச் செயலகத்துக்கு தமிழ்நாடு போக்குவரத்துக்கழகத்தின் (கோவை) ஒரு பேருந்து மற்றும் சிற்றுந்து நேற்று கொண்டு வரப்பட்டிருந்தது. அவற்றின் கட்டுமானம் மற்றும் நவீன வசதிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டேவிதார் உடனிருந்தனர்.
பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்த பேட்டி வருமாறு:-
2 ஆயிரம் புதிய பஸ்களை வாங்க அரசு ஆணையிட்டு இருந்தது. அதன்படி, புதிய கூண்டுகள் கட்டி தயாராக உள்ள முதல் சிற்றுந்து மற்றும் சாதாரண பேருந்து ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். இதில் பல்வேறு நவீன வசதிகள் உள்ளன. 2 ஆயிரம் பஸ்களும் இந்த வடிவமைப்பில் இருக்கும்.
இந்த பஸ்கள் நல்ல தரமாக கட்டப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நிதி ஆண்டில் போக்குவரத்துக்கழகங்களுக்கு மேலும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க இசைவு தெரிவித்துள்ளார்கள். மிக விரைவில் தமிழக போக்குவரத்துக்கழகங்களில் 5 ஆயிரம் புதிய பஸ்கள் இயங்கும்.
இதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்னவென்றால், தரமான வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, சீட் சாய்வை 105 டிகிரியில் இருந்து 115 ஆக உயத்தியிருப்பது, 2 அவசர கால வழிகள் போன்றவை உள்ளன.
ஜி.பி.எஸ். வசதி இருப்பதால் இலவச வைபை தொழில்நுட்பத்தையும் எதிர்காலத்தில் கொண்டு வரமுடியும். அடுத்த பஸ் நிறுத்தத்தை பஸ்சில் தெரிவிக்கும் வசதியையும் கொண்டுவர வழிவகை ஏற்பட்டுள்ளது.
குடிபோதையில் டிரைவர் இருப்பதை கண்டறியும் கருவி, அவரது இருக்கைக்கு அருகே வைக்கப்பட்டுள்ளது. இதை மாதிரியாக பொருத்தி இருக்கிறோம். இன்னும் பல வசதிகள் கொண்டுவரப்படும்.
பேருந்து ரூ.24.7 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி இருந்தாலும் மக்களுக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டியது அரசின் கடமை. அடமானத்தில் உள்ள சொத்துகளை மீட்கும் நடவடிக்கை படிப்படியாக செய்யப்பட்டு வருகிறது.
போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. படுக்கை வசதி, ஏ.சி. வசதி, கழிவறை, மிதவை போன்ற வசதிகள் இனி வரக்கூடிய பஸ்களில் இருக்கும். தனியாருக்கு போட்டியாக அவை அமையும்.
சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு சிற்றுந்து வசதிகளை கொண்டு செல்லும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. 200 பேட்டரி பஸ்களை வாங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய அரசுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்