search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mugurtha"

    • முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
    • அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்கள் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

    முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 7 மணிக்கு நடந்தது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலமும், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடை பெறுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வருகின்ற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகி றது. தொடர்ந்து 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    மேலும் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ×