என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » namakkal news
நீங்கள் தேடியது "Namakkal news"
குமாரபாளையத்தில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் வேல்முருகன்(வயது 40). இவர் அப்பகுதியில் காளான் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடை முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தார். சிறிது நேரத்தில் வந்து பார்த்த போது அதை காணவில்லை.
இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்ததின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் வாகனத்தை திருடியவர், வாகனத்தை திரும்ப ஒப்படைக்கும் எண்ணத்தில் காவேரி நகர் பகுதியில் வந்தார்.
இதையடுத்து வேல்முருகனின் நண்பர்கள் அந்த நபரை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் வாகனத்தை திருடிய நபர் குளத்துக்காடு பகுதியை சேர்ந்த முருகன்(52) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்து, திருடப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
பரமத்தி வேலூர் பகுதிகளில் தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், கபிலர்மலை, பரமத்தி, கந்தம்பாளையம், மணியனூர், நல்லூர், சோழசிராமணி, பெருங்குறிஞ்சி, ஆனங்கூர், பிலிக்கல்பாளையம், அண்ணாநகர், செல்லப்பம்பாளையம், கபிலக் குறிச்சி, கவுண்டம் பாளையம், சிறுநல்லி கோவில், கொத்தமங்கலம், சுள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர்.
தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் தேங்காயைப் பறித்து மட்டைகளை அகற்றிவிட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள தேங்காய் பருப்புகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதே போல் தேங்காய் பருப்பு எடுத்த பின் தேங்காய் சிரட்டை கைகளை குவித்து வைத்து அப்பகுதி களுக்கு வரும் வியாபாரிகளுக்கு கிலோ கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய தேங்காய் சிரட்டைகளை தேங்காய்சிரட்டை மூலம் கரி தயார் செய்பவர்களுக்கும், தேங்காய் சிரட்டையை அரைத்து பவுடர் தயாரிக்கும் மில்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். பலர் தேங்காய் சிரட்டைகள் மூலம் உண்டியல், பொம்மைகள் என பல்வேறு வகையான பொருட்களை தயார் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 8-க்கு விற்பனையானது. இந்த வாரம் ஒரு கிலோ தேங்காய் சிரட்டை ரூ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது தேங்காய் சிரட்டை விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலகவுண்டம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.
பரமத்திவேலூர்,:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே எறையம்பட்டி ஆதிதிராவிடர் தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 55), கூலித்தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர் .இதில் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. திருமணம் ஆகாத 2 மகள்கள் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் பழனிசாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இவர் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த நிலையில் வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் பழனிசாமி நேற்று வீட்டிலிருந்த மருந்தை எடுத்து குடித்து விட்டார். தனது மகளுக்கு போன் மூலம் அவரே தகவல் சொன்னதால் மகள்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அதன் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார்.இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100யை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு, ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை அதிகரித்து விற்றது. பின்னர் படிப்படியாக குறைந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்தது. விலை வீழ்ச்சியால் செடியில் பறிக்காமல் விடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
இந்நிலையில் தக்காளி விளைச்சல் குறைவு காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து காரணமாக விலை அதிகரித்துள்ளது.
தரமான ஒரு கிலோ தக்காளி பழம், தற்போதைய நிலையில் சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டிலேயே 80 ரூபாயினை கடந்து விட்டது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
வைகாசி மாதம் பிறந்து விட்டதால் அத்தனை வகை காய்கறிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனால் சராசரியாக எல்லா காய்கறிகளின் விலைகளும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெட்ரோல், டீசல் கலால் வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
அகில இந்தியா மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், தென்மண்டல லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச் செயலாளருமான சண்முகப்பா பரமத்தி–வேலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தால் தான் லாரி தொழில் இலாபகரமான நடத்த முடியும்.
டீசல், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காததால் அண்டை மாநிலங்களுக்கு சென்று சரக்கு வாகனங்கள் எரிபொருளை பிடித்து வருவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. கலாவதியான சுங்சாவடிகளை அகற்ற வேண்டும்.
பழைய மற்றும் புதிய வாகனங்களுக்கு ஆயுள் வரி 6 சதவீகிதம் மட்டுமே வசூலித்தால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் டீசல் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உட்பட தென்மாநிலங்களில் விலை குறைக்கபடாதது அதிர்ச்சியை அளிக்கிறது.
சரக்கு வாகனங்கள் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதன் மூலம் ஒளிவு மறைவின்றி சரக்கு எடுத்து செல்லப்படுவதால் ஆர்.டி.ஒ செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும்.கொரோனா காலத்திலும் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.
லாரி உரிமையாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம். இது குறித்து போக்குவரத்து அமைச்சர் தமிழக முதல்வரிடம் எடுத்து கூறி சுமூக தீர்வை ஏன்படுத்தி தருவார் என எதிர்பார்க்கிறோம்.
மத்திய,மாநில அரசுகள் வரும் காலங்களில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் குமாரபாளையத்தில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பகுதியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.
வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரபாளையம் பகுதியில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் வீசி வருகிறது. இதனால் மதிய நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோடைகாலம் தொடங்கி விட்டாலே மக்கள் வெயி–லின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக உடலுக்கு இதமான குளிர்ச்சி தரும் கனிகளான தர்ப்பூசணி, நுங்கு, இளநீர், மற்றும் வெள்ளரிக்காய், மோர் போன்றவற்றை நாடத் தொடங்குவது வழக்கம்.
அதன்படி குமார–பாளையம் நகரின் பிரதான வீதிகளில் தர்பூசணி, இளநீர், நுங்கு போன்றவை மலை போல குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களின் முதல் தேர்வாக நுங்கு உள்ளது. நுங்கு சுவையானது மட்டுமல்லாமல் அதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து இருக்கிறது.
