என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict: alcohol"
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
- அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.