என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mohan"
- கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கியவர் மோகன். இடையில், பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர், சமீபத்தில் மீண்டும் நடிக்க துவங்கினார். இவர் நடிப்பில் உருவான ஹரா என்ற திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது.
இதோடு விஜய் நடிப்பில் உருவாகி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்) படத்திலும் நடிகர் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கோட் படம் குறித்து பேசிய மோகன், "இந்த படம் சிறப்பாக இருக்கும். விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் விருந்தாக அமையும். நான் இந்த படத்தில் தாடியுடன் நடித்திருக்கிறேன்."
"வெங்கட் பிரபு தனது படங்களில் நடிக்க என்னை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனாலும், என்னால் அவற்றில் நடிக்க முடியவில்லை. விஜய் மிகவும் எளிமையான நபராக இருக்கிறார். இந்த குழுவுடன் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.
- வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன். இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசத்தை மையமாகக் கொண்டு ஆக்சன் திரில்லர் ஜானரில் ஹரா படம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இப்படம் ஐபிசி செக்ஷன்களை பற்றியும், சிறுவர்களுக்கு குட் டச் பேட் டச் போன்றவற்றில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது. அதைதொடர்ந்து தற்பொழுது படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியுள்ளது.
கதையில் மோகனின் மகளுக்கு ஒரு விஷயம் நடக்கிறது. அதற்கு காரணமானவர்களை சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு எப்படி பழி வாங்கிகிறார் என்பதே கதைக்களம்.
மோகனை வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மோகன் 2008 ஆம் ஆண்டு வெளியான சுட்ட கோழி திரைப்படத்திற்கு பிறகு ஹரா படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.
- ஜூன் 7 -ந் தேதி படம் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.
80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.
இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதுப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தை விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாருஹாசன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தற்போது தயாராகி உள்ளது.
வருகிற ஜூன் 7 -ந் தேதி இப்படம் தியேட்டர்களில் 'ரிலீஸ்' செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் மோகன் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ளார்.
- கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்தவர் நடிகர் மோகன். 1980-க்களில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகர் மோகன், இடையே படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு "ஹரா" என்ற படத்தில் நடித்துள்ள மோகன், விஜய் நடிப்பில் உருவாகி வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" படத்திலும் நடித்துள்ளார். நடிகர் மோகன் இன்று (மே 9) பிறந்தநாள் கொண்டாடுகிறார்.
இந்த நிலையில் நடிகர் மோகனுக்கு கோட் படக்குழு சிறப்பு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடிகர் விஜய், மோகன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட்.
- விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் மகிழ்ச்சியில் திளைத்துப்போய் உள்ளனர்.
லியோவை தொடர்ந்து `தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' (`THE GOAT') படத்தில் நடித்து வருகிறார் விஜய். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இரண்டு வேடங்களில் விஜய் நடிப்பதாக கூறப்பட்டாலும், கோட் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி பற்றிய அப்டேட் இதுவரை வெளியாகவில்லை.
சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடந்து வருகிறது.
இந்நிலையில் கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடப்பதாக புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. கிளைமேக்சில் 15 நிமிடங்கள் கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் விஜயும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஏற்கனவே கேப்டன் விஜயகாந்த் ஏஐ டெக்னாலஜி மூலம் கேமியோ ரோலில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான தகவலால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் அதிர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும் திளைத்துப்போய் உள்ளனர்.
இதனிடையே, அமரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட சிவகார்த்திகேயன், தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் 'எஸ்கே 23'படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார்.
- இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்குப் பிறகு ரஜினி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
ரஜினி படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மேலும் ரசிகர்களிடம் இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.இதில் ரஜினி தனது கைகளில் தங்க கடிகாரம் - கை விலங்கு அணிந்து இருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவலும் பரவியது.
மேலும் தலைவர் -171 படத்துக்கு 'கழுகு' என்று 'டைட்டில்' பெயர் வைக்கப்பட உள்ளது எனவும் தகவல் வெளியானது. இந்த டைட்டில் பெயரை லோகேஷ் கனகராஜ் பரிந்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே 'கழுகு" என்ற பெயரிலான படத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்து 1981- ம் ஆண்டு அந்த படம் வெளியானது.
