என் மலர்
நீங்கள் தேடியது "multiple stab wounds"
- தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது.
- பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தை, ஒரு புண்ணை திறந்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருப்பது சரியா அல்லது மருந்து தடவி கட்டு கட்டி மூடி வைத்திருப்பது சரியா?

காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் ரணம் இவை எல்லாமே நமது உடலின் ஏதாவதொரு இடத்திலுள்ள தோலில் தான் ஏற்பட்டிருக்கும். தோல் நமது மொத்த உடலையும் மூடியிருக்கும் ஒரு மிகப்பெரிய உறுப்பு ஆகும். தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது. மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் ஆகும்.
மேலோட்டமான காயம் அதாவது வெறும் மேல்தோலில் மட்டும் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டி அதனால் ஏற்பட்ட காயம் என்றால் அதை திறந்து விடுவது தான் நல்லது. அதே நேரம் ஒரு ஆழமான காயம் என்றால் மருந்து வைத்து கட்டுகட்டி மூடி வைப்பதுதான் நல்லது.

சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பதுதான் சிறந்தது. சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறிவிடும்.
ஆனால் அந்த காயம் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை திறந்து வைத்து சிகிச்சை அளித்தால் சீக்கிரம் ஆறிவிடும்.

கடுமையான தீப்புண் முதலியவைகளை கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி விடுவதுதான் மிகவும் நல்லது.
மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும். தூசி அழுக்கு படாது. கிருமிகள் உள்ளே நுழையாது.
காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு கட்டி மூடி வைப்பதுதான் சிறந்தது.
- இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார்
- டிரான் மீது சுமார் 107 முறை கத்திக்குத்து விழுந்தது
வாஷிங்டன் பல்கலைகழகத்தில் படித்து வந்தவர் 21 வயதான ஏஞ்சலினா டிரான்.
இவர் தனது தாயுடனும், தாயின் இரண்டாம் கணவர் கியெப் கெய்ன் சவ் ஆகியோருடன் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பீகான் ஹில் பகுதியில் வசித்து வந்தார். கியெப், கடந்த வருடம் வரை வியட்னாமில் வாழ்ந்து, சென்ற வருடம்தான் அமெரிக்காவிற்கு வந்திருந்தார்.
இவரது தாய்க்கும், மாற்றாந்தந்தைக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம்.
இரண்டாம் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற அவரது தாய் முயற்சித்தார். இதனால் பொருளிழப்பு ஏற்படும் என அஞ்சிய அவரது இரண்டாவது கணவர் சமீபத்தில், ஒரு நாள் இரவு டிரானின் தாயுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றியதில் கியெப், டிரானின் தாயின் முகத்திலும் தலையிலும் சுமார் 15 முறை கைகளாலேயே குத்தினார். அப்போது தனது படுக்கையறையில் உறங்கி கொண்டிருந்த டிரான், சத்தம் கேட்டு எழுந்து வந்து, உடனடியாக தாயாரை காக்க முயன்றார்.
தாயார் தாக்கப்படுவதை தடுக்க கியெப்பின் கைகளை டிரான் பிடித்து கொள்ள, உடனே டிரானின் தாயார் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து கியெப்பின் கோபம் டிரான் மீது திரும்பியது. இதனால் கியெப் ஒரு பெரிய கத்தியை எடுத்து டிரான் நெஞ்சில் சரமாரியாக பல முறை குத்தினார்.
தனது உடை முழுவதும் ரத்த கறை இருந்ததால், இதற்கு பிறகு கியெப் உடைகளை மாற்றி கொண்டார். பிறகு ஒரு கத்தியால் டிரானை மீண்டும் தாக்கினார். டிரான் மீது 107 கத்திக்குத்துகள் விழுந்தன. கத்தி குத்துக்கு ஆளான டிரான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே டிரானின் தாய், தான் ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து அமெரிக்காவின் அவசர உதவி எண்ணை அழைத்தார். காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்தனர். கத்தியுடன் நின்றிருந்த கியெப் காவலர்களின் மிரட்டலுக்கு அஞ்சி கத்தியை கீழே போட்டதும் அவரை உடனடியாக கைது செய்தனர். அவர் கிங் கவுன்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
டிரானின் தாயாரையும் கொல்ல வீடு முழுவதும் அவரை தேடி வந்த கியெப்பின் நோக்கம், காவல்துறையினரின் வருகையால் தடைபட்டு, டிரான் தாயாரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
நன்றாக படிக்க கூடியவரான ஏஞ்சலினா டிரான் ஒரு சமூக பொறுப்புள்ள மாணவி என்றும், பிறருக்கு உதவிகள் செய்யும் நல்லெண்ணம் கொண்டவர் என்றும் கூறும் அவரை அறிந்தவர்கள், அவருக்கு நேர்ந்த கோர முடிவு குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.