search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மயிலாப்பூரில் மீண்டும் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதி
    X

    மயிலாப்பூரில் மீண்டும் சாலை ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் கடும் அவதி

    • தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது.
    • பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள்.

    மயிலாப்பூர்...

    சென்னையின் அழகிய நகரம் மட்டுமல்ல ஆன்மீக நகரம் ஆகும்.

    புகழ் பெற்ற கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில், ஆதிகேசவப் பெருமாள்கோவில், மாதவப் பெருமாள்கோவில், மற்றும் சாந்தோம் தேவாலயம் ஆகிய முக்கிய கோவில்கள் அமைந்துள்ளன. இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

    மக்கள் நெரிசலில் சிக்கித் திணறும் இந்த பகுதியில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 4 மாட வீதிகள் மயிலாப்பூருக்கு தனி அழகை கொடுத்தது. இந்த அழகை கெடுக்கும் வகையில் 4 மாட வீதிகளுமே ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளன. கோவிலுக்கு வாகனங்களில் வருபவர்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் தவிக்கிறார்கள். பலர் காரிலேயே மாட வீதிகளை சுற்றி விட்டு கார்களை நிறுத்த முடியாமல் திரும்பி விடுகிறார்கள்.

    தெற்கு மாட வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தபோது அதை அகற்றி விட்டு சித்திரை குளக்கரையில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த கடைகளை கட்டி வாடகைக்கு விடுவது போன்ற முறைகேடுகள்தான் அரங்கேறியதை தவிர ஆக்கிரமிப்புகள் அகன்றபாடில்லை. மயிலாப்பூரில் அந்த காலத்தில் சித்தர்கள் அதிகம் வாழ்ந்த இடம். அவர்கள் நீராடிய குளம்தான் இன்றைய சித்திரை குளம் என்ற சித்தர் குளமாகும்.

    பழமை வாய்ந்த இந்த குளத்து நீரை புனிதமாக கருதினார்கள். ஆனால் இப்போத குளம் பராமரிப்பு இல்லாமல் சிதலமடைந்து காணப்படுகிறது. படிக்கட்டுகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து நொறுங்கி கிடக்கின்றன.

    தண்ணீரும் மாசுபட்டு பயன்படுத்த முயாத நிலையிலேயே உள்ளது.

    ஆக்கிரமிப்பு காரணமாக மக்கள் மட்டுமல்ல சுவாமி கூட வீதி உலா செல்ல முடியாமல் தவிக்கும் நிலைக்கு உள்ளாகி இருக்கிறது மயிலாப்பூர்.

    படித்தவர்கள், முக்கிய பிரமுகர்கள் நிறைந்த பகுதி. இந்த பகுதியை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு சிறப்பாக பராமரிக்க வேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதைதான் என்கிறார்கள் அந்த பகுதிவாசிகள்.

    Next Story
    ×