என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nava Kailaya Temples"

    • நவ கைலாயங்களுக்கு நாளை மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    • இரவு 8 மணி வரை இந்த பஸ்களுக்கு முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும்.

    நெல்லை:

    நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மார்கழி மாத பிறப்பையொட்டி நவ கைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி நாளை ( ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 25-ந் தேதி, ஜனவரி 1, 8-ந் தேதிகளில் இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த நாட்களில் பாளை பஸ் நிலையத்தில் இருந்து காலை 7 மணிக்கு சிறப்பு பஸ்கள் புறப்பட்டு பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர் (செங்காணி), முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ராஜபதி, சேர்ந்தபூ மங்கலம் ஆகிய நவ கைலாயங்களுக்கு சென்றடையும்.

    இந்த பஸ்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான கட்டணம் ரூ.600 ஆகும். ஆன்மீக சுற்றுலா செல்லும் பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்று நெல்லை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மார்கழி மாதத்தை யொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
    • மார்கழி மாதத்தின் முதல் வாரமான கடந்த 18-ந் தேதி 4 பஸ்கள் இயக்கப்பட்டது. 2-வது வாரமாக இன்று கூடுதலாக 2 பஸ்கள் என மொத்தம் 6 சிறப்பு பஸ்கள் நவ கைலாய கோவில்களுக்கு இயக்கப்பட்டது.

    நெல்லை:

    மார்கழி மாதத்தை யொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நவ கைலாய கோவில்களுக்கு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழ மைகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மார்கழி மாதத்தின் முதல் வாரமான கடந்த 18-ந் தேதி 4 பஸ்கள் இயக்கப்பட்டது. 2-வது வாரமாக இன்று கூடுதலாக 2 பஸ்கள் என மொத்தம் 6 சிறப்பு பஸ்கள் நவ கைலாய கோவில்களுக்கு இயக்கப்பட்டது.

    நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு பஸ் பாபநாசம், சேரன்மகா தேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, புன்னக்காயல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்கிறது.

    இதில் பேருந்திற்கு 52 பேர் வீதம் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புறப்பட்டனர். இதற்கு கட்டணமாக ஒரு பக்தரிடம் ரூ.600 வசூலிக்கப்படுகிறது.

    கடந்த வாரம் தரிசனம் சென்ற பக்தர்கள் கூறும்போது, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நவ கைலாய கோவில்களுக்கு செல்ல சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஆனால் மதிய உணவு சரியான முறையில் கிடைக்கவில்லை. எனவே போக்குவரத்து கழகம் சார்பில் முறையான ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதைத்தொடர்ந்து இன்று பக்தர்கள் மதிய உணவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து வருகிற 1-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் நவ கைலாயங்களுக்கு சிறப்பு பஸ்கள் செல்கிறது.

    ×