என் மலர்
நீங்கள் தேடியது "Mouth Cancer"
- புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும்.
- தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.
வாய் வழி புற்றுநோயானது தொண்டைக்குள் உள்ளே இருக்கும் செல் அணுக்களில் காணப்படும் வீரியமிக்க நோய் தொற்று அல்லது புற்றுநோய் செல்கள் காரணமாக ஏற்படும் நோயாகும். இவை சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் இருப்பின் உயிர்க்கு ஆபத்தானதாகும்.
வாய் வழிபுற்றுநோய் அறிகுறிகள் பெரும்பாலும் முதிர்ந்த நிலையில் குறிப்பாக நோய் பரவும் நிலையிலேயே கண்டறியப்படுகின்றன. இவை சாதாரண தொண்டை அலர்ஜி அல்லது வாய் புண்கள் போல இருப்பது ஆகும்.
வாய் புற்றுநோய் இந்திய அளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோயை எளிதில் கண்டறிந்து தடுக்க முடியும் என்றாலும், பெரும்பாலும் முற்றிய நிலையில்தான் கண்டறியப்படுகிறது. இதன் விளைவாக இறப்பு அதிகரிக்கிறது. உதடுகள், நாக்கு, அன்னம், வாயின் தளம், ஈறுகளை இந்நோய் பாதிக்கிறது.
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் தோராயமாக 17 சதவீதம், பெண்களில் 10.5 சதவீதம் பேர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய அளவில் ஆண்டுதோறும் சுமார் 46 ஆயிரம் பேர் வாய் புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நோய் ஏற்பட புகையிலை பழக்கம் மிக முக்கிய காரணம் ஆகும். ஏறத்தாழ 47.9 சதவீதம் ஆண்கள், 20.3 சதவீதம் பெண்கள் பல்வேறு வடிவங்களில் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.
வயது வந்தவர்களில் 24.3 சதவீத ஆண்கள் மற்றும் 2.9 சதவீத பெண்கள் புகைக்கிறார்கள் என கூறப்படுகிறது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிடையே புகையிலை பயன்பாடு 6.9 முதல் 22.5 சதவீதம் வரை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வறுமை, பசி, இயலாமை மற்றும் மனச்சோர்வு போன்றவைக்காக, 10 வயது வரை உள்ள சிறுவர்கள் கூட புகையிலை, பீடி, சிகரெட் பழக்கத்துக்கு மாறி வருவதாகவும் உளவியல் நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
அறிகுறிகள்:
* வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற தொற்றுகள் 3 வாரங்களுக்கு மேல் தொண்டையில் இருப்பது.
* தொண்டை வறட்சியான நிலை ஒரு மாதங்களுக்கு மேல் நீடிப்பது.
* வாய், தொண்டையில் புணள் 3-ல் இருந்து 4 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து ஆறாமல் இருப்பது.
* தொண்டை குழு அல்லது வாயினுள் கட்டி அல்லது அசாதாரண கட்டி போன்ற அமைப்பு காணப்படுவது.
* காரணம் இன்றி பற்கள் வலுவிழந்து விழுவது.
* தொடர் தொண்டை வலியினால் உணவை விழுங்குவதில் பிரச்சனை.
* பேசுவதில் சிரமம்.
* உதடு, தொண்டை, நாக்கு காது, கழுத்து பகுதியில் வலி இருப்பின் அதனை கவனிக்காமல் இருக்க கூடாது. அதற்கான காரணங்களை உடனடியாக அறிந்து ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது அவசியம்.