என் மலர்
நீங்கள் தேடியது "Month Award"
- சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா, பேட் கம்மின்ஸ், டான் பேட்டர்சன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
- 3 டெஸ்ட்டில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.
ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சில் சராசரியாக 14 புள்ளி 22 என்று அளவில் சராசரி வைத்திருந்த பும்ராவுக்கு இந்த விருது கிடைத்து இருக்கிறது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பும்ரா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியை பெரிய ஸ்கோர் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தினார். இது போன்று மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸ் 4 விக்கெட் வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தது. எனினும் மீண்டும் ஒரு முறை இந்திய அணியின் பேட்டிங் சொதப்பினால், 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.
இதன் மூலம் இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தால் அது மட்டும் இல்லாமல் உலக அளவில் சிறந்த பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றிருந்தார். இந்த தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 200 வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இதன் மூலம் இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய நான்காவது வீரர் என்ற பெருமை கிடைத்தது.
அது மட்டும் இல்லாமல் குறைந்த பந்துவீச்சு சராசரியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் பும்ராவுக்கு கிடைத்திருக்கிறது. இதன் காரணமாக தான் அவருக்கு சிறந்த வீரர்களுக்கான விருது கிடைத்திருக்கிறது. பும்ராவுக்கு கிடைத்த இந்த கௌரவத்தை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் பும்ரா இடம் பெற்றுள்ளார்.
- சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் இந்தியாவின் மந்தனா இடம் பெற்றுள்ளார்.
ஐ.சி.சி ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
சிறந்த வீரர்களுக்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் டேன் பீட்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதே போல சிறந்த வீராங்கனை விருதிற்கான பரிந்துரை பெயர்ப்பட்டியலில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த நோன்குலுலேகோ லபா, ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்ட், ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.