என் மலர்
முகப்பு » motorcycle sand smuggling
நீங்கள் தேடியது "motorcycle sand smuggling"
முசிறி அடுத்த வேளகாநத்தம் பகுதியில் திருட்டுத்தனமாக ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முசிறி:
முசிறி காவிரி ஆற்று பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் அலுவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முசிறி அடுத்த வேளகாநத்தம் பகுதியில் திருட்டுத்தனமாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி சென்ற முசிறி அடுத்த சேந்தமாங்குடியை சேர்ந்த சிவா என்பவரையும், முசிறி பெரியார் பாலம் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி சென்ற மணி என்பவரையும் வருவாய் துறையினர் பிடித்து முசிறி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சிவா, மணி ஆகிய இருவரும் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிள், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
×
X