search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbal Local Train"

    • தெரு நாய் மும்பையில் உள்ள போரிவிலி பகுதியில் இருந்து பயணிகள் ரெயிலில் ஏறுகிறது.
    • இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    மனிதர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மெட்ரோ அல்லது பயணிகள் ரெயிலில் வாடிக்கையாக செல்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மும்பையில் தெரு நாய் ஒன்று தினமும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த தெரு நாய் மும்பையில் உள்ள போரிவிலி பகுதியில் இருந்து பயணிகள் ரெயிலில் ஏறுகிறது. பின்னர் அந்தேரியில் இறங்கி செல்கிறது. ரெயில் சென்று கொண்டிருக்கும் போது நாய் வெளியே பார்த்து கொண்டே இருப்பது போன்று காட்சிகள் உள்ளது. இதுவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அதில் ஒரு பயனர், இது அவரது உலகம், நாங்கள் அதில் ஒரு பகுதி என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், அவர்கள் சுதந்திரமாக சுற்றித்திரிவதை பார்க்க விரும்புகிறேன், இலவச ரெயில் சவாரி செய்து நிம்மதியாக இருக்கட்டும் என கூறி உள்ளார்.

    ×