என் மலர்
நீங்கள் தேடியது "Mylapore"
- கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
- மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடர்பாக,
சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா வரும் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 12-ம் தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாரு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, காளியப்பா சந்திப்பு, காமராஜ் சாலை, ஸ்ரீனிவாச அவென்யு, ஆர்.கே.மடம் சாலை வழியாக கிரீன்வேஸ் சந்திப்பை அடையலாம்.
அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, திருவேங்கடம் தெரு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.
வருகிற 5-ம் தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 9-ம் தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 10-ம் தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும் மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.
வருகிற 5 மற்றும் ஏப்ரல் 9,10-ம் தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, மேற்கு மாடவீதி மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-
கிழக்கு அபிராமபுரத்தில் இருந்து வரும் பக்தர்களின் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 30 கார்)
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 15 கார்)
செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் மந்தவெளி வீதியில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (400 இருசக்கர வாகனங்கள் மற்றும் 80 கார்)
காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. (100 இருசக்கர வாகனங்கள் மற்றும் 20 கார்)
வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
- பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள்.
மயிலாப்பூர்...
சென்னையின் அழகிய நகரம் மட்டுமல்ல ஆன்மீக நகரம் ஆகும்.
புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், ஆதிகேசவப் பெருமாள்கோவில், மாதவப் பெருமாள்கோவில், மற்றும் சாந்தோம் தேவாலயம் ஆகிய முக்கிய கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.
மக்கள் நெரிசலில் சிக்கித் திணறும் இந்த பகுதியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 4 மாட வீதிகள் மயிலாப்பூருக்கு தனி அழகை கொடுத்தது. இந்த அழகை கெடுக்கும் வகையில் 4 மாட வீதிகளுமே ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. கோவிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கிறார்கள். பலர் காரிலேயே மாட வீதிகளை சுற்றி விட்டு கார்களை நிறுத்த முடியாமல் திரும்பி விடுகிறார்கள்.
தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முறைகேடுகள்தான் அரங்கேறியதை தவிர ஆக்கிரமிப்புகள் அகன்றபாடில்லை. மயிலாப்பூரில் அந்த காலத்தில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்த இடம். அவர்கள் நீராடிய குளம்தான் இன்றைய சித்திரை குளம் என்ற சித்தர் குளமாகும்.
பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள். ஆனால் இப்போத குளம் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. படிக்கட்டுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து நொறுங்கி கிடக்கின்றன.
தண்ணீரும் மாசுபட்டு பயன்படுத்த முயாத நிலையிலேயே உள்ளது.
ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் மட்டுமல்ல சுவாமி கூட வீதி உலா செல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது மயிலாப்பூர்.
படித்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான் என்கிறார்கள் அந்த பகுதிவாசிகள்.
- மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
- கோயிலில் வைக்கப்பட்ட ஓலைகளில் தீப்பொறி விழுந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம்.
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சாய்பாபா கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. கோயிலில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை அடுத்து, கோயிலை சுற்றி ஓலைகள் கட்டப்பட்டு இருந்தது. ஓலையில் தீப்பொறி பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து ஏற்பட்டு இருப்பதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மேலும் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
- மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.
சென்னை:
சென்னை மயிலாப்பூர் கவிக்கோ அரங்கில் 'இறுதி நாயகர்கள்' புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழ்நாட்டில் தமிழர்கள் அதிகமாக நம்பிக்கை வைத்து திருச்செந்தூர் கோவிலுக்கு செல்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் முருகன்தான் நம்முடைய தெய்வம் என்று வந்து கொண்டிருக்கிறார்கள்.
வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு விஷயம். நீங்கள் வழிபாடுகளை மதத்தை, கடவுளை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்பது வேறு ஒரு விசயம்.

ஆனால் அதைத் தாண்டி அந்த கடவுள் யார்? அந்த கடவுள் உருவம் எது? என்பதை ஒவ்வொருவரும் முடிவு செய்ய வேண்டும். அது தனிப்பட்ட ஒரு விசயம். அந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. கடவுள் வழிபாட்டை திணிக்கக் கூடாது.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டமும் பெயரளவில் மட்டும்தான் உள்ளது. மக்களின் வாழ்வை அந்த திட்டங்கள் என்றும் மாற்றாது.

மக்களுக்கு போய் சேரக் கூடிய எல்லா திட்டங்களையும் இன்று அழித்து விட்டு வேறு ஒரு விசயத்தை மக்களுடைய வாழ்க்கைக்கு சம்பந்தம் இல்லாமல் மக்களுடைய வாழ்க்கையை எந்தவிதத்திலும் மாற்ற முடியாத சில விசயங்களை எடுத்து வைத்துக் கொண்டு அதை இந்த தேசமாக தேசியமாக மக்களின் அடையாளமாக மாற்ற நினைத்து கொண்டிருக்க கூடியவர்களை நாம் மாற்ற முடியும். அவர்களுடைய இடத்தை வேறு ஒன்றாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை:
மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது82). இவர் அப்பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் ராமமூர்த்தியிடம் லிப்ட் தருகிறேன் என்று கூறினார். இதனால் அவர் அந்த வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது ராமமூர்த்தியை கீழே இறக்கி விட்டபோது அவரிடம் இருந்த பையை பறித்து கொண்டு வாலிபர் தப்பினார். அந்த பையில் ரூ.14 ஆயிரம், 4 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன.
பின்னர் அந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர் எடுத்தார்.
இதுகுறித்து ராமமூர்த்தி மயிலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.