search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "name board"

    • பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது.
    • பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெற வேண்டும் என பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

    கர்நாடகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவில் ஆங்கில பெயர்ப்பலகை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதை கண்டித்தும், பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி எழுத்துக்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும் சிலநாட்களுக்கு முன் போராட்டம் நடந்தது. அப்போது சில வன்முறை சம்பவங்கள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சி தலைநகரில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக வளாகங்கள், தொழில்நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்திலும் பிப்ரவரி 28-ம் தேதிக்குள் 60 சதவீத கன்னடம் இடம்பெறச் செய்யவேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

    கர்நாடக அமைச்சரவையிலும் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அந்த மசோதா அனுப்பபட்டது. இதை முதலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து அனுமதி பெற்று ஒப்புதலுடன் அனுப்புங்கள் எனக்கூறி ஜனவரி 30-ம் தேதி திருப்பி அனுப்பினார்.

    இதையடுத்து, தற்போது நடந்து வரும் கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த மசோதா முதன்முதலாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது .

    இந்நிலையில், இன்று சட்ட மேலவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் ஆளுநரும் இதற்கு ஒப்புதல் தர உள்ளார்.

    இதனால் கர்நாடகாவில் கடைகள், வணிக வளாகம் மற்றும் தொழில்நிறுவனங்கள் அனைத்திலும் 60 சதவீதம் கன்னட எழுத்துக்கள் கட்டாயம் என்ற சட்டம் விரைவில் அமல்படுத்தபட உள்ளது.

    • விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது.
    • வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் பேசியதாவது:- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் பெயரை வைத்துள்ளோம். ஆனால் பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது. அதனைமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல தலைவர் நிதி தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கான்கிரீட் சாலை பழுதடைந்து உள்ளது .அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.

    அதேபோல் நான்காவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது .எனவே அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 41, 51, 53 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது .எனவே விடுபட்டுள்ள அந்த பகுதிகளிலும் உடனடியாக பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும் என்றார்.

    • ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் கலெக்டரிடம் மனு அளித்தார்.
    • பெயா், முகவரி கொண்ட பெயா் பலகை வைக்க வேண்டும்.

    திருப்பூர் :

    ஆம் ஆத்மி கட்சியின் திருப்பூா் மாவட்டத் தலைவா் எஸ்.சுந்தரபாண்டியன் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி பொது தகவல் அலுவலா் மற்றும் மேல்முறையீட்டு அலுவலரின் பெயா், முகவரி கொண்ட பெயா் பலகை வைக்க வேண்டும்.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் பொதுதகவல் அலுவலா், மேல் முறையீட்டு அலுவலா் விபரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
    • கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை சார்பாக தெற்கு மாவட்ட தலைவர் ஜி.கே.சங்கர் தலைமையில் பல்லடம் தொகுதி பூமலூர் பகுதியில் விநாயகர் கோவில் வீதி மற்றும் கோகுல் கார்டன் பகுதிகளில் கிளை மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.தொடர்ந்து கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

     விழாவில் தெற்கு மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துக்குமார், தெற்கு மாவட்ட ஆலோசகர் முருகானந்தம், தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     இவ்விழாவில் மங்கலம் பகுதி தலைவர் பாலசுப்பிரமணியன், பகுதிச் செயலாளர் சம்சுதீன், துணை தலைவர் விக்னேஷ், பொருளாளர் நவீன், இளைஞரணி தலைவர் மணிகண்டன், இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பூர் மேற்கு பகுதி தலைவர் விஜய், பல்லடம் வடக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 75 வது சுதந்திர விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தியாகிகளை கவுரவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது.
    • தற்காலிகமாக தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    நாட்டின் 75 வது சுதந்திர விழா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, தியாகிகளை கவுரவிக்க, மத்திய அரசு திட்டமிட்டது.நாடு முழுதும் 75 ெரயில் நிலையங்களை தேர்ந்தெடுத்து சுதந்திர போராட்ட வீரர்களுக்காக 18 முதல், 23-ந் தேதி வரை ஒரு வாரம் நிகழ்ச்சிநடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

    இப்பட்டியலில் சேலம் கோட்டத்தில் திருப்பூர் ரெயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, திருப்பூர் குமரன் உள்ளிட்ட தியாகிகளை கவுரவப்படுத்த நாடகம், தேசபக்தி பாடல்கள் உள்ளிட்ட கலைநிகழ்ச்சி நடந்தது. குமரன் வாழ்க்கை வரலாறு குறித்த கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.நிகழ்ச்சி தொடங்கிய நாளில் திருப்பூர் ரெயில் நிலையம் முகப்பில், சுதந்திர போராட்ட தியாகி திருப்பூர் குமரனை கவுரப்படுத்தும் வகையில் தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.தற்போது அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு விட்டது.

    இது குறித்து ரெயில் நிலைய அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் குமரன் குறித்த நிகழ்ச்சி நடக்கும் போது விழிப்புணர்வுக்காக தற்காலிகமாக தியாகி திருப்பூர் குமரன் ரெயில் நிலையம் என அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டது. மைக்கிலும் அறிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்று விட்டதால், விளம்பர பலகையை அகற்றி விட்டோம் என்றனர்.

    படேல் சிலை திறப்பு விழா வளாகத்தில் அமைக்கப்பட்ட பிழையான தமிழ் பெயர் பலகை திருத்தி அமைக்கப்படும் என்று குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. #SardarPatel #UnityStatue
    ஆமதாபாத்:

    குஜராத் மாநிலம் நர்மதா நதிக்கரையில் சர்தார் வல்லபாய் படேலின் 182 மீட்டர் உயர உலகின் மிகப்பெரிய சிலையை கடந்த 31-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இதையொட்டி சிலை திறப்பு விழா வளாகத்தில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்பது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி, தமிழ் என பல்வேறு மொழிகளில் அப்படியே எழுதப்பட்டு இருந்தது. ஆனால் தமிழில் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என பிழையாக எழுதப்பட்டு இருந்தது.

    ஒற்றுமையின் சிலை என மொழி பெயர்க்காமல் ஆங்கில வார்த்தை தமிழில் அப்படியே பிழையுடன் எழுதப்பட்டது. தமிழ் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து அறிந்த அமைச்சர் க.பாண்டியராஜன் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றார். உடனே அவர்கள் தமிழ் எழுத்தை மறைத்துவிட்டார்கள். பிரதமர் விழா என்பதால் உடனடியாக புதிய பெயர் பலகை வைக்க நேரம் இல்லாமல் போய்விட்டது என தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறும்போது, சிலை அமைப்பு பணி குழுவில் தமிழர்களும் இடம் பெற்று இருந்தனர். இருந்தும் தவறு நடந்து இருப்பது துரதிர்ஷ்ட வசமானது என்றார்.

    இதற்கு குஜராத் மாநில தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ‘ஸ்டாட்சு ஆப் யூனிட்டி’ என்ற ஆங்கில வாசகம் 10 மொழிகளில் இடம் பெற்று இருந்தது. தமிழ் வாசகம் தவறானது என்று சில பார்வையாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததும் உடனடியாக அதை அகற்ற உத்தரவிடப்பட்டது. இது சரிசெய்யப்பட்டு விரைவில் மீண்டும் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.   #SardarPatel #UnityStatue

    ×