search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthamil Council Festival"

    • அமைச்சர் எ.வ.வேலு இன்று தொடங்கி வைக்கிறார்
    • 3 நாட்கள் நடக்கிறது

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி முத்தமிழ் மன்றம் சார்பில் 30வது ஆண்டு முத்தமிழ் இலக்கிய பெருவிழா இன்று (17ம் தேதி) மாலை தொடங்கி நாளை மறுதினம்(19ம் தேதி) வரை 3 நாட்கள் சிறப்பாக நடக்கிறது.

    இன்று மாலை தொடக்க விழாவில் பொதுப்பணி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகிக்கிறார். ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி, நகர கூட்டுறவு வங்கி தலைவர் சாரதிகுமார் முன்னிலை வகிக்கின்றனர்.

    இதில் வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் கலந்து கொண்டு முத்தமிழ்த் தேர்வடம் என்ற தலைப்பில் பேசுகிறார். தொடர்ந்து மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்ற தலைப்பில் சண்முகவடிவேல், இலக்கியம் எதற்காக... என்ற தலைப்பில் சுகி.சிவம், மேடையில் வீசும் மெல்லி சைப் பூந்தமிழ் என்ற தலைப்பில் கணேஷ்கிருபா ஆகியோர் கலந்துக் கொண்டு பேசுகின்றனர்.

    நாளை(18ம் தேதி) மனிதம் மாண்புறப் பெரிதும் தேவை என்ற தலைப்பில் நெறியாளராக ராமசந்திரன் சுழலும் சொல்லரங்கம் நடக்கிறது. இதில் அறிவு அன்பே என்ற தலைப்பில் பாரதி, அன்பு அல்ல அறமே என்ற தலைப்பில் எழிலரசி, அறம் அல்ல அறிவே தலைப்பில் சுல்தானாபர்வீன், தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு எத்திக்கும் தித்திக்கும் தலைப்பில் ஜெகத்கஸ்பர் பேசுகிறார்.

    மாலை 3மணிக்கு முத்தமிழ் மன்றம் நடத்தியே பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் விருது வழங்குதல், நூல்கள் வெளியீடு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசுகிறார். இதில் நகராட்சி சேர்மன் உமாபாய் உட்பட பலர் கலந்துக் கொள்கின்றனர்.

    தொடர்ந்து வாழ்க்கை ஒரு வரம் என்ற தலைப்பில் வாசுகி சீனிவாசகம், காதல் செய்வீர் உலகத்தீரே தலைப்பில் தமிழருவிமணியன், இரவு 8 மணியளவில் பூமிதனில் யாங்ணுமே பிறந்ததில்லை தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் நெறியாளராக ஞானசம்பந்தன் பேசுகிறார். மேலும், கம்பனைப்போல் தலைப்பில் ராதாகிருஷ்ணன், வள்ளூவர்போல் தலைப்பில் ராமலிங்கம், இளங்கோவைப்போல் தலைப்பில் சிவக்குமார் ஆகியோர் பேசுகின்றனர்.

    நாளை மறுதினம் (18ம் தேதி) காலை உயர்வற உயர்நலம் உடையவன் தலைப்பில் எம்ஜிஆர் மருத்துவப்பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதாசேஷய்யன் பேசுகிறார். பிற்பகல் 12 மணிக்கு நெஞ்சிருக்கும் வரை நினைவிருப்பவை என்ற தலைப்பில் நடுவராக ராமலிங்கம் தலைமையில் கவியரங்கம் நடக்கிறது.

    இதில் மரபுக்கவிதைகளே தலைப்பில் நெல்லை ஜெயந்தா, திரைக்கவிதைகளே தலைப்பில் சிவகுருநாதன், புதுக்கவிதைகளே தலைப்பில் தங்கம் மூர்த்தி பேசுகின்றனர். மாலை 3 மணிக்கு கவிக்கோ-லிங்கூ-நான் தலைப்பில் திரைப்பட இயக்குனர் லிங்குசாமி பேசுகிறார்.

    தொடர்ந்து இல்லாததொன்றும் இல்லாத பால் தலைப்பில் சென்னை இஎஸ்ஐ மருத்துவ துறை இயக்குனர் ராஜமூர்த்தியும், தொடர்ந்து பாட்டுப்பாடவா பாடம் சொல்லவா தலைப்பில் ரமணன் இசையரங்கம் நடக்கிறது, உலகம் உண்ண உண் தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதி பேசுகின்றனர். இரவு 7.30 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. காலத்தை வென்று தமிழ் இலக்கியம் தழைத்து நிற்பது தலைப்பில் நடுவராக வாசுகிமேனாகரன் பேசுகிறார்.

    இதில் மகிழ்வூட்டும் செழுமைகளாலே தலைப்பில் அருள்பிரகாசம், தமிழ் திருமால், அன்பு, பண்பாட்டு விழுமியங்களாலே தலைப்பில் ரேவதி கிருபாகரன், கார்த்திகா, இந்திராஜெயசந்திரன் ஆகியோர் பேசுகின்றனர்.

    ×