search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "navathirupathi"

    • 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம்.
    • ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார்.

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 81 வது திவ்ய தேசம். நவதிருப்பதிகளில் முதலாவதாகவும், நவகிரக ஸ்தலங்களில் சூரிய ஸ்தலமாகவும் இந்த ஸ்ரீ கள்ளபிரான் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ கள்ளபிரான் சுவாமி சந்திர விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன், கையில் தண்டத்துடன், ஆதி சேஷனைக் குடையாகக் மார்பில் மஹா லக்ஷ்மியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

    பிரகாரத்தில் வைகுந்தவல்லித் தாயார் சன்னதி உள்ளது. மேலும் நரசிம்மர் சன்னிதி, கோதண்ட ராமர் சன்னிதியும் உள்ளன. சித்திரை மற்றும் ஐப்பசி மாதங்களில், பௌர்ணமி நாளன்று, சூரியனின் கதிர்கள் பெருமாளின் பாதத்தில் படும்படி, இதற்கு ஏற்றாற் போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், மேரு வடிவ பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. இத்தலம் சூரிய தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். ஆதித்ய ஹ்ருதயம் சேவிக்க அருமையான பலன் உண்டு.

    தல வரலாறு:

    முன்பு ஒரு சமயம் சத்யலோகத்தில் பிரளயம் ஏற்பட்டது. அப்போது அயன் ஆழ்ந்த நித்திரையில் இருந்தார். அதையறிந்த கோமுகசுரன், அவரிடமிருந்து வேதங்களை அபகரித்து சென்றான். துயில் நீங்கி எழுந்த பிரம்மன் அதற்காக வருந்தி, அதனை அவனிடமிருந்து மீட்கும் பொருட்டு மகாவிஷ்ணுவைக் குறித்து தவம் செய்ய எண்ணி, தன் கையில் இருந்த தண்டத்தை ஒரு பிரம்மாச்சாரியாக மாற்றி "பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் தவம் புரிய ஒரு இடத்தை பார்த்து வா" என்று அனுப்பினார்.

    அவனும் நதியின் இரு கரையிலும் பார்த்து விட்டு இறுதியாக திருக்கோளுருக்கு அருகில் உள்ள ஜயந்திபுரிக்கு வந்தான். அங்கு ஒரு மோகினியைக் கண்டு மோகித்து அவளுடன் காலம் கழித்து நான்முகன் கட்டளையை மறந்தான்.

    இதையறிந்த சதுர்முகன் தன் கையிலிருந்த கெண்டியை ஓர் பெண்ணாக்கி " பெண்ணே! தவம் இயற்ற தாமிரபரணி நதிக்கரையில் ஒரு நல்ல இடம் பார்த்து வா" என்று அனுப்பினார். அவளும் வெகு நாள் பூவுலகில் சுற்றி சோலைகள் நிறைந்த இந்த பரமபாவனமான இடமே தவத்திற்குரியது என்று பிரம்மனிடம் தெரிவித்தாள்.

    பிரம்மனும் இங்குவந்து கடும் தவம் செய்ய, திருமால் அதற்கு இரங்கி சதுர்முகனுக்கு நேரில் காட்சி கொடுத்து, கோமுகாசுரனை முடித்து அவனிடமிருந்த வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்தார்.

    பிரம்மனும் "அகல் விசும்பும் நிலனும் இருளார் வினைகெட செங்கோல் நடாத்துவீர்" எப்படி வைகுந்தத்திலிருந்து இங்கு எழுந்தருளி சேவை சாதித்தீரோ அவ்வண்ணமே இங்கு எப்பொழுதும் சேவை சாதித்து அடியார்களின் "செடியாய வல்வினைகளை தீர்த்து அருள் புரிய வேண்டும்" இத்திருப்பதியும் ஸ்ரீ வைகுண்டம் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்ய, பெருமாளும் அவ்வாறே இங்கு கோயில் கொண்டார்.

    பிரம்மனும் தனது கெண்டியால் தாமிரபரணி தீர்த்தத்தை எடுத்து பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்ததாலும், நதிக்கரையில் கலசத்தை ஸ்தாபித்ததாலும், இத்தீர்த்தம் " கலச தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. பிரம்மன் வைகுண்ட நாதருக்கு சைத்ர உற்சவம் நடத்தி பின் சத்திய லோகம் சென்றார்.

    இத்தலத்தில் காலதூஷகன் என்ற கள்வன் ஒருவன் இருந்தான். அவன் திருடச்செல்லும் போது வைகுந்த நாதரிடம், தேவா! நான் எவ்விடத்தில் திருடச்சென்றாலும் ஒருவரும் அறியாவண்ணம் திருடிவர வேண்டும்.

    அவ்வாறு திருடிய பணத்தில் பாதியை உமக்கு காணிக்கையாகத் தருவேன் என்று வணங்கிச் செல்வான். குறுகிய காலத்தில் ஏராளமான செல்வத்தை கொள்ளை அடித்தான், தான் கூறியது போலவே அதில் பாதியை பெருமாளுக்கு காணிக்கையாக்கி வந்தான்.

