search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "month"

    • இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.
    • அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

    மர்மங்கள் நிறைந்ததாகவும் மனிதர்களுக்கு என்றும் ஆர்வமூட்டுவதாகவும் உள்ள பிரபஞ்சத்தின் அற்புதங்கள் இயற்கையின் பிரமாண்டத்தை நமக்கு நினைவூட்டுவதாக வருடம் முழுவதும் புதுப்புது நிகழ்வுகளாக விண்ணில் நடந்து வருகிறது.  விண்ணில் நடக்கும் வானியல் நிகழ்வுகளை பூமியில் இருந்து பார்ப்பது அலாதியான அனுபவத்தை தருவதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் தற்போது தொடங்கியுள்ள இந்த ஜூலை மாதமும் வானில் பல்வேறு அளப்பரிய நிகழ்வுகளை நாம் பார்க்க முடியும்.

    ஜூலை 5 - நிலவு இல்லாத நாள் [No Moon Day]

    இந்த நாளில் வானில் நிலவு தோன்றாமல் தூர கிரகங்களின் ஒளி நட்சத்திரங்களாக அதிகமாக பிரகாசித்து காண்போரை வசீகரிக்கும்.

    ஜூலை 6 - அப்ஹெலியன் [Aphelion]

    இந்த நாளில் பூமியும் சூரியனும் நீள் சுற்றுவட்டப்பாதையில் ஒன்றுக்கொன்று மிகவும் தொலைவில் இருக்கும். வருடத்துக்கு ஒரு முறை மட்டுமே இத்தனை அதிக தொலைவில் பூமியும் சூரியனும் இருக்கும். இதையே அப்ஹெலியன் நிகழ்வு என்கின்றனர்.

     

    ஜூலை 12 - மெர்குரி எலாங்கேஷன் [Mercury Elongation]

    மெர்குரி என்பது நமது சூரிய மண்டலத்தில் உள்ள சிறிய கோள்களில் ஒன்றாக உள்ளது. மேலும் மிகவும் உட்புறமாக உள்ள கிரகமாக உள்ளது. இதனால் பொதுவாகவ்வே பூமியிலிருந்து மெர்குரி கிரகம் நமக்கு புலனாவதில்லை. ஆனால் இந்த நாளில் மெர்க்குரி கிரகம் சூரியனிலிருந்து கிழக்குப்புறமாக அதிக தொலைவுக்கு செல்லும். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு இந்த நிகழ்வை கருவிகளின் உதவியுடன் நம்மால் வானில் கவனிக்க முடியும்.

     

    ஜூலை 21 - பக் நிலா [Buck Moon]

    இந்த நாளில் வானையே ஜொலிக்க செய்யும் அளவுக்கு முழு நிலவு தோன்றும். அதிக இடி இடிக்கும் மாதமாக ஜூலை இருப்பதால் இந்த நாளில் தோன்றும் நிலவுக்கு Thunder Moon என்றும் பெயர் உண்டு. மேலும் அறுவடைக் காலத்தில் தோன்றுவதால் இதற்கு ஹே நிலவு என்றும் பெயர் உண்டு. அதிகாலை 6.17 மணி அளவில் பக் நிலா தனது முழு பிரகாசத்தை வெளிப்படுத்தி மறையும்.

     

    ஜூலை 28& 29 - ஏரிகல் பொழிவு [ Delta Aquarids Meteor Shower]

    ஜுலை 28 அன்று இரவும், ஜுலை 29 அன்று காலையும் டெல்டா அக்வாரிட்ஸ் எனப்படும் ஏரிகல் பொழியும் நிகழ்வை விண்ணில் நம்மால் காண முடியும். இந்த எரிகல் பொழிவு ஜூலை மத்தியில் இருந்து ஆகஸ்ட் மத்தி வரையில் தொடர்ந்து நடக்கும். ஆனால் இந்த குறிப்பிட்ட இரண்டு தினங்களில் [ஜூலை 28& 29] உச்சபட்சமாக பொழிவு இருக்கும்.

     

    • வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும்.
    • அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது

    குண்டடம்

    குண்டடத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை அதிகாலையில் ஆடுகள், கோழிகள் விற்பனை சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு குண்டடம், காங்கயம், தாராபுரம், ஊதியூர், மடத்துக்குளம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவற்றை ஈரோடு, கோவை, திருப்பூர். பொள்ளாச்சி, கேரளா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

    இது குறித்து ஆடு வியாபாரி மகேந்திரன் கூறியதாவது:-

    கடந்த மாதங்களில் விறுவிறுப்பாக ஆடுகள் கோழிகள் விற்பனையானது. ஆனால் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி சாப்பிடுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் கடைகளில் இறைச்சி விற்பனை மந்தமாக உள்ளதால் வியாபாரிகள் குறைந்த அளவு எண்ணிக்கையில் ஆடு -கோழிகளை வாங்கிச்செல்கின்றனர். இம் மாதம் இறைச்சி கடை வியாபாரிகள் குறைந்த அளவே சந்தைக்கு வந்திருந்தனர்.

    இதனால் அதிகளவில் ஆடு -கோழிகள் வாங்க ஆர்வம் காட்டாததால் விலையில் கடும் வீழ்ச்சியடைந்தது. கடந்த வாரம் 10 கிலோ எடைகொண்ட ஆடு ரூ. 6ஆயிரம் வரை விற்பனையானது. இந்த வாரம 5 ஆயிரத்திற்கு விற்பனையானது. அதேபோல் கோழி கடந்த வாரம் ஒரு கிலோ ரூ. 300 கிலோ முதல் ரூ.350 வரை விற்பனையானது. இந்த வாரம் ரூ.300 வரை மட்டுமே விற்பனையானது.

    தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் விலை கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • அமராவதி ஆறு அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகளை ஆதாரமாக கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதிஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது.

    அத்துடன் அமராவதிஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாக கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீராதாரங்களில் சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக அமராவதி நிரம்பியது. சூழ்நிலைக்கு ஏற்ப உபரிநீரும் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அணை அதன் முழு கொள்ளளவில் நீடித்து வருகிறது. அணைக்கு ஏற்பட்டுள்ள நீர்வரத்தை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்தால் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக கூடுதலாக உபரி நீர் திறப்பதற்கு உண்டான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கை வைத்தால் அதன் பெயரில் கருத்துரு தயாரித்து அனுப்பப்பட்டு தண்ணீர் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றைய நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 88.46 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 676 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.அணையில் இருந்து வினாடிக்கு 483 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • ராமநாதபுரம் அருகே திருமணமான ஒரே மாதத்தில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • குடும்ப பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

    ராமநாதபுரம்

    கடலாடி அருகே கருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் கவுசல்யா என்பவருக்கும், அதே கிராமத்தை சேர்ந்த தங்கவேலுவுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்தநிலையில் கணவர்-மனைவி இருவரும் பனைக்குளம் கிராமத்தில் நடந்த அய்யனார்கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது கவுசல்யா குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டார். அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார். இதுகுறித்து உத்தரகோசமங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×