என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagar"

    • குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுள் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று.
    • இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவிலில், ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபாடு செய்தனர்.

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களுள் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று.

    இந்த கோவிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு சிறப்பு வாய்ந்ததாகும்.

    ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜருக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், நாகதோஷம் நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம்.

    ஆவணி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிகின்றனர்.

    உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தோரும், கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வாகனங்களில் குடும்பத்துடன் வந்து வழிபடுகின்றனர்.

    இதனால், அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் நீண்ட நேரம் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது.

    கோவிலுக்கு வெளியேயும் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    இதனால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் வருகின்றனர்.

    அவர்கள், அங்குள்ள நாகர் சிலைகளுக்கு பால்ஊற்றியும், மஞ்சள்பொடி தூவியும் வழிபடுகின்றனர்.

    • டி.என்.பாளையம் அடுத்த வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • இதனையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி வனப்பகுதியையொட்டிய வினோபா நகர் ஆவின் பால் கொள்முதல் நிலையம் அருகே ஒரு நாட்டு துப்பாக்கி கிடப்பதாக அப்பகுதியினர் இன்று காலை பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே பங்களாப்புதூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஒற்றை குழல் நாட்டுத் துப்பாக்கியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்.

    துப்பாக்கி கிடந்தது வனப்பகுதியையொட்டிய பகுதி என்பதால் யாரோ வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி விட்டு விட்டு சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.

    வழக்கமாக அப்பகுதியில் ரோந்து செல்லும் வனத்துறையினர் இது போன்று துப்பாக்கி கிடப்பதை எப்படி கவனிக்க தவறினர் என்றும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×