    ஒரு நாள் அரசன் அரண்மனையில் திருடும் போது அவனது சில சகாக்கள் அரச சேவகர்களிடம் மாட்டிக்கொண்டனர். அவர்கள் அரச தண்டனைக்கு பயந்து காலதூஷகனை காட்டிக்கொடுத்து விடுவதாக கூற அவனும் பகவானை சரணடைந்து துதி செய்ய, கருணைக் கடலான கார்முகில் வண்ணரும் வயது முதிர்ந்த வேடத்தில் வந்து அப்பா நீ அஞ்ச வேண்டாம் தஞ்சமென்றவரை ஆதரிப்பது என் கடமை என்றார்.

    பிறகு பகவான் கால்தூஷகனாக வடிவெடுத்து அரண்மனைக்கு செல்ல வழியில் திருடர்கள் இவரை நோக்கி இவனே எங்கள் தலைவன் என்று கூற சேவகர்கள் அவரை அரண்மனைக்கு அழைத்து சென்று அரசன் முன்னர் நிறுத்தினர்.

    மன்னனும் நீ யார்? நீ இருப்பது எவ்விடம்? எதற்காக அரண்மனையில் புகுந்து கொள்ளையடித்தாய்? என்று வினவினான். அது கண்ட வைகுந்தநாதனாக இருந்து சோரநாதனான, காலதூஷகனான பெருமாள் அரசே! என் பெயர் கள்ளர் பிரான், ஸ்ரீவைகுண்டம் எனது இருப்பிடம், என் பிழைப்புக்காக உன் பணம் முழுவதையும் திருடினேன். உன் குற்றத்தை நீ தெரிந்து கொள்ளவில்லை பணத்திற்கு பங்காளிகள் நால்வர். அவர்கள் தர்மம், அக்னி, திருடன், ராஜா. இவற்றில் முந்தியது தருமம், தருமம் செய்யப்படாத செல்வம் கள்வனாகிய என்னால் அபகரிக்கப்பட்டது. எனவே இனி தர்மம் செய்வாய் என்றார்.

    அது கேட்ட அரசனும் சிங்காதனத்தில் இருந்து எழுந்து நமக்கு நற்புத்தி புகட்டியவர் பகவானே என்று தீர்மானித்து வைகுந்த நாதா! கள்ளர் பிரானே! இன்று முதல் தாங்கள் சோரநாதன் (கள்ளர் பிரான்) என்ற திருநாமத்துடன் எழுந்தருளியிருத்தல் வேண்டும் என்று விண்ணப்பித்தான். அது முதல் உற்சவர் கள்ளர்பிரான் என்று வழிபடப்படுகின்றார்.

    சித்திரை பெருந்திருவிழாவின் போது நம்மாழ்வார், பொலிந்து நின்ற பெருமாளுடன் ஸ்ரீவைகுண்டம் எழுந்தருளுவார். பெருமாளை மங்களாசாசனம் செய்தபின் அன்ன வாகனத்தில் எழுந்தருளும் சடகோபருக்கு கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், வரகுண மங்கை எம் இடர் கடிவான், திருப்புளிங்குடி காய்சினவேந்தன் ஆகிய நான்கு பெருமாள்களும் கருட வாகனத்தில் சேவை சாதிக்கின்றனர்.

    • திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது.
    • இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி,மதுரகவி ஆழ்வார் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.

    தென்திருப்பேரை:

    நவதிருப்பதி தலங்களில் 8-வது தலமான திருக்கோளூர் வைத்தமாநிதி கோவிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றம் நடந்தது. நேற்று 5-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 7.30 மணிக்கு திருமஞ்சனம். 8 மணிக்கு உற்சவர் வைத்தமாநிதி மாடவீதி புறப்பாடு நடந்தது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம், பூர்ணாகுதி திருவாராதனம், சாத்துமுறை நடந்தது. பின்னர் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

    மாலை 5 மணிக்கு சாயரட்சை, 5.30 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி மற்றும் மதுரகவி ஆழ்வார் இருவரும் வாகன குறட்டிற்கு வந்து அலங்காரம் நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சுவாமி வைத்தமாநிதி கருட வாகனத்திலும், மதுரகவி ஆழ்வார் அன்னவாகனத்திலும் மாட வீதி, ரதவீதி புறப்பாடு நடந்தது.

    நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் ரகு, பாலாஜி, சீனிவாசன், சுந்தரம், ஸ்தலத்தார் திருவாய்மொழி பிள்ளை ஸ்ரீதரன் ஸ்வாமி சடகோபன் ஸ்வாமி, ஆத்தான் கீழத்திருமாளிகை சுவாமி, ராமானுஜன், நிர்வாக அதிகாரி அஜித், தக்கார் கோவில் மணிகண்டன், ஆய்வாளர் லோகநாயகி, முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன.
    பெருமாளை திருப்பதி சென்று தரிசிப்பதற்கு ஒப்பானதாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது பெருமாள் தலங்கள் அமைந்துள்ளன. நவக்கிரகத் தலங்களாகவும் பெருமை பெற்ற இந்த ஆலயங்களை, பெருமாளுக்கு உகந்த ஏகாதசி நாளில் சென்று வழிபடுவது அனைத்து நலன்களையும் நல்கும்.

    ஆழ்வார்களில் பெரும் சிறப்பு பெற்ற நம்மாழ்வாரால் பாடப்பட்ட பெருமையும் இந்த நவதிருப்பதிகளுக்கு உண்டு. இந்தப் பாசுரங்கள் திருவாய்மொழியில் இடம் பெற்றுள்ளது.

    ×