என் மலர்
நீங்கள் தேடியது "Mukodal"
- முக்கூடல் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.
- மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.
முக்கூடல்:
முக்கூடல் அருகே பாப்பாக்குடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடக்கரை துலுக்கப்பட்டி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் அங்கு நின்று கொண்டிருந்த முக்கூடல் அருகே உள்ள மானாபர நல்லூர் வடக்கு தெருவை சேர்ந்த பழனிசாமி (வயது 35) என்பவரை பிடித்து விசாரித்தனர். தொடர்ந்து அவர் கையில் இருந்த பையை சோதனை செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், சட்டவிரோத விற்பனைக்காக மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார்கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 31 கிலோ புகையிலை பொருட்கள், 55 மதுபான பாட்டில்கள் உள்ளிட்ட வற்றை பறிமுதல் செய்தனர்.
- தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
- தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
வி.கே.புரம்:
நெல்லை மாவட்டம் அம்பை, முக்கூடல், வீரவநல்லூர் உள்பட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் பல்வேறு பகுதிகளில் குளங்களில் இருந்து உபரி நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும் தாமிரபரணி ஆற்றில் தற்போது சுமார் 50 ஆயிரம் கன அடி வரை வெள்ள நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் முக்கூடல் பகுதி தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள நீரேற்று நிலை யத்திற்கு அங்கு பணி யாற்றும் ஊழியர்களான ராஜரத்தினம், லோகராஜ், சங்கர சுப்பிரமணியன், சங்கர நாராயணன் ஆகிய 4 பேர் சென்றுள்ளனர். தொடர்ந்து ஆற்றில் வெள்ளம் அதிகரித்ததால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் நீரேற்று நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்குமார் தலைமையில், அம்பை தீயணைப்பு நிலைய அலுவலர் பலவேசம் மற்றும் சேரன்மகாதேவி தீயணைப்புத் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அவர்கள் கயிறு கட்டி, கடும் வெள்ளத்தில் நீரேற்று நிலையத்திற்குள் சென்று அங்கு சிக்கியிருந்த 4 பேரையும் அதே கயிறு மூலமாக பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.