மேலும் தலைவர் -171 படம் தங்கக் கடத்தல் பின்னணி கதையை கொண்டு உருவாக உள்ளதாகவும் இந்தப் படத்தில் ரஜினி மாபியா டானாக நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தலைவர் 171 படத்தில் 80 களில் ரஜினிகாந்தின் பாக்ஸ் ஆபிஸ் பட போட்டியாளரான நடிகர் மோகனை இப்படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் அணுகினார். தற்போது ரஜினிக்கு வில்லனாக நடிக்க மோகன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
மோகன் நடிப்பதற்கான சம்பள பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்ததும் நடிகர் மோகன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என தெரிகிறது.
இதே போல தலைவர் 171 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி சுவாரஸ்யமான கேரக்டர் ரோலில் நடிக்க உள்ளார். மேலும் இப்படத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் 'கேமியோ' பாத்திரத்தில் நடிக்க வைக்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. இப்படத்திற்கான 'டைட்டில்' ஏப்ரல் 22 -ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.
- நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.
'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
மேலும், சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. 'ஹரா' படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.
மேலும் அவர், "கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்டப்படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் 'ஹரா' வெளியாகும்" என்று கூறினார்.
- கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60).
- இவர் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள அப்பு (கமல்) நண்பர்களில் ஒருவராக நடித்தவர் மோகன் (வயது 60). பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மேலும் நான் கடவுள், அதிசய மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காலப் போக்கில் மோகனுக்கு திரைப்பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் யாசகம் எடுத்து அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் இன்று காலை பெரிய ரத வீதியில் மோகன் இறந்து கிடப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து விரைந்து சென்ற போலீசார் இறந்த மோகனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த மோகனுக்கு 2 சகோதரர்கள், 5 சகோதரிகள் உள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இலவச ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அனுப்பி வைக்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'.
- இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார்.
'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'ஹரா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், 'ஹரா' படத்தில் சமூக பொறுப்பு மிக்க டானாக சாருஹாசன் நடிக்கிறார். 93 வயதாகும் சாருஹாசன் சிறிதும் தொய்வில்லாமல் தனது காட்சிகளை சிறப்பாக நடித்து கொடுத்துள்ளதாக இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சாருஹாசன் கதாநாயகனாக நடித்த 'தாதா 87' திரைப்படத்தை சில வருடங்களுக்கு முன் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியது குறிப்பிடத்தக்கது.
'ஹரா' படத்தில் சாருஹாசனின் பங்களிப்பு குறித்து பேசிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி, "93 வயதில் இந்தளவு உற்சாகத்துடன் நடிக்கும் நடிகர் வேறெங்காவது இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி தான். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் 'ஹரா' படத்தில் சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் டான் பாத்திரத்தில் சாருஹாசன் நடித்துள்ளார். அவரது காட்சிகளை எந்த வித சோர்வோ தாமதமோ இல்லாமல் மிகுந்த உற்சாகத்துடன் நடித்து கொடுத்தார். அவருக்கும், அவரது மகள் திருமதி சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மிக்க நன்றி," என்று கூறினார்.
'ஹரா' திரைப்படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.
- விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹரா' படத்தில் மோகன் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
'ஹரா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் மற்றும் 'கயா முயா...' என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'ஹரா' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்பை தொடர்ந்து அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதுதொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்களும் பல்வேறு விளக்கங்கள் கொடுத்த போதிலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதை ஏற்பதாக இல்லை.
இந்த திட்டத்தை எதிர்த்து பலர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ளப்படாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், அதனை தடை செய்ய வேண்டும் எனவும் தருமபுரியைச் சேர்ந்த நில உரிமையாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து இன்று தனது பதில் மனுவை சென்னை சேலம் 8 வழிச்சாலை திட்ட இயக்குனர் மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பதில் மனுவில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே இந்த சாலைத்திட்டம் கொண்டு வரப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் சுமார் 700 கோடி ரூபாய் அளவிலான எரிபொருள் செலவை குறைக்க முடியும் என்றும், அவசரக்காலங்களில் திருவண்ணாமலை, தருமபுரி மக்கள் சென்னை செல்ல இந்த சாலை உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சென்னை சேலம் இடையேயான பசுமை வழிச்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தனது பதில் மனுவில் திட்ட இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்