என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "murders"

    • திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.
    • தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

    திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது.

    அதாவது ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் 4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொடூரக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து வினா எழுப்பும் போதெல்லாம் தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது.

    2021-ம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அந்த ஆண்டில் 1686, 2022-ம் ஆண்டில் 1690, 2023-ம் ஆண்டில் 1681, 2024-ம் ஆண்டில் 1540 என கடந்த 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன. முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

    முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ம் ஆண்டில் 1603, 2017-ம் ஆண்டில் 1560, 2018-ம் ஆண்டில் 1569, 2019-ம் ஆண்டில் 1745 என 6477 படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட திமுக ஆட்சியில் 120 படுகொலைகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.

    சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு 30 படுகொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன. விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளை விட, திமுக ஆட்சியின் முதல் 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 2% கொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.

    திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.

    தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும்.

    கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரை படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான் முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது.

    கொலைகளை தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும் தடுக்க முடியாமல் திணறி வருகிறது.

    இதற்கு காரணம் திமுக அரசின் செயல்திறனற்ற தன்மை தான். தமிழக அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருநாவலூர் அருகே உள்ள மட்டிகை கிராமத்தில் செம்மண் திருடப்படுவதாக உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு மகேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் சாமிநாதன் மற்றும் போலீசார் மட்டிகை கிராமத்திற்கு விரைந்தனர். அப்போது போலீசார் வருவதை கண்ட மர்நபர்கள் செம்மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி., லாரி போன்றவைகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், லாரியின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மேலச்செவல் மற்றும் கோபாலசமுத்திரம் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலைகளை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இன்று மேலச்செவலில் போலீசார்- பொதுமக்கள் நல்லுறவு மற்றும் சமாதான கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சுபக்குமார், ராஜா ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் அன்னபூரணி கலந்து கொண்டு பேசினார். இதில் சேரன்மகாதேவி தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாதி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் வலியுறுத்தி பேசினர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் கொடூரமான முறையில் தனது காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    ஹைதராபாத்:

    நாடு முழுவதும் காதல் தொடர்பான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக அரசும் பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறது.

    இந்நிலையில், ஐதராபாத் பகுதியில் உள்ள ஒரு விடுதியில், தனது காதலியை கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், வங்கி தேர்வுகளுக்காக பயின்று வரும் அந்த பெண், காதலனுக்கு போதிய வருமானம் இல்லை என்பதால் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த காதலன், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். #manmurderslover #lovekills
    ×