வெயில் காலத்தில் உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தைக் கொண்டுள்ளது நுங்கு. அதுமட்டுமின்றி உடலின் கனிமச்சத்து மற்றும் சர்க்கரையின் அளவை சீராக வைத்து, சுறுசுறுப்புடன் செயல்படு–வதற்கு பெரிதும் உதவியாக நுங்கு இருக்கிறது. நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன.
இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவ–தோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. இதனால் தற்போது நுங்கு வியாபாரம் சற்று அதிகரித்து உள்ளது. சாலையோரத்தில் சிறு சிறு கடைகள் அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். நுங்கு 10 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் திருத்தேர் மற்றும் பூ மிதி திருவிழா கம்பம் நடுதலுடன் கடந்த 8-ந் தேதி தொடங்கியது.
விழாவை தொடர்ந்து 14-ந் தேதி வரை தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
15-ந் தேதி மறு காப்பு கட்டுதலும்,16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம்,காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன் தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவர் டாக்டர் சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலை சேர்ந்தது.
இன்று மாலை பூமிதி விழாவும், நாளை புதன்கிழமை பொங்கல், மாவிளக்கு பூஜையும்,நாளை மறுநாள் வியாழக்கிழமை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், 27-ந் தேதி வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி சனிக்கிழமை இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்திருவிழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.
மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிப்பாளையம்
பள்ளிப்பாளையம் காவிரி ஆர்.எஸ். புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 39). ஈரோட்டில் இருசக்கர வாகன மெக்கானிக் கடை வைத்திருந்தார்.
இவருடைய மனைவி மேகலா (35). இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் ஒரு மகன் இறந்து விட்டான். இதனால் நடராஜன் மன வேதனையில் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் ஈரோட்டில் உள்ள மெக்கானிக் கடையை காலி செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மது குடித்து வந்தார். இதற்கிடையே கடந்த 17-ந் தேதி மேகலா வேலை விஷயமாக ஈரோடுக்கு சென்று விட்டார்.
அப்போது வீட்டில் இருந்த நடராஜன் விஷம் குடித்து விட்டார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வட்டார வேளாண்மை துறை சார்பில் நடந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட தொடக்க விழாவில் விவசாயிகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேல்சாத்தம்பூர், ஆவாரங்காட்டுப்புதூர் சமுதாய கூடம், நடந்தை, புளியம்பட்டி சமுதாய கூடம், ராமதேவம் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் கோதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தினை தொடங்கி வைத்து, நேரலையில் உரையாற்றினார்.
மேல்சாத்தம்பூர், நடந்தை, ராமதேவம், கோதூர் வருவாய் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை சார்பில் மானியத்துடன் கூடிய தென்னங் கன்று, கைத்தெளிப்பான், விசைத் தெளிப்பான், பயிர் வகைகளும், தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி விதைகள், பாரம்பரிய தோட்டக்கலை இடுபொருட்கள், பழச் செடிகள், மரச் செடிகள், நெகிழிக்கூடை, பிளாஸ்டிக் டிரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் இடுபொருட்கள் விநியோக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அட்மா தலைவர் தனராசு, பரமத்தி பேரூராட்சித் தலைவர் மணி ,மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 1 மாதம் நடக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி-110-ன் கீழ் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, மார்ச் மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமிழகத்திலுள்ள சுமார் 37 இலட்சம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம்” நடத்தப்பட்டது.
இதில், நாமக்கல் மாவட்டத்தில் 16201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் அறிவிப்பினை முனைந்து செயல்படுத்த முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற–வுள்ளது.
எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தை (அங்கன்வாடி மையத்தை) தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரத்தினை அறிந்துகொண்டு, வருங்கால சந்ததியினர்களை வளமானவர் களாக மாற்ற, ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கிட பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்று முதல் 1 மாத காலத்திற்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு தங்கள் குழந்தைகளுடன் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படு–கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் நலத்திட்ட வழங்கும் விழாவில் பரமத்திவேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் இருக்கூர், பிலிக்கல்பாளையம் மற்றும் அ.குன்னத்தூர் ஆகிய கிராமங்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்களை வழங்கினார்கள்.
அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு தங்கள் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் உழவன் செயலியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு எடுத்து கூறினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான், கைத்தெளிப்பான், பாசிப்பயறு விதைப்பைகள், காய்கறி விதைகள், மண்புழு உரம், நெகிழி கூடை, பிளாஸ்டிக் டிரம் வேளாண்மை விளைபொருள் கொள்கலன்கள், நெகிழி காய்கறி பெட்டிகள் மானிய விலையில் வழங்கப்பட்டது.
பள்ளிப்பாளையம் அருகே ஓடும் பஸ்சில் கண்டக்டர் மயங்கி விழுந்து பலியானார்.
பள்ளிப்பாளையம்:
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் லோகுசாமி (வயது 58). இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
பள்ளிப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.பி. காலனியில் ஈரோடு செல்லும் வழித்தடத்தில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த அரசு பஸ்சில் லோகுசாமி நேற்று பணியில் இருந்தார். பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து கொண்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, பஸ்சிலேயே மயங்கி விழுந்தார்.
அவர் உயிருக்கு போராடிக் கொணடிருந்தார். இதை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து டிரைவர், உடனடியாக பஸ்சை வேகமாக வழியில் எங்கும் நிறுத்தாமல் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையை நோக்கி ஓட்டிச் சென்று சிகிச்சைக்காக அவரை சேர்த்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் லோகுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். மேலும் இது பற்றி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X