என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Nawaz Ghani MP"
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு அமையும் என்று நவாஸ் கனி எம்.பி. கூறினார்.
- நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை
விருதுநகர் வடக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கூட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் இப்ராஹிம் ஷா தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சையது ராஜா முகமது, நகரத் தலைவர் முகமது அபூபக்கர் முன்னிலை வகித்தனர். அருப்புக்கோட்டை தொகுதி செயலாளர் முகமது சம்சுதீன் வரவேற்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முகமது அபூபக்கர் வாழ்த்து பேசினார். இதில் மாநில துணை தலைவர் நவாஸ் கனி எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
சிறுபான்மை மக்களின் அரணாக தி.மு.க. அரசு உள்ளது. மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றம் கண்டித்து இருக்கிறது. உச்ச நீதிமன்றம் தனியாக ஒரு குழுவை நியமித்திருக்கிறது என்று சொன்னால் மாநில அரசு இன்றைக்கு கலைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
மாநில காவல் துறையும் ராணுவமும், பா.ஜ.க. கட்டுப்பாட்டில் இருந்தும் மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை. சிறுபான்மை யினருக்கு பாதுகாப்பு இல்லை வரும் 2024 நாடாளு மன்ற தேர்தலில் மதசார்பற்ற அரசு அமைய இந்திய அளவில் வலுவான கூட்டணி உருவாகி இருக்கிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உறுது ணையாக இருந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மதச்சார்பற்ற அரசு இந்தியாவில் அமைவது உறுதி.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மாவட்ட துணை அமைப்பாளர் சர்தார் நகர்மன்ற உறுப்பினர்கள் அகமது யாசிர் அப்துல் ரகுமான் மற்றும் பொதுக்குழு புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.