என் மலர்
நீங்கள் தேடியது "mukkoodal"
- காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளை.
- முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
முக்கூடல்:
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செல்வ குமரேசன் (வயது 38).
இவர் நக்சல் தடுப்பு பிரிவில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று வேலை விஷயமாக மதுரையில் உள்ள நக்சல் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வடக்கு அரியநாயகிபுரம் ஊருக்குள் சென்றது. அங்கிருந்த செல்வகுமரேசன் வீட்டுக்குள் புகுந்த அந்த கும்பல் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை அரிவாளால் வெட்டியும், வீட்டு ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டது.
பின்னர் அரிவாளை வீட்டின் கதவு மேல் வீசிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் இருந்த செல்வ குமரேசன் குடும்பத்தினர், மதுரைக்கு சென்றிருந்த செல்வகுமரேசனிடம் செல்போனில் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக முக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று செல்வகுமரேசன் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தபோது, 3 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்து அட்டகாசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் ஹெல்மட் அணிந்திருந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்தது.
அந்த காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில், அட்டகாசத்தில் ஈடுபட்டவர்கள் சேரன்மகாதேவி அருகே உள்ள சங்கன்திரடு பகுதியை சேர்ந்த முப்புடாதி (வயது 28), அவரது நண்பர் முத்துக்குமார் (27) மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எதற்காக செல்வகுமரேசன் வீட்டில் புகுந்தனர் என்பது குறித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செல்வகுமரேசன் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். அப்போது முப்புடாதியும், முத்துக்குமாரும் அரிய நாயகிபுரம் காட்டுப்பகுதியில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு தகராறு செய்ததாகவும், அதனை அந்த வழியாக சென்ற செல்வகுமரேசன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அங்கு வந்த செல்வகுமரேசனின் உறவினர் ஒருவர், முப்புடாதியை தாக்கியுள்ளார். இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதத்தில் நேற்று இரவு முப்புடாதி தனது கூட்டாளிகளுடன் வந்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய முப்புடாதி மீது 2 கொலை வழக்குகளும், முத்துகுமார் மீது சில வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. இதனால் இவர்கள் பெயர் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் முப்புடாதி அவரது நண்பருடன் இணைந்து அரிவாளால் தாக்குவது, பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது உள்ளிட்ட சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் அடிப்படையில் முக்கூடல் போலீசார் 3 பேரையும் தேடி வருகின்றனர்.
- விழாவுக்கு சப்-கலெக்டர் ரிசாப் தலைமை தாங்கினார்.
- தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
முக்கூடல்:
முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் 75-வது சுதந்திர தின பவள விழாவில் சப்-கலெக்டர் ரிசாப் கலந்து கொண்டு, தலைமை தாங்கி முக்கூடல் அரியநாயகிபுரம் அணைக்கட்டு நெடுஞ்சாலை ஓரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில் தாய் வீடு தொண்டு நிறுவன நிர்வாகிகள் மகேஸ்வரன், ஆறுமுகம், கோமதி அம்மாள், அனிதா, சுதா, அருள் மற்றும் பொழில் தன்னார்வ இயக்கம், கோமதி அம்மாள் - கலாம் உதவும் கரங்கள் அறக்கட்டளை, டீரிம் டிவைனி பவுண்டேசன், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் தாய் வீடு தொண்டு நிறுவனத்தின் ஆதரவற்ற முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முக்கூடல் நகர வியாபாரிகள் சங்க தலைவர் பூமிபாலக பெருமாள், நாகராஜன், தன்னார்வலர்கள் ஆதிமூலம், பால்துரை, முக்கூடல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின், கிராம நிர்வாக அலுவலர் பொன்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
- ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
நெல்லை
முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் ஞானச்செல்வன்.இவரது மகன் ஜாக்சன் (வயது 21). இவர் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜாக்சன் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக முக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஜாக்சன் சமீபத்தில் நடந்த தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்து விட்டதாகவும், இதனை அவரது பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில நாட்களாக ஜாக்சன் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார்.இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.