என் மலர்
நீங்கள் தேடியது "Monsoon Disease"
- சுரண்டை நகராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்தும் படி அரசு அதிகாரிகள் முறையாக கட்டிட அனுமதி வழங்க வேண்டும்.
- குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைக்கப்படும் தண்ணீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடந்தது.துணைத் தலைவர் சங்கரா தேவி முருகேசன், ஆணையாளர் பாரி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் 26-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயபாலன் பேசும்போது, டெண்டர் விடப்பட்ட பணிகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறினார்.
20-வது வார்டு கவுன்சிலர் பரமசிவன் பேசும்போது, சுரண்டை நகராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்தும் படி அரசு அதிகாரிகள் முறையாக கட்டிட அனுமதி வழங்க வேண்டும். அனுமதி இல்லாத பகுதிகளில் பத்திரத்தை வைத்து தீர்வை ரசீது வழங்கும் பட்சத்தில் உரிய கட்டணத்தை மட்டுமே வாங்க வேண்டும்.பொது மக்களை தேவையில்லாமல் நகராட்சி நிர்வாகம் அலைய வைக்கக்கூடாது என்றார்.
15- வது வார்டு உறுப்பினர் பொன்ராணி கூறும்போது, தொடர்ந்து தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாகவும் எந்த திட்டப் பணிகளும் நடைபெறவில்லை எனவும் குற்றம் சாட்டினர்.சுரண்டை நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு அமைக்கப்படும் தண்ணீர் தொட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், சாலை வசதியை மேம்படுத்த வேண்டும் எனவும் பொதுவான கோரிக்கையாக வார்டு உறுப்பினர்கள் வைத்தனர்.
தொடர்ந்து பேசிய நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் கூறும் பொழுது நகராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் நடைபெறும்,நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு வருகிறது.
தற்பொழுது மழைக்கால மாக இருப்பதால் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.டெண்டர் விடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைவில் தொடங்கும் என கூறினார். குடிநீர் மற்றும் சாலை பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த நகர் மன்றம் செயல்படும் என கூறினார்.