என் மலர்
நீங்கள் தேடியது "Monty Panesar"
- அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது.
- இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.
லண்டன்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:-
சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார்.
அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்.
ஒருவேளை ரோகித்தை இங்கிலாந்து அதிரடியாக விளையாடவிடாமல் வைத்திருந்தாலும் இந்தியா பிளான் பி வைத்து விளையாடுவார்கள். அது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அவர்களின் இளம் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும். இது தான் உங்களுடைய வெற்றிக்கான வழியாக இருக்கும்.
இவ்வாறு பனேசர் கூறினார்.
- அஸ்வின் மட்டும் இங்கிலாந்தில் இருந்திருந்தால் அவரை எப்போதும் ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள்.
- அஸ்வின் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக பந்து வீசுவார்.
சென்னை :
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் ஆறு விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அது மட்டும் இல்லாமல் பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன்மூலம் அதிக முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னேவை அஸ்வின் சமன் செய்திருக்கிறார். இதேபோன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது எட்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் அஸ்வினை விட ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் தான் சிறந்த வீரர் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மோன்டி பனேசர் விமர்சித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அஸ்வின் மட்டும் இங்கிலாந்தில் இருந்திருந்தால் அவரை எப்போதும் ஓய்வு பெற சொல்லி இருப்பார்கள். ஏனென்றால் இங்கிலாந்து அணி எப்போதுமே இளைஞர்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு கொடுப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் பரிசோதிக்கும் முறை இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை. என்னைக் கேட்டால் அஸ்வினை விட ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயான் தான் சிறந்த வீரர் என்று கூறுவேன்.
அஸ்வின் இந்தியாவில் மட்டும் தான் சிறப்பாக பந்து வீசுவார். அஸ்வின் பந்து வீசும் போது ஒரு பேட்ஸ்மேன் எவ்வாறு யோசிப்பார் என்பதை மட்டுமே கருத்தில் கொள்வார். பேட்ஸ்மேன்களின் மைனஸ் என்ன என்பதை தெரிந்து கொண்டு அதை பயன்படுத்தி விக்கெட் எடுப்பதில் அஸ்வின் வல்லவர். இதுதான் அஸ்வினுக்கு இருக்கும் மிகப்பெரிய பலம். அது மட்டுமில்லாமல் அஸ்வினுக்கு நன்றாக பேட்டிங் செய்யவும் வருகிறது. இதனால் தான் பேட்ஸ்மேன்கள் என்ன யோசிப்பார்கள் என்று அஸ்வினுக்கு தெரிகிறது என்று பனேசர் கூறியிருக்கிறார்.
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.
- யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும்.
- கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும்.
லண்டன்:
இந்திய அணி முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீப காலமாக ரன்களை குவிக்க திணறி வருகிறார். இதனால் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர் மான்டி பனேசர் கூறும்போது:-
டெண்டுல்கரிடம் கோலி பேசி ஆலோசனை பெற வேண்டும். அவரை கோலி மிகவும் மதிக்கிறார். அதே போல் யுவராஜ்சிங்குடன் கோலி பேச வேண்டும். அவர்கள் இருவரும் கோலிக்கு உதவ முடியும். கிரிக்கெட் விளையாட்டுக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் கோலி பேச வேண்டும் என்றார்.