என் மலர்
நீங்கள் தேடியது "Municipality Chairman"
- பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
- இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம்.
சுரண்டை:
சுரண்டை நகராட்சி 26-வது வார்டு பகுதியில் நடந்த நகர சபா விழாவிற்கு வார்டு கவுன்சிலரும், தி.மு.க. நகர செயலாளருமான ஜெயபாலன் தலைமை தாங்கினார். இதில் சுரண்டை நகராட்சி தலைவர் வள்ளி முருகன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். இதனால் சுகாதார பணியாளர்களின் ஆரோக்கியம் மேம்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளதால் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதனால் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். 26-வது வார்டு பகுதி மக்களுக்கு மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதற்கு வசதியாக 2 வண்ணங்களில் குப்பை கூடை வழங்கிய நகர் மன்ற உறுப்பினர் ஜெயபாலனுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
நிகழ்ச்சியில் இளைஞர் அணி கோமதி நாயகம், வேலுச்சாமி, வைகை கணேசன், மாரியப்பன், செல்வகுமார், முருகன், முத்து சுப்பிரமணியன் மற்றும் பரப்புரையாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
- செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை பஸ் நிலையம் அருகில் சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் முழுஉருவச்சிலை கடந்த 1986-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த சிலை பராமரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதையறிந்த செங்கோட்டை நகராட்சி தலைவர் ராமலெட்சுமி தனது சொந்த பணம் ரூ.50ஆயிரம் செலவில் வாஞ்சிநாதன் சிலைக்கு வர்ணம் பூச ஏற்பாடு செய்தார்.அதைத்தொடர்ந்து வண்ணம் பூசும் பணிகள் மற்றும் சீரமைப்பு முழுவீச்சில் நடந்து முடிந்தது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வெண்கல சிலையை நகராட்சி தலைவர் ராமலட்சுமி திறந்து வைத்தார். இதில் நகராட்சி துணைத்தலைவர் நவநீதகிருஷ்ணன், உறுப்பினர்கள் முத்துப்பாண்டி பேபி ரெசவு பாத்திமா, மேரிஅந்தோணிராஜ், இந்துமதி சக்திவேல், செல்வகுமாரி முத்தையா, முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள் திலகர், ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.