என் மலர்
நீங்கள் தேடியது "More Plastic wastage"
- பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தடுப்பு நடவடி க்கைகள் தீவிரமாக எடுக்க ப்பட்டு வருகின்றன.
- மோயர் சதுக்கம் பகுதியில் வன த்துறை சோதனை சாவடி யில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருள்க ளுக்கு தடை விதிக்கப்ப ட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு தடுப்பு நடவடி க்கைகள் தீவிரமாக எடுக்க ப்பட்டு வருகின்றன. மலைப்பகுதிகளில் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் முதல் கண்ணாடி பாட்டி ல்கள் வரை திரும்பப் பெரும் நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் வீசிச்செல்லும் பிளாஸ்டிக் குப்பையால் வனவிலங்கு கள் பாதிக்கப்பட்டு வருகி ன்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு சோதனை சாவடியில் அதை பறிமுதல் செய்கின்றனர்.
வனத்துறை கட்டு ப்பாட்டில் உள்ள சுற்று லாத்தலமான மோயர் சதுக்கம் பகுதியில் வன த்துறை சோதனை சாவடி யில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு ள்ளது.
இப்பகுதியில் வன விலங்குகள் அதிகம் என்பதால் இவற்றை விலங்குகள் உண்டு பாதிப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டு ள்ளது.எனவே பறிமுதல் செய்யப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை உடனடியாக அப்புறப்ப டுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.